‘இந்தியாவின் இதிகாசங்கள்’ என்று போற்றப்படுபவை ராமாயணமும் மகாபாரதமும். மூல மகாபாரதம் 18 அத்தியாயங்களையும் (பர்வங்கள்) கிட்டத்தட்ட ஒரு லட்சம் பாடல் அடிகளையும் கொண்டது. அப்படிப்பட்ட புகழ்பெற்ற இதிகாசத்தை 36 ட்வீட்டுகளில் எழுத முடியுமா? ட்விட்டரில் ஒரு ட்வீட் பதிவையே 140 எழுத்துகளுக்குள்தான் பதிவிட முடியும். அப்படி இருக்க, இது எப்படி முடியும்? பிரபல இலக்கியவாதியும் எழுத்தாளருமான தேவ்தத் பட்நாயக் அதை சாத்தியமாக்கியிருக்கிறார். மகாபாரதத்தின் முழுக் கதையையும் 36 ட்வீட்டுகளாக 40 நிமிடங்களில் பதிவேற்றி, ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்கிற பழைய பழமொழிக்கு அர்த்தம் கொடுத்திருக்கிறார்.
அவர் எழுதிய மகாபாரதத்தின் தமிழாக்கம் இங்கே… (தமிழ் ட்வீட்டுக்குள் அடங்காது)
- ஹஸ்தினாபுரத்தின் இளவரசரான பீஷ்மர் தன் தந்தைக்காக மணவாழ்க்கையையும் அரசுரிமையையும் துறந்தார். அவர் தந்தை தான் விரும்பிய ஒரு மீனவப் பெண்ணை மணந்தார்.
- மீனவப் பெண் சத்யவதியின் இரு மகன்களும் குழந்தைகள் இல்லாமலே இறந்து போனார்கள். அவர்களின் இரு விதவை மனைவிகளும் வியாச முனிவர் மூலமாக கருவுற்றார்கள். இரு குழந்தைகள் பிறந்தன. ஒன்றுக்கு பார்வையில்லை. மற்றொன்றுக்கு வெளிறிப் போன தோல்.
- பாண்டு மன்னரானார்… இரு மனைவிகள்… குழந்தைகள் இல்லை. ஒரு முனிவரிடம் எந்தப் பெண்ணைத் தொட்டாலும் மரணம் நேரும் என்கிற சாபம் பெற்றிருந்தார். அதனால் துறவறம் பூண்டு கானகம் சென்றார்.
- பார்வையற்ற திருதராஷ்டிரர் அரசாட்சிக்கு வந்தார். மனைவி காந்தாரி கணவனுக்குப் பார்வையில்லை என்பதற்காக தானும் கண்களைக் கட்டிக் கொண்டாள்.
- பாண்டுவின் முதல் மனைவி குந்தி ஒரு மந்திரத்தைப் பயன்படுத்தி, 3 கடவுள்களிடம் 3 மகன்களைப் பெற்றாள். அதே மந்திரத்தால் 2வது மனைவி மாதுரி 2 மகன்களைப் பெற்றாள்.
- குழந்தை பிறக்கும் வரை பொறுமையில்லாத காந்தாரி தன் வயிற்றில் அடித்துக் கொள்ள, ஒரு சதைப் பிண்டம் வெளியே வந்து விழுந்தது. அதை 100 குழந்தைகளாக மாற்றினார் வியாசர்.
- திருதராஷ்டிரரின் பிள்ளைகளான 100 கௌரவர்கள் அரண்மனையில் வளர்ந்தனர். பாண்டுவின் 5 பிள்ளைகளான பாண்டவர்கள் வனத்தில் வளர்ந்தனர். தான் பெற்ற சாபம் மறந்து பாண்டு மாதுரியைத் தொட இறந்து போனான். மாதுரியும் தன்னை மாய்த்துக் கொண்டாள்.
- ஆதரவற்ற பாண்டவர்களும் குந்தியும் அரண்மனைக்குத் திரும்பினார்கள்… கௌரவர்களின் கோபத்தை எதிர்கொண்டபடி வளர்ந்தார்கள். பீஷ்மர் அவர்களுக்கு துரோணரை ஆசிரியராக நியமித்தார்.
- போர்க்கலை கற்றுக் கொடுத்ததற்கு குருதட்சணையாக, தன் பழைய சபதத்தின் பொருட்டு, பாஞ்சால தேசத்தில் பாதியை தனக்கு வென்று தருமாறு கேட்டார் துரோணர். நிறைவேற்றினார்கள் பாண்டவர்கள்.
