பெண் எழுத்தாளர் பேசத் தடை!

Image

அமெரிக்காவின் மெரிலேண்ட் நகரை சேர்ந்தவர் அமினா வதூத் (Amina Wadut). 60 வயது. பிரபல எழுத்தாளர். சிறந்த பேச்சாளர். சென்னை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தார். கேரள மாநிலம் கோழிக்கோடில் தங்கியிருந்தார். ‘பாலினம் மற்றும் இஸ்லாமிய சீர்திருத்தங்கள்’ என்பது கருத்தரங்கில் அவர் பேச இருந்த தலைப்பு. கோழிக்கோட்டிலிருந்து சென்னை வருவதற்காக அங்கிருக்கும் விமான நிலையத்தில் காத்திருந்தார்.

அந்த நேரத்தில் அவரைத் தொடர்பு கொண்டார் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் தாண்டவன். ‘‘கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதியளிக்க மறுத்திருக்கிறது. எனவே, கருத்தரங்கத்தை ரத்து செய்திருக்கிறோம்’ என்று தெரிவித்தார். இதனால், அமினா வதூத் சென்னை வராமல் பாதியிலே திரும்பினார்.

இதுகுறித்துப் பலரும் பல கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்.  ‘சென்டர் ஃபார் இஸ்லாமிக் ஸ்டடிஸ்’ துறை தலைவர் அப்துல் ரகுமான்… ‘‘பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் போலீஸ் தலையிடுவது இதுவே முதல்முறை. காம்பவுண்டுக்கு வெளியே நாங்கள் நிகழ்ச்சி நடத்தினால் கேட்கலாம். ஆனால், உள்ளே நடக்கும் நிகழ்ச்சியை தடை செய்ய போலீசாருக்கு அதிகாரம் இல்லை. சம்பந்தப்பட்ட எழுத்தாளர் அமின் வதூத்தின் எழுத்துகள், கட்டுரைகள், சென்னைப் பல்கலைக்கழக இஸ்லாமிக் ஸ்டடிஸ் பிரிவில் பாட திட்டத்திலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, அவர் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது கண்டித்தக்கது’’ என்று சொல்லியிருக்கிறார்.

காவல்துறையோ, ‘‘சம்பந்தப்பட்ட பேச்சாளர் சமீபத்தில் கரூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அவரது பேச்சைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை பெரியளவில் ஏற்பட்டது. அவரது பேச்சால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற நிலையில்தான் நிகழ்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது’’ என்று சொல்லியிருக்கிறது.

எழுத்தாளர் அமினா வதூத், ‘‘என் உணர்வுகளைப் பதிவு செய்ய, பகிர்ந்து கொள்ள நினைத்தேன். அனுமதி மறுத்திருக்கிறார்கள்’’ என்று சொல்லியிருக்கிறார்.

நீதிபதி சந்துரு இப்படி குறிப்பிட்டிருக்கிறார்… ‘‘எழுத்தாளரின் பேச்சால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்ற நிலையில் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்துக்கு பல மாதங்களாக பாதுகாப்பு கொடுக்கப்படும் போது இந்திய பல்கலைக்கழகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியாதா?’’.

*

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s