திருத்தி எழுதலாமா?

Image

‘திருமணம் செய்து கொள்கிறேன் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, ஒரு பெண்ணை பாலியல் உறவு கொள்வதும் பாலியல் பலாத்காரம்தான்’ என்ற அழுத்தம் திருத்தமான கருத்தைச் சொல்லியிருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம்.

ஓர் ஆண் அவளைக் காதலிப்பதாகச் சொல்கிறான். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளிக்கிறான். அவளோடு உறவு கொள்கிறான். நாட்கள் நகர்கின்றன. என்ன காரணமோ தெரியவில்லை, அவளைத் தட்டிக் கழிக்கிறான். அந்தப் பெண் அவன் மீது வழக்குத் தொடுக்கிறாள். அவன் பதறிப் போய் திரும்ப வருகிறான். அவளைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறான்.

இருவருக்கும் ஒரு பிப்ரவரி மாதத்தில், காதலர் தினம் முடிந்த பத்து நாட்கள் கழித்துத் திருமணம் நடக்கிறது. அது நடந்த சில நாட்களிலேயே அந்தப் பெண் மீது அடக்குமுறையும் உடல்ரீதியான வன்முறையும் அவனால் தொடரப்படுகிறது. எல்லாம் எதற்காக? அவள் அவனை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்பதற்காக. அவள் மறுபடியும் நீதிமன்றப் படிகளில் ஏறுகிறாள். இது கதை அல்ல… உண்மைச் சம்பவம்!

இந்த வழக்கில், கணவர் அபிஷேக் ஜெயினின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம். கூடவே, கணவன் திருமணத்துக்கு முன் அந்தப் பெண்ணோடு கொண்ட உறவு பாலியல் பலாத்காரம்தான் என்று அடித்துச் சொல்லியிருக்கிறது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுகந்தியிடம் இது பற்றிப் பேசினோம்…

Image

‘‘இதுக்கு முன்னாடியே சில தீர்ப்புகள் இதே போல வெளியாகியிருக்கு. பொதுவா, ஒரு பெண்ணைத் திருமணம் செஞ்சுக்கறேன்னு பொய் வாக்குறுதி கொடுத்து, ஏமாத்தி பாலியல்ரீதியா உறவு கொள்வதை பலாத்கார வழக்கில்தான் சேர்க்கணும். அப்படித்தான் பதிவு செய்யப்படணும். உண்மையில அப்படி நடக்கறதில்லை. இது மாதிரி பல வழக்குகள் திரிக்கப்பட்டு, வெறும் மோசடி வழக்கா (Cheating Case) மாற்றப்பட்டுடுது. இதுல பெண்கள் நிலைமைதான் கவலைப்பட வேண்டிய விஷயம். எஃப்.ஐ.ஆர். போடப்பட்டு, வழக்கு நீதிமன்றத்துக்கே போகுதுன்னு வச்சுக்குவோம். பாதிக்கப்பட்ட பெண், சம்பந்தப்பட்ட ஆண் தன்னோட உறவு வச்சுகிட்டதை நிரூபிக்கணும். அதுல பெண்களுக்கு சிரமங்கள் இருக்கு. இதையெல்லாம் ஆதாரம் வச்சுகிட்டா செய்ய முடியும்?

இப்படி பாதிக்கப்படுற பெண்கள் தமிழகத்தின் எல்லா மாவட்டங்கள்லயும் இருக்காங்க. காவல்நிலையத்துல பாலியல் பலாத்கார வழக்கா பதிவு செய்யப்பட்டு, மோசடி வழக்கா திரிக்கப்பட்ட பல வழக்குகளை நான் பார்த்திருக்கேன். பாதிக்கப்பட்டதை வெளியில் சொல்லாத பெண்கள்தான் அதிகம் இருக்காங்க. பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மிக மிகக் குறைவு.

இப்போ சமீபத்துல நடந்த சம்பவத்தையே எடுத்துக்குவோம். நீதிபதி மரியாதைக்குரிய இடத்துல இருப்பவர். அப்படி குன்னூரில் மாஜிஸ்ட்ரேட்டாக இருக்கும் ஒருவர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பெண்ணிடம் பழகி இருக்கிறார். ரெண்டு பேரும் ஒன்றரை ஆண்டு காலமா குடும்பமாவே வாழ்ந்திருக்காங்க. இப்போ அவர் திருமணத்துக்கு மறுக்கிறார். அந்தப் பெண் காவல்நிலையத்துல வழக்குப் பதிவு செய்யறாங்க. ஜூலை 12 வரைக்கும் அந்த மாஜிஸ்ட்ரேட்டை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அவர் ஒரே நாள்ல ஜாமீன்ல வெளியே வந்துடுறார். மறுபடியும் பணியில் சேரப் போவதாகவும் தகவல் வருது. இது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இதுக்கு எதிரா எங்க அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துல இருந்து ஒரு தீர்மானமே போட்டிருக்கோம். ‘கடுமையான பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவர், அந்தப் பொறுப்பில் தொடர்வது நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். தார்மீக நெறிகளுக்கும் அது முரணானது. எனவே, தலைமை நீதிபதி அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். இப்படியெல்லாம் சம்பவங்கள் நடக்கும் இந்தக் காலத்தில் டெல்லி நீதிமன்றம் சொல்லியிருக்கும் கருத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்று’’ என்கிறார் சுகந்தி.

– பாலு சத்யா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s