வேதனையிலிருந்து விடியலுக்கு…

Image

காமாத்திபுரா (Kamathipura). மும்பையின் மிகப் பாரம்பரியமான சிவப்பு விளக்குப் பகுதி. ‘ஆசியாவிலேயே மிகப் பெரிய சிவப்பு விளக்குப் பகுதி’ என்கிற பெருமை(!)யும் இதற்கு உண்டு. அங்கே வசிப்பவர்களில், ‘தேவதாசிகள்’ என்கிற பெயரால் அழைக்கப்படும் பல பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். அப்படிப்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு ஆசை ஒன்று இருந்தது. மேற்படிப்புப் படிக்க வேண்டும். அதுவும் அமெரிக்காவுக்குச் சென்று படிக்க வேண்டும் என்கிற கனவு! அந்தக் கனவு இப்போது நனவாகியிருக்கிறது. ஸ்வேதா காத்தி (Shweta Katti) என்ற அந்தப் பெண்ணுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்து, அமெரிக்கா, நியூ யார்க்கில் இருக்கும் பார்ட் பல்கலைக்கழகத்தில் (Bard University) மேற்படிப்புப் படிக்கப் போகிறார்.

அம்மா வந்தனா ஒரு தேவதாசி. ஸ்வேதாவுக்கு சிறு வயதிலிருந்தே படிப்பில் ஆர்வம் அதிகம். ஏழாம் வகுப்பு வரை ஸ்வேதா படித்தது முனிசிபாலிட்டி பள்ளியில். 8ம் வகுப்பு வந்த போதுதான் ‘இவள் நன்றாகப் படிக்கிறாளே!’ என்று அம்மா வந்தனா, தெற்கு மும்பையில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் சேர்த்து விட்டார். ப்ளஸ் டூ முடித்த பிறகு, ஸ்வேதா ‘அப்னே ஆப்’ என்கிற அமைப்பை அணுகினார். அது காமாத்திபுராவில் இருக்கும் ஓர் தன்னார்வ அமைப்பு. ‘அப்னே ஆப்’ ஸ்வேதாவுக்கு ‘க்ராந்தி’ (Kranti) என்ற இன்னொரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு வழி காட்டியது. ‘க்ராந்தி’ கடத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு வழிகாட்டி, கல்வியளித்து, சமூகநிலையில் அவர்களையும் ஒரு மனுஷியாக்கும் அமைப்பு. அந்த அமைப்பு ஸ்வேதாவின் மேற்படிப்புக்கு உதவியது. அமெரிக்காவில் இருந்து ஸ்வேதாவுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க வழிவகை செய்திருக்கிறது.

‘‘அமெரிக்காவில் ஸ்வேதா படிப்பதற்காக உலகம் முழுக்க 200 பேர் உதவி செய்திருக்கிறார்கள். ஸ்வேதா, அமெரிக்காவில் சைக்காலஜி படிக்கப் போகிறார்’’ என்று சொல்லியிருக்கிறார் ‘க்ராந்தி’ அமைப்பைச் சேர்ந்த ராபின் என்பவர்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஸ்வேதாவின் அம்மா வந்தனா, ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்… ‘‘ஸ்வேதாவுக்கு அமெரிக்காவில் படிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவள் அங்கே என்ன படிக்கப் போகிறாள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் அவளை நினைத்துப் பெருமைப்படுகிறேன்…’’

– பாலு சத்யா    

Advertisements

One thought on “வேதனையிலிருந்து விடியலுக்கு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s