- பாண்டவர்களின் வெற்றிக்கு அரக்கு மாளிகையைப் பரிசளித்தார் பெரியப்பா. கௌரவர்கள் அதில் தீ வைக்க, மயிரிழையில் உயிர் தப்பி காட்டுக்குள் ஒளிந்தார்கள் பாண்டவர்கள்.
- காட்டில் பாண்டவர்களில் பலசாலியான பீமன், அரக்கர்கள் பகாசுரனையும் இடும்பனையும் கொன்றான். இடும்பனின் தங்கை இடும்பியை மண்ந்தான். அவர்களுக்கு கடோத்கஜன் பிறந்தான்.
- தன் ராஜ்ஜியத்தில் பாதியை இழந்த பாஞ்சால மன்னன் துருபதன், தன் மகள் திரௌபதி, மகன்கள் சிகண்டி திருஷ்டத்யும்னன் மூலமாக பழி வாங்க முடிவெடுத்தான்.
- அரச வம்சத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதாலும், தேரோட்டியின் வளர்ப்பு மகன் என்பதாலும் திறமைசாலியான கர்ணன் பாஞ்சாலத்தில் நடைபெற்ற விற்போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை இழந்தான்.
- அந்தணராக மாறுவேடம் பூண்டிருந்த பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் போட்டியில் வென்று திரௌபதியை பரிசாகப் பெற்றான். குந்தியின் ஆணைப்படி அவள் ஐவருக்கும் மனைவியானாள்.
- பாஞ்சாலத்தில் விற் போட்டியில் தங்கள் மைத்துனன் கிருஷ்ணனை சந்தித்த பாண்டவர்கள் அவனுடன் நட்புறவு கொண்டார்கள். மாறுவேடத்திலிருந்து தங்களை வெளிப்படுத்தி அவன் ஆதரவையும் பெற்றார்கள்.
- நண்பன் கிருஷ்ணன், மாமனார் துருபதன் துணையுடன் தைரியமாக ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பினார்கள் பாண்டவர்கள். தங்களுக்குரிய அரசுரிமையை வேண்டினார்கள்.
- ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டது. பாண்டவர்கள் காண்டவ வனத்தைப் பெற்றார்கள். அதை எரித்து, அழித்து இந்திரபிரஸ்தம் என்கிற அழகிய நகரத்தை உருவாக்கினார்கள்.
- திரௌபதியின் தனிமைக்கு பங்கம் விளைவித்ததால் அர்ஜுனன் குறிப்பிட்ட காலத்துக்கு நாடு கடத்தப்பட்டான். அந்தப் பயணத்தில் உலூபி, சித்ராங்கதா, கிருஷ்ணனின் தங்கை சுபத்ரா ஆகியோரை சந்தித்து மணம் செய்து கொண்டான்.
- கிருஷ்ணனின் உதவியோடு ஜராசந்தனைக் கொன்றான் பீமன். பாண்டவர்களின் புகழால் ஈர்க்கப்பட்டு யுதிஷ்டிரரின் முடிசூட்டு விழாவில் எல்லா அரசர்களும் கலந்து கொண்டனர்.
- பொறாமையுற்ற கௌரவர்களில் மூத்த துரியோதனன் பாண்டவர்களை சூதுக்கு அழைத்தான். அதில் ராஜ்ஜியத்தையும் தன்னையும் திரௌபதியையும் பணயம் வைத்து இழந்தான் யுதிஷ்டிரன்.
- பாண்டவர்களை அவமதிக்க திரௌபதியின் துகிலை உரிந்தான் கௌரவர்களில் ஒருவனான துச்சாதனன். கிருஷ்ணனின் அற்புதத்தால் திரௌபதியின் மானம் காப்பாற்றப்பட்டது.
- துச்சாதனனின் ரத்தத்தால் குளித்த பிறகே கூந்தலை முடிவேன் என சபதமேற்றாள் திரௌபதி. பதட்டமடைந்த கௌரவர்கள், பாண்டவர்கள் அரசைத் திரும்பப் பெற வேண்டுமெனில் மீண்டும் விளையாடி ஜெயிக்கச் சொன்னார்கள்.
- பாண்டவர்கள் தோற்றனர். 13 ஆண்டுகள் வனவாசம் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. கடைசி வருடம் தாங்கள் யார் என்று பிறர் அறியாமல் வாழ வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டது.
- வனவாசம் முடிந்தது. பாண்டவர்களின் பங்கைக் கொடுக்க கௌரவர்கள் மறுத்தார்கள். கிருஷ்ணனின் தூதும் பலன் தரவில்லை. 7 படைகளுடன் பாண்டவர்கள் போருக்குத் தயாரானார்கள். கௌரவர்களிடம் இருந்தது 11 படைகள்.
