குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!

Image 

‘பாப்புலேஷன் ஃபர்ஸ்ட்’ என்கிற தன்னார்வ அமைப்பு கடந்த 5 வருடங்களாக ‘லாட்லி ஊடக விருது’களை வழங்கி வருகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சிசுக்கொலைக்கு எதிராக தேசிய அளவில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது இந்த அமைப்பு.  அதன் ஒரு அங்கமாக, பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களை அம்பலப்படுத்தும் செய்திக்கட்டுரைகள், தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, சிறந்த படைப்புகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ‘லாட்லி ஊடக விருது’களை  (Laadli Media and Advertising Awards for gender sensitivity) வழங்கி வருகிறது.

தெற்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களுக்கான ‘லாட்லி ஊடக விருதுகள்’ 2013 டிசம்பர் 13 அன்று ஹைதராபாத்தில் வழங்கப்பட்டன.

அவ்விழாவில், ‘குங்குமம் தோழி’ இதழின் பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி எழுதிய ’வழிகாட்டும் ஒளி’ என்ற கட்டுரைக்கு ‘லாட்லி ஊடக விருது’ (பெஸ்ட் கேம்ப்பெயின்) வழங்கப்பட்டது. ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி திரு சந்திரகுமாரும், ‘பாப்புலேஷன் ஃபர்ஸ்ட்’ அமைப்பின் இயக்குனர் டாக்டர் ஏ.எல்.சாரதாவும் விருதுகளை வழங்கினார்கள்.

***

4 thoughts on “குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!

  1. வாழ்த்துக்கள் வைதேகி அவர்களே. வ்ழிகாட்டும் ஒளியனை, மீண்டும் பிர்சுரம் செய்வீர்களாக. எதிர்பார்ப்புக்களுடன், நன்றி.

  2. வணக்கம்
    விருது கிடைத்தமைக்கு வைதேகி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. அந்த கட்டுரையை தங்கள் தளத்தில் சிறப்பு பதிவாக வெளியிட்டால் அனைவருக்கும் சென்றடையும்.. என்கருத்து

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s