மீன் பிடிக்கக் கற்றுக்கொடுங்கள்!

change minds

‘பொற்காலம்’ படத்தில் வரும் ஒரு பாட்டில் உள்ள வரிகள் இவை. ‘உள்ளம் நல்லா இருந்தா ஊனம் ஒரு குறையில்லை. உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லை.’ இந்த வரிகள் சொல்வது வாழ்க்கை நிஜத்தை.

உடல் குறை என்பது மாற்றுத் திறனாளிகள் பலருக்கு எக்ஸ்ட்ரா உத்வேகத்தை அளித்திருப்பதை பார்த்திருக்கிறேன். தங்களிடம் உள்ள குறையை யாரும் சுட்டிக் காட்டிவிடக்கூடாது என்பதற்காக பலப்பல திறமைகளை வளர்த்துக் கொண்டு, நார்மல் மனிதர்களோடு போட்டி போடும் வலுவை பெற்றிருப்பார்கள். ஆனால், அதையே சாக்காக வைத்துக் கொண்டு தனக்கான வேலைகளைச் கூட செய்யாமல் இருந்த அந்த பெண்ணைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது.

ஈரோட்டைச் சேர்ந்தவர் அவர். போலியா பாதிப்பால் ஒரு காலை சற்று சாய்த்து நடப்பார். வேகமாக நடக்க முடியாது, ஓட முடியாது. பளுவான பொருட்களை தூக்கிக்கொண்டு நடக்க முடியாது. அப்பா இல்லாத பெண், மாற்றுத் திறனாளிப் பெண் என அவரது அம்மாவும் அண்ணனும் அதிகபட்சமாக செல்லம் கொடுக்க அந்த சொகுசில் படிப்பில் கவனம் இல்லாமல் பத்தாவதில் ஃபெயிலாகி அத்தோடு வீட்டில் இருக்க ஆரம்பித்தவர்தான். குடிக்க தண்ணீர் வேண்டுமென்றால் கூட அம்மாவை வேலை வாங்கிக் கொண்டு சீரியலே கதியென்று இருக்க ஆரம்பித்தார். இன்று வயது 40. அண்ணனும் திருமணமாகி வேற்றூருக்குச் சென்றுவிட்டார். அம்மாவுக்கோ வயதாகிவிட்டது. முன்பு போல் வேலை செய்ய முடியவில்லை. அந்த அம்மாவின் கவலையெல்லாம் தனக்கு எதாவது ஆகிவிட்டால் இந்தப் பெண்ணை யார் பார்த்துக் கொள்வார்கள் என்பதுதான். ஆனால், இன்னமும் அந்தப் பெண் அதைப் பற்றிக் கவலைப்படாமல் உடல் பெருத்து, டி.வி. பார்த்துக்கொண்டு, கதை பேசிக்கொண்டு இருக்கிறார்.

செல்லம் கொடுத்ததற்கு பதில் சிறிது கண்டிப்புடன் நல்ல படிப்பையும் தன்னைம்பிக்கையையும் அந்த தாய் கொடுத்திருந்தால் இன்று அவருக்கு அந்த நிலையில்லை. அந்தப் பெண்ணுக்கு இன்னமும் உலகம் புரியவில்லை. தாய் போனபின் எப்படியெல்லாம் அவதிப்படுவாரோ தெரியவில்லை.

னால், காலை தேய்த்து தேய்த்து குழந்தை போல் போகும் இந்த சென்னைப் பெண் உலகம் புரிந்தவர். என்.ஜி.ஓ. ஒன்றில் வேலை பார்க்கும் அவரை பாத்ரூமுக்கு கூட ஒருவர் தூக்கித்தான் செல்ல வேண்டும். ஆனால், வண்டி ஓட்டுவார். அக்கவுன்ட்ஸ் பார்ப்பார். ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் சக தோழிகளுக்கு அருமையாக மெகந்தி போட்டு விடுவார். எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாரிடமும் எப்போதும் மலர்ந்த முகத்தோடு பேசுவார். கடவுள் காலை மட்டும்தான் ஊனமாக கொடுத்திருக்கிறார். கையும் மூளையும் நன்றாகத்தானே இருக்கிறது என்ற யதார்த்தம் இவருக்கு புரிந்த அளவுக்கு ஈரோட்டு பெண்ணுக்குப் புரியவில்லை.

