வாழ்வியல் ரகசியம்!

Image

* காலையில் எழுந்ததும், இறைவனை மனதில் நினைத்து வணங்குங்கள். கண்ணாடியில் பார்த்து உங்களுக்கு நீங்களே ஒரு ‘குட்மார்னிங்’ சொல்லிக் கொள்ளுங்கள். ‘இன்று எனக்கு சந்தோஷமான தினம்’ என்று சொல்லிக் கொண்டு நாளை தொடங்குங்கள்!

* நம்முடைய நேரத்தை விரயமாக்க மற்றவர்களையும் அனுமதிக்க கூடாது. நம்மையும் அனுமதிக்கக் கூடாது.

* முக்கியமான சமயங்களில் மௌனமாய் இருப்பது எத்தனை நல்லதோ, அதைவிட பேச வேண்டிய தருணங்களில் பேச வேண்டிய விஷயத்தை பேசி விடுவது சிறந்தது.

* மனசாட்சிப்படி நடப்பதும், உண்மை, நேர்மையோடு செயல்படுவதும் வாழ்க்கையை அழகாக்கும்.

* நல்ல யோசனையும் முடிவும் உரிய நேரத்தில் எடுக்கப்படுவதுடன், தாமதமின்றி செயல்படுத்தப்பட வேண்டியதும் முக்கியம்.

* சிந்தனையால் முதுமை… செயலில் இளமை இதுவே உங்கள் தாரகமந்திரமாய் இருக்கட்டும்.

* எதிர்மறையான பேச்சு, செயல் என இருப்பவர்களை விட்டு ஒதுங்கி விடுங்கள்.

* நம்முடன் இருப்பவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். மற்றவர் உணர்வுகளை நாம் மதித்து நடந்தால் நம்முடைய உணர்வுகளுக்கும் அதே மரியாதை கண்டிப்பாகக் கிடைக்கும்.

* சம்பாத்தியம் என்பது எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் சேமிப்பும்.

* உண்மையான சந்தோஷம் எது என்பதைக் கண்டு கொண்டால் எப்போதுமே மகிழ்ச்சியாக வாழ்வைக் கொண்டாடலாம்.

* ஒவ்வொரு விநாடியையும் அனுபவித்து வாழப் பழகிக் கொண்டால் போதும். எப்போதும் சந்தோஷம் நம்மிடமே நிலைத்து நிற்கும். வாழ்க்கை ரம்மியமாகவும் இருக்கும்!

– ஜே.சி.ஜெரினாகாந்த்

Photo Credit: http://bosletak.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s