அருமைத் தோழி!
அழகான தோழி!
அன்பான தோழி!
என் செல்லத் தோழியே!
தையல் ‘இயந்திரம்’ என்கிறார்கள் உன்னை!
அதில் எனக்கு உடன்பாடில்லை.
நீயும்
என்னைப் போல்
‘தையல்’.
அயராது உழைக்கும்
உழைப்பாளி!
கஷ்டத்திலும் நஷ்டத்திலும்
இன்பத்திலும் துன்பத்திலும்
இணை பிரியாத தோழி!
இதயத்தை நிறைத்தவள்!
என் எண்ணம்…
என் உயிர் நீ!
உன்னை உருவாக்கியவன்
புண்ணியவான்.
உன்னை அறிமுகப்படுத்திய ‘தனம்மாள்’
புண்ணியவதி.
நீயின்றி நானில்லை
அறிவார்கள் என் குழந்தைகள்…
அயல் தேசத்திலும்
நாம் பிரியவில்லை
எனக்கு ஒரு ‘பிரதரை’
பரிசளித்தார்கள்.
சமயத்தில் சந்தேகம்…
உன்னுடன் நான் இருக்கிறேனா?
என்னுடன் நீ இருக்கிறாயா?
பொறுமையும் பெருமையும்
எனக்கு வந்து சேர்ந்தது
உன்னால்தான்.
நன்றி சொல்வதற்கு
நான் செய்வதெல்லாம்
ஒன்றுதான்…
உன்னைத் தொட்டு
வணங்கிய பிறகே
ஒவ்வொரு தினமும்
வேலையைத் தொடங்குகிறேன்.
அழகுப் பதுமை நீ!
செய்வதெல்லாம் புதுமை!
இந்த உலகும்
அதில் மனிதர்களும்
இருக்கும் வரை
உன் சேவை தொடரும்.
என் பங்காக
இறுதி மூச்சு உள்ளவரை
உன்னை இயக்கிக் கொண்டிருப்பேன்.
உன்னோடு இணைந்து
ஐம்பது ஆண்டுகளுக்கு
மேல் ஆகிவிட்டன.
உன் உதவியால்
அழகிய ஆடைகள்
ஆயிரக்கணக்கில்
தைத்துவிட்டேன்.
ஆனாலும் ஆசை அடங்கவில்லை.
கடவுள் என் முன் தோன்றி
‘என்ன வரம் வேண்டும்?’
என்றால் ஒன்று கேட்பேன்…
‘இறைவா…
பத்தாண்டுகளைப் பின்னோக்கி தா!
தோழியோடு இன்னும் உறவாட வேண்டும்!’
– லெஷ்மி குஞ்சரம்
(ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் தையல் தைப்பதை ஒரு பொழுது போக்காகவே மேற்கொண்டு தினந்தோறும் செய்து வருகின்றேன். ஆத்மார்த்தமான அமைதியையும் மகிழ்ச்சியான உணர்வையும் ஏற்படுத்துவதால், தையல் இயந்திரத்தை எனது தோழியாக என்பதை விட ‘உயிர்த் தோழி’யாகக் கருதுகிறேன்.)
Photo Courtesy: http://www.goldcanyonembroidery.com
***
மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள்… பாராட்டுக்கள்… பலருக்கும் வாழக்கைக்கு உதவும் தோழியாகவும் உள்ளது… வாழ்த்துக்கள்… நன்றி…
Very nice.. 🙂
Simply wow… Ur friend brings out a poet in U . Best wishes.
kavithai migavum arputhamaga ulladhu
It was very touching and liked your thought.I wish you write more.