உச்சுக்கொட்டுவதோ, அடுத்தவர்களின் பரிதாபமோ ஒருவரின் வயிற்றுப்பாட்டை தீர்க்காது. சொல்லப்போனால் சாதாரண மனிதர்களுக்கே எந்தவித பாதுகாப்பும் இல்லாத இந்த வாழ்வில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதோடு பொருளாதாரத்துக்கான வழிமுறைகளையும் தேடிக்கொள்ள வேண்டும். அதிலும குறிப்பாக பெண்கள்.

வேலை என்பது வெறும் பொருளாதாரத்துக்கான விஷயம் மட்டுமல்ல. பலப்பல கதவுகளை திறக்கக்கூடிய சாவி அது. விசாலானமான இந்த உலகில் சிதறிக் கிடக்கும் வாய்ப்புகளை தெரிந்து கொள்ள, பலதரப்பட்ட உலக விஷயங்களை புரிந்து கொள்ள கிடைக்கும் வாய்ப்பு அது.

தங்கள் பலகீனத்தை ஒரு குறையாக சொல்லிக்கொண்டு ஒரு சிறிய உலகத்துக்குள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை பல பெண்கள் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சதுரங்க வீராங்களை ஜெனிதா ஆண்டோ தவழ்ந்தே செல்லும் நிலையில் இருப்பவர். ஆஸ்டியோ ஜெனிஸிஸ் இம்பெர்ஃபெக்டா நோயால் பாதிக்கப்பட்டு தானாக எழுந்து நிற்க, உட்கார முடியாத நிலையிலும் சாதித்திருக்கிறார் ஓவியக்கலைஞர் பிரபாவதி. ரிக்கெட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தும் எழுத்துத்துறையில் சாதித்து வருகிறார் சாந்தி ராபர்ட்.

பூர்ணோதயா கலையரசி, அமர் சேவா தொண்டர் முனைவர் சுமதி என இன்னும் இன்னும் எத்தனையோ சகோதரிகள் வலிகளைத் தாண்டி ஜெயித்திருக்கிறார்கள். பார்வையில்லாமல் பட்டம் பெற்றிருக்கிறார்கள் பல தோழிகள்.

வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அது மாற்றுத் திறனாளிகளுக்கு கொஞ்சமல்ல நிறையவே. ஆனாலும் அவர்களைச் சார்ந்தவர்கள் அவர்களுக்கு மீன் பிடித்துக்கொடுக்காமல் மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்கலாம்.. சுய உழைப்பில் உண்ணும் உணவின் ருசியை கற்றுக்கொடுக்கலாம். கல்வி கொடுக்கலாம், கைத்தொழில் கற்று கொடுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நம்பிக்கை விதைகளை கைநிறைய அள்ளிக்கொடுக்க வேண்டும். அதிலும் மாற்றுத் திறனாளி குழந்தை பெண்ணாக இருக்கும் பட்சத்தில் நிறைய தன்னம்பிக்கை கொடுக்க வேண்டியது ரொம்பஅவசியம். ஏன் என்றால் பணத்தைவிட, வசதி வாய்ப்புகளை விட, நம்பிக்கையும் கல்வியும்தான் அவர்களை காலத்துக்கும் காப்பாற்றும். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோரும் உற்றோரும் அவர்தம் வாழ்வில் ஏற்றி வைக்கும் அந்த நம்பிக்கை விளக்கின் வெளிச்சத்தால் பின்னாளில் அப்பிள்ளைகள் பலர் வாழ்வில் விளக்கேற்றுவார்கள்.

– ஸ்ரீதேவி

Image courtesy:

https://changeminds.files.wordpress.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s