கொசு வளரும் சாக்கடையில்
வளர்கிறது
வாழையும்!
***
இலைகள் ஏந்தி… மரங்கள்
அமுது படைக்க
ஒருவரேனும்..?
***
அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த
கோன் ஐஸ்க்ரீம்
இந்தியா….
***
அனேக பசுக்கள் இறந்து கிடந்தன
அறுந்துகிடந்தது
ஆராய்ச்சிமணி
***
ராமன் ஆண்டாலென்ன ? ராவணன் ஆண்டாலென்ன?
விட்டுவிட முடியுமா?
சீதை சொல்லட்டும்…
-நா.வே.அருள்
குங்குமம் தோழிக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!