ஒரு கோப்பைத் தேநீர்

vintage-tea-cup-tina-marie-rothwell
“சூடா குடுத்தா குடியா முழுகிடும்?”
கொஞ்சம் ஆறிய தேநீருக்காக
கொதிக்கக் கொதிக்கக் கொட்டிய
உன் வார்த்தைகள்
காதோரம் கிடக்கும் கழிவுகளாக…
தொடர்ந்து…..
அரக்க பரக்கக்  காய்கறிகள் நறுக்கியபடி நானும்
ஆசுவாசமாய் செய்தித்தாள் புரட்டியபடி நீயும்…
சூடாய்க் குடிக்கிற சுகமறிவேன் என்றாலும்
மீந்த பாத்திரங்கள் தேய்ப்பதிலும்
உலையில் அரிசி இடும் அவசரத்திலும்
எடுத்துவந்து தருவதற்கு
இயலாமல் மறந்தேன்…
சொன்னதும் எடுத்துப்போயிருந்தால்
சூடாய்க் குடித்திருக்கலாம் நீ…
நமக்கான வேலைகளுடன்
நம் குழந்தைகளுக்கான வேலைகளுடன்
நானும்
உனக்கான வேலைகளுடன்
தொலைக்காட்சி ரிமோட் உடன்
நீயும்
தினம் தினம் திருவிளையாடல்தான்…
உன்னைப்பிடி என்னைப்பிடி என்று
ஓடி ஓடி
ஒருவழியாய் முடித்து
அலுவலகம் கிளம்பும் அவசரத்தில்
எதேச்சையாக என் பார்வையில் படும்
மேசையின்மேல்
அதிகாலையில் எனக்காக நான் தயாரித்து
குடிக்க மறந்த கோப்பைத் தேநீர்!
– ஹேமா அருள்
painting credit:Tina Marie Rothwell
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s