குட்டிக் கவிதைகள்!

Image

வெண் சுருட்டால்

புற்று நோய்

காற்றின் தோலிலும்!

*

Image

மரம்

வளர்க்காதவனையும்

மரம்

வளர்க்கிறது.

*

Image

யானை

ஊருக்குள் புகுந்துவிட்டதா?

பொய்

பொய்

யானையின் ஊருக்குள்

நீதான்

புகுந்துவிட்டாய்!

*

Image

யூரியாவும்

பொட்டாசும்

போட்டுப் போட்டு…

வாடிய பயிரைக்

கண்ட போதெல்லாம்

வாடினேன்…

*

Image

காக்கைகளிடம்

கொத்து வாங்கத்தான்

செய்யும்

கூடுகட்டத் தெரியாத

குயில்களின்

குஞ்சுகள்!

*

– செ.ப.வீரத்திருக்குமரன்

1 thought on “குட்டிக் கவிதைகள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s