‘மனைவிக்கு ஜீவனாம்ச பணம் கொடுக்காத கணவனின் சொத்தை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பி அதிர வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
ஆந்திரமாநிலம், விஜயநகரத்தைச் சேர்ந்தவர் அனுராதா. இவர் கணவர் சதீஷ் குமார் இல்லா (Satish Kumar Illa). இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். ஜீவனாம்சம் பெற்று அதில்தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார் அனுராதா.
குடும்பச் செலவுக்கும் பராமரிப்புக்குமாக மாதம் 15 ஆயிரம் ரூபாய், சதீஷ் குமார் அனுராதாவுக்கு ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்பது ஏற்கனவே முடிவான ஒன்று. இந்த நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கவில்லை சதீஷ் குமார். அனுராதாவுக்குப் பணமும் அனுப்பவில்லை. இந்த வழக்கை விசாரித்தது உச்ச நீதிமன்ற பெஞ்ச் கிளை. ‘‘இதுவரை வழங்கப்படாத தவணைத் தொகைகள் மொத்தத்துக்கும் சேர்த்து, சதீஷ் குமார் 1 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். இனிமேல் தவணைத் தொகை செலுத்துவதில் தாமதம் ஏற்படக்கூடாது. சதீஷ்குமார், இந்தியாவின் வேறு பகுதிக்கோ, வெளிநாட்டுக்கோ வேலைக்குச் செல்வதாக இருந்தால் அது குறித்து அவர் மனைவிக்கும் நீதிமன்றத்துக்கும் தகவல் கொடுத்து, ஒப்புதல் வாங்க வேண்டும். அனுராதாவுக்கு செலுத்தத் தவறிய தொகைக்காக சதீஷ் குமாரின் சொத்துகளைக் கூட ஈடாகப் பெறலாம்’’ என்று கடுமையாக எச்சரித்திருக்கிறது உச்ச நீதிமன்ற பெஞ்ச் கிளை. அதோடு 3 வாரங்களுக்குள் பதில் தர வேண்டும் என்று நோட்டீஸும் அனுப்பியிருக்கிறது.
***
(ஜீவனாம்சம் தொடர்பாக சட்டம் என்ன சொல்கிறது, மனைவிக்கு ஜீவனாம்சத் தொகை சரியாக வரவில்லையென்றால் என்ன செய்வது, பல முக்கிய வழக்குகளில் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது மற்றும் பல விளக்கங்கள் – ‘குங்குமம் தோழி’ செப்டம்பர் 16-30 இதழில்…)
Photo Courtesy: http://english.globalgujaratnews.com