பெண்களின் வாழ்நாளில் 150 ஹேர்ஸ்டைல்!

Image

இன்றைய மாடர்ன் உலகில் பெண்கள் தங்கள் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பியூட்டி பார்லர்களில் குவியும் பெண்கள் கூட்டமே அதற்கு சாட்சி. அதிலும் விதவிதமான ஹேர்ஸ்டைல், ஹேர் கலரிங் செய்வதில்தான் அவர்களில் பலருக்கு ஆர்வம். ‘பெண்கள் தங்கள் வாழ்நாளில் 150 விதமான சிகை அலங்காரங்களைச் செய்து கொள்கிறர்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று.

அணியும் ஆடைக்கு ஏற்ப ஹேர்ஸ்டைலை தேர்வு செய்ய நிறைய பெண்கள் விரும்புகிறார்கள். சுருள் முடி உள்ள பெண்கள், தங்கள் கூந்தலை ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து கொள்வதும், நீண்ட முடி உள்ள பெண்கள் கர்லிங் செய்து கொள்வதும்தான் இப்போது ஃபேஷன். அலை அலையாகப் புரளும் கூந்தலுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம். மாடர்ன் உடைகளுக்குப் பொருத்தமான ஹேர்ஸ்டைல் சிம்பிளாக இருக்கவேண்டும். புடவை போன்ற பாரம்பரிய உடைகளை அணிந்துகொள்ளும் போது அதற்குப் பொருத்தமான சிகை அலங்காரத்தை செய்து கொள்ள குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும்.

பார்ட்டி, ஃபங்ஷன்களுக்குச் செல்லும் போது ஹேர்ஸ்டைல் செய்து கொள்வதற்குப் பெண்கள் அதிகம் மெனக்கெடுகிறார்கள். ஹேர் கட்டைப் பொறுத்தவரை ‘லேயர் கட்தான் பெண்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது. எல்லா ஆடைகளுக்கும் இந்த ஹேர் கட் ஒத்துவரும் என்பது ப்ளஸ். மாடர்ன் உடைகளுக்கு ‘யு கட், குழந்தைத்தனமான முகத்துக்கு ‘ஃபிரெஞ்ச் கட், அல்ட்ரா மாடர்ன் தோற்றம் விரும்பும் பெண்களுக்கு ‘பாய் கட் என இந்தப் பட்டியல் வெகு நீளம்.

இந்த ஆய்வுக்காக 2 ஆயிரம் பெண்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களில் 20ல் ஒருவர், புது ஹேர்ஸ்டைலுக்கு மாற விருப்பம் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தங்கள் தோற்றத்தை அழகாக வெளிப்படுத்தும் வெரைட்டியான ஹேர்ஸ்டைலைத்தான் பெண்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களில் பாதிப் பேர் புது ஹேர்ஸ்டைலுக்கு மாறிப் பார்ப்போமே என்று சோதனை முயற்சியாக செய்து பார்க்கிறார்கள். அதாவது, கூந்தல் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க, பெண்கள் தயாராக இருக்கிறார்கள். 

உலக அளவில், பெண்கள் ஒரு வருடத்துக்கு இரண்டு விதமான ஹேர்ஸ்டைலையும் குறைந்தது கூந்தலுக்கு ஒரு கலர் ஷேடும் செய்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 15 வயது முதல் 65க்குள் 100 விதமான வண்ணங்களை கூந்தலுக்குத் தேர்வு செய்கிறார்கள். பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலங்களில் ஃபேஷனுக்கு ஏற்ப கூந்தல் டிசைனை மாற்றிக் கொள்கிறார்கள்.

‘ஒரே மாதிரியான ஹேர்ஸ்டைல் போரடிக்கிறது. அதனால் புது ஹேர்ஸ்டைலுக்கு மாறினோம் என 64 சதவிகிதம் பெண்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

‘பிரபலங்களைப் பார்த்து, தங்கள் சிகையலங்காரத்தை மாற்றினோம் என்று 12 சதவிகிதம் பெண்களும், ‘திருமணத்துக்காக மாற்றினோம் என 15 சதவிகிதம் பெண்களும், 13 சதவிகிதம் பெண்கள், குழந்தை பிறந்த பிறகு ஹேர்ஸ்டைலை மாற்றினோம் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ‘விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் ஹேர்ஸ்டைலைப் பார்த்துவிட்டு பல பெண்கள் தங்கள் ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொண்டார்கள். இன்றைய பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள்தான் பல இளம்பெண்களுக்கு ஃபேஷன் உலகின் முன்னோடி. பிறந்தநாள், மனவருத்தங்கள், பிரிவு போன்ற காரணங்களுக்காகவும் சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்கிறார்களாம் சிலர்.

‘வருடத்துக்கு 5 முறை வீதம், 65 வயதுக்குள் குறைந்தது 250 முறை சிகையலங்கார நிபுணரை பெண்கள் சந்திக்கிறார்கள் என்கிறார்கள் இந்த ஆய்வை நடத்திய லண்டனைச் சேர்ந்த பிரபல ‘டோனி அண்ட் கய்(Tony & Guy) சிகையலங்கார நிபுணர்கள். இவர்களின் கிளை சென்னையிலும் இருக்கிறது.

‘டோனி அண்ட் கய் நிறுவனத்தின் குளோபல் கிரியேட்டிவ் ஹெட் சாச்சா மாஸ்கோலொ-டார்பக் (Sacha Mascolo-Tarbuck).  அவர் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்… ‘‘பெண்கள் தங்கள் கூந்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆரோக்கியமான விஷயம். இதனால் அவர்கள் தோற்றத்தில் புது மாற்றம் ஏற்படும். அது, அவர்களை தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக மாற்ற உதவும். இது, அவர்களின் வாழ்க்கை மாற்றத்துக்கு ஒரு மைல்கல்லாக இருக்கிறது. பொதுவான இடத்தில் நீங்கள் தனித்துத் தெரிய வேண்டுமென்றால், லேட்டஸ்ட் டிரெண்ட் என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு, அதைப் பின்பற்ற வேண்டும். அதற்கு ஹேர்ஸ்டைல், ஹேர் கட் அவசியம்.

உங்கள் தோற்றத்தில் புதுமாற்றம் வந்தால், தைரியமும் தானாகவே வந்துவிடும். வழக்கமான நிறத்தை லைட் ஷேட், டார்க் ஷேட் வண்ணங்களில் மாற்றிப் பாருங்கள். அது, உங்கள் தோற்றத்தை வித்தியாசப்படுத்திக் காட்டும். ‘ஹேர்ஸ்டைலை மாற்றினால் என்ன மாறப்போகிறது என்று அலட்சியமாக இருந்துவிடாமல் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். புது மனுஷியாக நீங்கள் மாறியது உங்களுக்கே தெரியும்’’.

Photo Credit: http://www.geomaza.com

– எஸ்.பி.வளர்மதி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s