- குருஷேத்ரத்தில் படைகள் மோதத் தயாராயின. போர்க்களத்தில் அர்ஜுனன் நம்பிக்கையிழக்க, கிருஷ்ணர் அவனுக்கு கீதோபதேசம் செய்தார். 18 நாள் போர் ஆரம்பமானது.
- தான் இறக்கும் வினாடியை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர் பீஷ்மர்… அவர் வெற்றிக்குத் தடையாக நின்றார். திருநங்கை சிகண்டி எதிரே வர தன் வில்லைத் தாழ்த்தினார். அந்த கணத்தில் அர்ஜுனனின் அம்புகளுக்கு வீழ்ந்தார்.
- அடுத்த படைத்தளபதியானார் துரோணர். இரக்கமின்றி எல்லா போர் விதிகளும் மீறப்பட்டன. இரவில் போர்… அபிமன்யுவும் கடோத்கஜனும் கொல்லப்பட்டனர்.
- அஸ்வத்தாமன் என்கிற யானை இறந்த செய்தி தவறாக பரப்பப்பட, தன் மகன்தான் என்று நினைத்து வில்லை கீழே போட்டார் துரோணர். திருஷ்ட்த்யும்ன்ன் அவர் தலையைக் கொய்தான்.
- குந்திக்குப் பிறந்து, கைவிடப்பட்ட முதல் குழந்தை தான் என்பதை அறிந்திருந்தும் கர்ணன் கௌரவர் படைக்குத் தளபதி ஆனான். இதை அறியாத பாண்டவர்கள் கர்ணனின் தாழ்ந்த நிலையை கேலி செய்தார்கள்.
- மண்ணில் புதையுண்ட தேர்ச் சக்கரத்தை தூக்க முயற்சித்த, ஆயுதங்களற்ற கர்ணனை கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில் அர்ஜுனன் கொன்றான். பின்னால் அதற்காக குற்றவுணர்ச்சி அடைந்தான்.
- எல்லா கௌரவர்களையும் பீமன் கொன்றான். துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்து, திரௌபதியின் கூந்தலையும் கழுவி முடியச் செய்தான். துரியோதனனின் துடையைப் பிளந்து கொன்றான்.
- பாண்டவர்கள் வெற்றியைக் கொண்டாடினார்கள். இரவில், பாசறை கூடாரத்துக்கு அஸ்வத்தாமன் தீ வைத்தான். அதில் உறக்கத்திலிருந்த திரௌபதியின் 5 மகன்களும் 2 சகோதரர்களும் இறந்து போனார்கள்.
- யுதிஷ்டிரர் முடிசூட்டிக் கொண்டார். போரில் உயிர் பிழைத்த ஒரே வாரிசு அபிமன்யுவின் மகன் பரிக்ஷித்… தாயின் கருவிலிருந்தது. குந்தி, திருதராஷ்டிர, காந்தாரி அனைவரும் இறுதி மூச்சை விட வனத்துக்குச் சென்றார்கள்.
- வெற்றிகரமான நீண்ட கால ஆட்சிக்குப் பிறகு, கிருஷ்ணரின் மரணத்தை அறிந்த யுதிஷ்டிரர் ராஜ்ஜியத்தை துறந்தார்.
- பாண்டவர்களும் திரௌபதியும் தேச சஞ்சாரம் செய்து இறுதியாக இமயமலை செல்கிறார்கள். மலையில் மற்றவர்கள் இறந்து போகிறார்கள். யுதிஷ்டிரருக்கு மட்டும் சொர்க்க வாசல் திறக்கிறது.
- சொர்க்கத்தில் கௌரவர்களை காண்கிறார் யுதிஷ்டிரர். முதலில் கோபமடைந்தார்… பிறகு, நீண்ட நெடுங்காலமாக பழி வாங்கும் உணர்ச்சியோடு தான் இருந்ததால் சொர்க்கம் ஒருபோதும் அவருக்கு கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்டார்.
தமிழில்: பாலு சத்யா
ட்வீட்டுகளின் ஆங்கில மூலம் இங்கே…
Devdutt Pattanaik @devduttmyth
01/36 Prince of Hastinapur is named Bhisma after he gives up sex & inheritance so that his father can marry an ambitious fisherwoman.
