முதல் முறை… இந்தியப் பெண்… உயர்ந்த பதவி!

Nisha_Biswal

ந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், நிஷா தேசாய் பிஸ்வாலுக்கு மரியாதைக்குரிய பதவி… அமர்த்தி அழகு பார்த்திருக்கிறது அமெரிக்க அரசு. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

1861. அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி, ‘யுனைடட் ஸ்டேட்ஸ் ஏஜென்ஸி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட்’ அமைப்பை உருவாக்கினார். சுருக்கமாக ‘USAID’. வெளிநாடுகளில் ஆதரவில்லாமல் தவிப்பவர்களுக்கு, வறுமையில் வாடுபவர்களுக்கு, பேரிடர் ஏதாவது நிகழும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இப்போது USAIDயின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பகுதிக்கு உதவி நிர்வாக அதிகாரியாக (Assistant Administrator) நியமிக்கப்பட்டிருக்கிறார் நிஷா தேசாய் பிஸ்வால்.

நிஷாவின் பெயரை பரிந்துரைத்தவர் பராக் ஒபாமா. கடந்த ஜூலை 18ம் தேதி இது நடந்தது. அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு, நிஷாவின் நியமனத்தை இப்போது உறுதி செய்திருக்கிறது. இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர் நிஷா தேசாய் பிஸ்வால். இந்த உயரிய பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமர்த்தப்படுவது இதுவே முதல் முறை. நிஷாவின் பெற்றோர் இந்தியாவில் சாதாரணமான கிராமப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். தங்கள் குழந்தைகள் பெரிய பதவியில் அமர வேண்டும் என்று கனவு கண்டவர்கள். அந்தக் கனவு, இப்போது நனவாகியிருக்கிறது என்றே சொல்லலாம்.

– ஆனந்த பாரதி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s