ரசிக்கலாம் சிரிக்கலாம்!

Image

* பத்து பேரை வைத்து ஒரு சின்ன தொழிற்சாலையை ஒருவர் நடத்தினார். பத்து பேரும் படு சோம்பேறிகள். இவர்களை எப்படியாவது வேலை பார்க்க வைக்கவேண்டுமே என்பதற்காக ஒரு ஐடியா செய்தார்.

‘இன்னைக்கு சோம்பேறியா இருக்கிறவங்க செய்யற மாதிரி ஈஸியான வேலை ஒண்ணு இருக்கு. உங்க பத்து பேர்ல சோம்பேறியா இருக்கிறவங்க கை தூங்குங்க. அவங்களுக்கு இந்த வேலைய தர்றேன்’ என்று சொன்னார்.
ஒன்பது பேர் கையை தூக்கினார்கள். ஒருவர் மட்டும் கையை தூக்காமல் அப்படியே நின்றார். ‘ஏன் நீங்க மட்டும் கையை தூக்கல?’ என்றார்.
அந்த நபர் சொன்னார், ‘கையை தூக்குறதுக்கே சோம்பலா இருக்கு!’

Image

* ஜானுக்கு காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பது பெரிய பிரச்னை. அதனால் ஆபிசுக்கு லேட்டாக போவதே வழக்கமாகி விட்டது. ஒருநாள் முதலாளிக்குக் கடுங்கோபம். ’நாளையில இருந்து சரியான நேரத்துக்கு வரலைன்னா, வேலையை விட்டுத் தூக்கிருவேன்’ என்று மிரட்டல் விடுத்தார். உடனே டாக்டரிடம் பிரச்னையைச் சொல்லி, ’சீக்கிரமா முழிக்கறதுக்கு மருந்து கொடுங்க’ என்று வாங்கிப் போனான் ஜான்.
நன்றாகத் தூங்கி எழுந்து, ரிலாக்சாகக் கிளம்பி சரியான நேரத்துக்கு ஆபிசுக்குப் போய் விட்டான். சந்தோஷமாக முதலாளியிடம் சொன்னான், ’பாஸ்… டாக்டர் கொடுத்த மாத்திரை நல்லா வேலை செய்யுது!’ என்று.
உடனே முதலாளி கேட்டார் – ’நேத்து ஏன் ஆபிசுக்கு வரலை?’

Image

* அன்றைக்கு முதலாளி ரொம்பவும் சந்தோஷமாக இருந்தார். எல்லா ஊழியர்களையும் அழைத்து ஜோக் சொல்ல ஆரம்பித்து விட்டார்.
ஒரே ஒரு பெண் தவிர, எல்லோரும் ரசித்துச் சிரித்தார்கள். அந்தப் பெண்ணிடம் முதலாளி கேட்டார்… ’உனக்கு நகைச்சுவை உணர்வே கிடையாதா?’
’எதுக்குச் சிரிக்கணும்? நான்தான் வெள்ளிக்கிழமையோட வேலையை விடப் போறேனே’ என்றாள் அந்தப் பெண்!

Image

* முதலாளிக்கு வந்த எஸ்.எம்.எஸ்.
நான் இன்றைக்கு ஆபிஸ் வரமாட்டேன். நான் சரியா வேலை செய்யலைன்னு, வேலையை விட்டுத் துரத்தினாரே… அந்த பழைய முதலாளியை அடி பின்ன போறேன்!

Image

* மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு ’உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்’ என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்!
உடனே கேஷியர் முந்திக்கொண்டு, ‘நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்’ என்கிறார். பூதமும் ’அவ்வாறே நடக்கட்டும்’ என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.
அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்… ‘அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்’ என்றார். அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.
கடைசியாக மேனேஜர். ‘நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?’ என்றது பூதம். அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர், ‘ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!’

Image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s