சென்னிமலை தெய்வம்!

Image

‘கந்தர் சஷ்டி கவசம்’ அரங்கேறிய இடம் ‘சென்னிமலை’ என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். இன்னும் பல சிறப்புகளையும் பெற்றிருக்கிறது இத்தலம். முருகப்பெருமானுக்குரிய பதினாறு மூர்த்தங்களும் இக்கோயிலில் காணப்படுவது தனிச்சிறப்புடையது.

புராண வரலாறு

ஒருமுறை ‘அனந்தன்’ என்ற நாகார்ஜுனனுக்கும் வாயு தேவனுக்கும் பலப்பரீட்சை நடந்தது. அனந்தன், மகாமேரு பர்வதத்தை சுற்றிப் பிடித்துக் கொள்ள, வாயுதேவன் தன் பலத்தை (காற்றை) கடுமையாக வீசி, அனந்தன் பிடியிலிருந்து மேருமலையை விடுவிக்க முயன்றார். மேருமலையின் சிகரப்பகுதி முறிந்து, பறந்து சென்று பூந்துறை நாட்டில் விழுந்தது. அதுவே ‘சிரகிரி’, ‘சிகரகிரி’, ‘புஷ்பகிரி’, ‘மகுடகிரி’, ‘சென்னிமலை’ என்றானது. அந்த வகையில், மேருமலையின் ஒரு பகுதியாக சென்னிமலை கருதப்படுகிறது.

இங்குள்ள ஆற்றின் கரையில் ‘கொடுமணல்’ என்ற கிராமம், ஒரு காலத்தில் பெருநகரமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அங்கு வாழ்ந்த ஒருவரின் காராம்பசு ஓர் இடத்தில் தினமும் பாலைச் சொரிந்திருக்கிறது. அந்த இடத்தை தோண்டிப் பார்த்தார்கள். பூரணப் பொலிவுடன் கூடிய முருகப்பெருமானின் கற்சிலை கிடைத்தது. இடுப்பு வரைக்கும் நல்ல வேலைப்பாடுகளுடனும் இடுப்புக்குக் கீழ் சரியான வேலைப்பாடுகள் இல்லாமலும் இருந்தது முருகன் சிலை. அதனை சரி செய்ய முயற்சித்திருக்கிறார்கள் ஊர்க்காரர்கள். அதன் மேல் உளிபட்டதும் ரத்தம் பீரிட்டதாம். அதனால் அதை அப்படியே விட்டு விட்டார்களாம். இன்று வரை இங்கிருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணியின் திருவுருவம் இடுப்பு வரை நல்லவேலைப்பாடுகளுடனும் இடுப்புக்கு கீழே வேலைப்பாடற்றும் காணப்படுகிறது.

‘பின்னாக்குச் சித்தர்’ வாழ்ந்து முக்தி அடைந்த திருத்தலம் இது. கோயிலைத் தாண்டி மேலே ஏறிச் சென்றால் இவர் சமாதி இருப்பதைக் காணலாம். இது, ‘தன்னாசி கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.

நவக்கிரகக் கோயில்

இங்கு மூலவர், ‘சென்னிமலை ஆண்டவர்’ நடுநாயகமாக ‘செவ்வாய்கிரகமாக’ அமைந்து, மற்ற எட்டுகிரகங்களும் ‘தேவ கோஷ்டங்களில்’ அமர்ந்துள்ளதால், மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவக்கிரகங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.

Image

வள்ளி, தெய்வானை இருவரும், ‘அமிர்தவல்லி’, ‘சுந்தரவள்ளி’ என்ற பெயர்களுடன், இரு உருவங்களாக ஓரே கல்லில் பிரபையுடன் அமைக்கப்பட்டு, தனிப்பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். இந்த சிறப்பம்சம் வேறு எங்கும் இல்லை.

அருணகிரி நாதர் ‘திருப்புகழ்’ பாடி மகிழ்வித்து முருகப் பெருமானிடம் ‘படிக்காசு’ பெற்ற திருத்தலமும் இதுதான்.

இங்கு, இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இமையன் தீர்த்தம், காசியப தீர்த்தம், பட்சி தீர்த்தம், சிவகங்கை, மாமாங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர், வாவி விஷ்ணு தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்கண்டேய தீர்த்தம் (தெப்பக்குளம்) முதலிய பல தீர்த்தங்கள் உள்ளன.

அவற்றுள் ‘மாமாங்க தீர்த்தம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மலைக்கோயிலுக்கு தென்புறம் அமர்ந்துள்ள ‘மாமாங்க தீர்த்த விநாயகர்’ முன்பு பொங்கி வழிந்தோடுமாம்.

அதேபோல் இங்குள்ள ‘மார்கண்டேய தீர்த்த’த்தில் நீராடினால் இளமை நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

மலையில் பல சித்திப் பொருட்கள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

இங்கள்ள காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சன்னதியில் கீழே உள்ள புளியமரத்தின் அடியில் ‘சந்தானகரணி’ என்னும் சித்திப்பொருள் உள்ளது. சஷ்டி விரதம் இருந்து இங்கு கொடுக்கும் பிரசாதத்தை உண்டால், பிள்ளைப்பேறு கிடைக்கும் என்கிறார்கள்.

மலையில் வெண்சாரை, வெண்தவளை காணாச்சுனை, கையாத எட்டி, கருநொச்சி முதலிய சஞ்சீவி மூலிகைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தண்டாயுதபாணி திருக்கோலத்திலுள்ள முருகனுக்கு ‘நைவேத்தியம்’ முடிந்த பிறகே சந்நதி விநாயகருக்கு பூஜை. ஏனென்றால், பழத்தின் பொருட்டு கோபித்துக் கொண்டு மலை மேல் இருப்பதால் அவரை சாந்தப்படுத்தவாம். தொன்று தொட்டு இங்கே பூஜைகள் இப்படித்தான் நடக்கின்றன.

ஆடிக்கிருத்திகையில் அவனருளால் அவன் தாள் வணங்கி, சென்னிமலையை வலம் வந்து அவனருள் பெறுவோமாக!

– திஷானி   

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s