பள்ளிக்கூட வாசலில்
நீ…ண்ட வரிசையில் நின்று
எனக்காக ஓரிடம்
வாங்கினீர்கள்
என் குழந்தை மனதைப்
புதைப்பதற்கு.
***
குருவிகளுக்காக
நாவல் மரம் வைத்தேன்.
பழுக்கும் காலம் வரை
இருக்குமோ
குருவிகள்?
***
ஆயுத பூசை!
ஏருக்கும் கலப்பைக்கும்
சந்தனம் வை
குங்குமம் வை.
அப்படியே தூக்கிப்
பரணில் வை.
***
நன்றி
ஒருவர்க்குச் செய்தக்கால்
அந்நன்றி
என்று தருங்கொல்
என வேண்டா
நின்று தளரா
வளர் தெங்கு
தாளுண்ட நீரை
இருபத்தைந்து ரூபாய்
விலையாலே
தான் தருதலால்.
***
– செ.ப.வீரத்திருக்குமரன்
பள்ளிக்கூட வாசலில்
நீ…ண்ட வரிசையில் நின்று
எனக்காக ஓரிடம்
வாங்கினீர்கள்
என் குழந்தை மனதைப்
புதைப்பதற்கு.
கள்ளம் கபடம்
கற்றுத்தேர்ந்து
மனதில் பட்டதை
மனதிலேயே மறைத்து
உள்ளொன்றும்
புறமொன்றும் – என
வாழ்ந்து பழகிட……
போட்டி பொறாமைகளுடன்
போரிட்டு வாழ்ந்திட
அடித்தளம்
அமைத்துவிட்டீர்கள்.