பெண் மருத்துவரை ‘ரோடு ரோலர்’ என்று கிண்டலடித்த அமைச்சர்!

Image

ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மத்திய அரசு பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக லத்தேகர் நகரில் நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. மத்திய அரசு நிதி உதவியோடு, ராஞ்சியில் உள்ள காஷ்யப் நினைவு கண் மருத்துவமனையுடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இதனைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

விழாவில், கண்மருத்துவமனை டாக்டர் காஷ்யப் மற்றும் அவரது மனைவியும் மேற்குசிங்பும் மாவட்ட மெடிக்கல் டைரக்டருமான டாக்டர் பாரதி காஷ்யப்பும் கலந்து கொண்டார்கள். முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் பேசுகையில், பாரதி காஷ்யப்பை ரோடு ரோலருடன் ஒப்பிட்டுப் பேசினார். குண்டாக இருக்கும் பாரதி காஷ்யப், ரோடு ரோலர் போல தன்னை எதிர்கொள்ளும் பிரச்னைகளை நசுக்கி வருகிறார் என்றார். இதற்காக அவரது கணவர் காஷ்யப்புக்கு விருது கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். பாரதி காஷ்யப்பை அமைச்சர் பாராட்டிப் பேசினாலும், அவரை ரோடு ரோலருடன் ஒப்பிட்டுப் பேசியது பலரது முகத்தை சுளிக்க வைத்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பாரதி காஷ்யப்பிடம் கேட்ட போது, ‘அமைச்சர் என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததாக நான் கருதவில்லை. இதற்கு முன்பு கூட பல விழாக்களில் என்னை அவர் பாராட்டியிருக்கிறார். ஒரு முறை என்னை ‘புயல்’ என்றும் வருணித்திருக்கிறார். அமைச்சரின் பேச்சில் உள்ள நகைச்சுவையை நான் புரிந்து வைத்திருக்கிறேன்’ என்றார்.

 *

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s