அகலிகம்

ஏனென்று புரியவில்லை அப்போது உனக்கு

எனது திடீர் ஆவேசத்தில்

திணறிப் போயிருப்பாய்

குளியல் அறையில்…

வாளியில் மிதந்த பூக்களை

வாரி அடித்தேன்

காலில் மிதிபட்டது உன் கைரேகை

எரிக்க நினைத்த எனது வெறுப்புப்  பார்வையில்

கருத்துப் போனதுன்  காமுகம்

தலை கவிழ்ந்து நகர்ந்தாய்

எனக்கானவனின் பயணமோ

எப்போதும் என் அகத்துக்கு வெளியில்

அயலான்போல்

மெல்ல மெல்ல …

சாபம் மீறியது  தாபம்

இந்திர தனுசுவின் இளமொட்டு அம்புகள்

ஈக்களாய் மொய்க்கும் அகலிகை தேகம்

அன்பொழுகும் பார்வைக்காக

ஏங்கியதென் அணுகாப் பருவம்

மார்பின் நடுவில் நசுங்கும் மச்ச மலரினை

பயமும் பரபரப்புமாய்ப் பறிக்க நுழைந்த

உன் அரூப விரல்களை

அனுமதிக்கத் தொடங்கியது ஆழ்மனம்

காம வேட்கையின்  களப்பலி தவிர்க்க

ஒளிய இடமின்றி

எத்தனை இரவுக்  காடுகள்!

கட்டுக் காவலை வெட்டி முறித்து

சேலைத் தலைப்பைச்  சரியவிட்டு

கண்கள்  செருக…கைகள் நடுங்க

தனித்திருந்த உன்னிடம்

அணைப்பை யாசித்து அருகில் வந்தேன்

நீயோ

விருட்டென நழுவி விரைந்தாய்

ஏனென்று புரியவில்லை இப்போதும் எனக்கு.

******

இன்னும்

கவுதமத் தீட்டுக்கும் இந்திர வேட்டைக்கும்  இடையில்

அடைந்து கிடந்து அல்லலுறவோ

அகலிகம்?

– அம்சவேணி

Image

Painting Credit: paolomaggis

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s