02/36 Fisherwoman Satyavati’s sons die childless. Poet Vyasa is called to impregnate the 2 widows who beget 2 sons: 1 blind & 1 pale
03/36 Pale younger Pandu gets crown, 2 wives and curse of death if he touches a woman. Effectively childless, he withdraws to forest
04/36 Blind elder Dhritarashtra becomes regent and clings to throne. He gets a wife Gandhari who blindfolds herself
05/36 Pandu’s 1st wife Kunti uses a mantra and compels 3 gods to give her 3 sons. Same mantra gets 2nd wife Madri twin sons
06/36 Impatient and frustrated Gandhari strikes pregnant belly. Out comes a ball of flesh that Vyasa transforms into 100 sons
07/36 Dhritarashtra’s 100 Kauravs raised in palace. Pandu’s 5 Pandavs raised in forest. Pandu dies soon after. Madri kills herself
08/36 Orphaned Pandavs return to palace with Kunti and raised alongside resentful Kauravs. Bhisma appoints Drona as joint tutor
09/36 As tuition fee for martial training Drona demands half of Panchala kingdom to settle an old score. Pandavs make it happen
10/36 Blind uncle gifts triumphant Pandavs a (lac) palace. Kauravs set it aflame. Pandavs escape bid on life and hide in forest
11/36 In forest mighty Pandav Bhim kills barbarian Baka & Hidimba and marries their sister Hidimbi who begets a son Ghatotkacha
12/36 Panchala-king Drupada hopes to avenge division of his kingdom through daughter Draupadi and sons Shikhandi and Dhristadhyumna
13/36 Talented charitable Karna disqualified from archery contest at Panchala as he is charioteer’s foster son, unworthy of princess
14/36 Archer Pandav Arjun disguised as priest wins contest; wins Draupadi; shares her with brothers on mother’s orders
15/36 Pandavs meet and befriend their cousin Krishna at Panchala archery contest. Receive support on revealing true identity.
16/36 With Krishna as friend and Draupada as father-in-law, Pandavs boldly return to Hastinapur and claim their father’s inheritance
17/36 Kingdom divided. Pandavs get the forest of Khandava, which they burn and clear to build fabulous city of Indraprastha
18/36 Arjun, exiled for intruding Draupadi’s privacy, travels, meets and marries Uloopi, Chitrangada and Krishna’s sister, Subhadra
19/36 Guided by Krishna, Bhim kills mighty Jarasandha in duel. Impressed, all kings attend eldest Pandav Yudhishtir’s coronation
20/36 Jealous Kaurav Duryodhan invites Pandavs to gamble. Yudhishtir loses kingdom, himself, brothers and common wife Draupadi
21/36 Jubilant Kaurav Dushasan tries disrobing haughty Draupadi to humiliate Pandavs but she is rescued by Krishna’s miracle
22/36 Draupadi swears to tie hair after washing it in Dushasan’s blood. Unnerved Kauravs grant Pandavs 1 more game to win back kingdom
23/36 Pandavs lose. Exiled in forest for 13 years. Final year as servants: humiliation as well as lesson in humility
24/36 Exile over. Kauravs refuse to return Pandav land. Peace efforts fail. Pandavs declare war with 7 armies. Kauravs have 11.
25/36 Armies meet at Kurukshetra. Before war, Arjun loses confidence. Krishna gives him perspective (Bhagavad Gita). 18-day war starts
26/36 Bhisma can choose hour of death; blocks victory; lowers bow before transsexual Shikhandi; pinned to ground by Arjun’s arrows
27/36 Drona is next commander; ruthlessly breaks all rules of war; fights at night; gets Abhimanyu and Ghatotkacha killed
28/36 False rumours that his son (or elephant) Ashwatthama is dead makes Drona lower his bow; Dhristadhyumna beheads him
29/36 Karna leads Kauravs despite knowing he is Kunti’s illegitimate abandoned firstborn. Ignorant Pandavs mock his low status
30/36 On Krishna’s advice, Arjun kills unarmed Karna as latter tries to pull out chariot wheel stuck in mud; consumed by guilt later
31/36 Bhim kills all Kauravs; drinks Dushasan’s blood; washes & ties Draupadi’s hair; unlawfully strikes Duryodhan fatally on thigh
32/36 The Pandavs celebrate victory. Ashwatthama sets aflame battle camp at night and kills Draupadi’s 5 sons & 2 bros as they sleep
33/36 Yudhishtir crowned king. Only surviving heir alive is Abhimanyu’s unborn son, Parikshit. Mother, uncle, aunt go to forest to die
34/36 After a long successful reign, Yudhishtir learns of Krishna’s death and renounces kingdom
35/36 Pandavs & Draupadi travel to mountains. All fall to their deaths except Yudhishtir who is granted access to paradise
36/36 Yudhishtir finds Kauravs in paradise! He is furious until he realises: as long as he clings to rage, heaven can never be his.
Image courtesy:
http://annoyzview.files.wordpress.com/
http://www.vaastuinternational.com/