ஆசிட் விற்பனை… முறைப்படுத்த களத்தில் காவல்துறை!

Image

சென்னை நகர காவல்துறை ஆசிட் விற்பனையை முறைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. ஆசிட் விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளுக்கான வழிகாட்டுதல் கூட்டம் நேற்று (29-08-2013) காவல்துறை கூடுதல் ஆணையர் வி.ஏ.ரவிகுமார் தலைமையில் நடந்தது. அதில் பல விவரங்கள் சில்லறை வியாபாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டன.

முகவரிச் சான்று, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை சமர்ப்பித்த பிறகுதான் வாடிக்கையாளர்களுக்கு ஆசிட்டை விற்க வேண்டும். இந்த முறைப்படி விற்கிறார்களா என்பதை காவல்துறையினர் சில்லறை வியாபாரிகளிடம் கேட்பார்கள். அங்கீகாரம் பெற்ற ஆசிட் சில்லறை விற்பனையாளர்கள், ஆசிட் விற்பனை மற்றும் கையிருப்பு குறித்த பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும். ஆசிட் வாங்கும் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, எவ்வளவு வாங்கினார் என்கிற விவரங்கள் அந்தப் பதிவேட்டில் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், இதை அந்தப் பகுதி காவல்துறை ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சல்பரிக் மற்றும் ஹைட்ரோக்ளோரிக் ஆசிட் வாங்கும் வாடிக்கையாளர்கள் அடையாள அட்டையை சமர்ப்பிப்பதோடு, எதற்காக வாங்குகிறார்கள் என்கிற காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை ஆசிட் வாங்கிய வாடிக்கையாளர், அதை யார் மீதாவது வீசுவதற்குப் பயன்படுத்தினால் அதற்கு சில்லறை வியாபாரியும் ஒருவகையில் பொறுப்பாளியாவார்.

அதே போல, ஆசிட்டை விற்கும் போது, நன்கு சீல் செய்யப்பட்டிருக்கிறதா, பாதுகாப்பான முறையில் மூடியிருக்கிறதா என்பதையும் சில்லறை விற்பனையாளர் கவனிக்க வேண்டும். சில்லறை நகைக்கடைகளுக்கோ, மற்ற நிறுவனங்களுக்கோ விற்கும்போது, அது தொழில்முறைப் பயன்பாட்டுக்காகத்தான் வாங்கப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளும் விதமாக வாடிக்கையாளரிடம் ஒரு கடிதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர்கள் ஆசிட் விற்பனையைக் கண்காணிப்பார்கள். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ஆசிட் விற்பனை ஆகியிருக்கிறது என்பதையும் ஆய்வு செய்வார்கள். இந்த விவரங்கள் எல்லாம் அழுத்தமாக சில்லறை வியாபாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டன.

தொடர்புடைய பதிவு…

எளிதாக வாங்கலாம் கொலைக்கருவி

* ‘அமிலம் எனும் அவலம்’ விரிவான கட்டுரையை ‘குங்குமம் தோழி’ செப்டம்பர் 1-15 இதழில் படிக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s