உண்மை கசக்கும்

Image

ஆம்

அது இப்படித்தான் இருக்கிறது

இறந்து விடுவதை விட

வாழ்ந்து விடலாம் போல

பாடை, மூங்கில்

பூக்கள், விறகு

பானை, புதுத்துணி

சுடுகாட்டுக் கட்டணம்

இத்யாதி, இத்யாதி

இதுவெல்லாம் முடிந்தாலும்

அடுத்தநாள் பாலுக்கு…

பதினாறாம் நாள்

காசு, பணம்,  துட்டு, மணி

இறந்துபோகவில்லையே என்று

நினைக்கவைக்கும்

ஏராளமான செலவுகள்

ஒரு வகையில் –

உயிரோடு இருப்பதைவிட

செத்துப்போனால்தான்

செலவுகள் அதிகம்!

இறந்தவன் தப்பித்துக்கொள்ள

இருக்கிறவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்

ஆம்

அது அப்படித்தான் இருக்கிறது!

– நா.வே.அருள்

Advertisements

One thought on “உண்மை கசக்கும்

  1. இறந்தவன் தப்பித்துக்கொள்ள
    இருக்கிறவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்
    ************
    இறப்பிலிருந்து
    தப்பித்தவர் எவருமில்லை
    இறந்தபின்னும் பகைமை
    பாராட்டல் முறையுமில்லை
    இறந்தவர்க்கென்றே செய்யும்
    இறுதி
    மரியாதை இது.

    உன் பணமில்லாவிடினும்
    ஊர் கூடிச் செய்யும்
    இறுதி ஊர்வலம் இது!

    ஒருமுறை புதைத்தோ
    எரித்தோ தீர்த்துவிட்டால்
    இறந்தவர் மீண்டு வரமாட்டார்.

    விலங்குகள் கூட
    தங்களவர் மறைந்தால்
    மறக்காது செய்கின்றன
    இறுதிமரியாதை.- மனிதா
    மனித நேயத்தின் –
    உயரிய பண்பு இது.
    இதையெல்லாம்
    இளக்காரமாய் எண்ணாதே-
    உனக்கும் உண்டு இறுதியான ஒரு நாள்
    அதனை நினைவூட்டவே
    உண்டுனக்கு…. உண்டுனக்கு…
    என்று பறை ஒலிக்கிறது
    வாழும் ஒவ்வொரு நாளும்
    இறுதியைத் தான் அழைக்கின்றது
    என்பதை மட்டும் மறவாதீர்..

    -முத்துக்குமார், மைசூர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s