– ஷர்மிளா ராஜசேகர்
குப்பை வண்டிகள் பலவிதம்!
டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், சாதா இப்டி நிறைய பேர்ல கவர்ன்மென்ட் பஸ்… இதுங்களுக்கெல்லாம் ஒட்டு மொத்தமா ஒரே பேர் வைக்கலாம். மனிதர்களை குப்பையாக நினைத்து ஏற்றிச் செல்லும் மனிதக் குப்பை வண்டி! இவங்க பஸ்ஸை வாங்கி விடறாங்களா? இல்லை… குப்பையில போட்டதை தேத்தி கொண்டு வர்றாங்களா?’ தெரியல… ஜன்னலை மூட முடியாது. புஷ்பேக் இருக்கக் கூடாது. க்ளீன் பண்ணவே கூடாது. ‘டடடடடா’ ன்னு ஒரு ம்யூசிக் வந்துக்கிட்டே இருக்கணும். எப்டியோ தூங்கிடலாம்னு ட்ரை பண்ணி தூங்க ஆரம்பிச்சா, ஏதோ ஒரு ஹோட்டல்ல நிறுத்தி முழிக்க வச்சுடுவாங்க. மறுபடியும் கொடுமையை அனுபவிக்கணும். பஸ்ல ஒரு ப்ராப்ளம்னு வந்தா அதை சரி பண்ண ஆட்கள் இருக்க மாட்டாங்களா? இல்லை… அப்டி இருந்தாதான் ‘கவர்ன்மென்ட் பஸ்’னு சொல்றதுக்கே மரியாதைன்னு நினைச்சு விட்டுடுறாங்களா?
***
ஊடகங்கள்!
‘கத்தியின் முனையைவிட பேனாவின் முனை கூர்மையானது’. ‘சமுதாயத்தின் நான்காவது தூண்’ என்ற புகழினை உடையவை பத்திரிகைகள்!
‘ஃபேஸ்புக்’, ‘வாட்ஸ்அப்’ என்று நொடிப் பொழுதில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள கம்யூனிகேஷன் எவ்வளவு முன்னேறினாலும் பத்திரிகைகளின் இடத்தைப் பிடிக்க முடிவதில்லை. ஒரு சமுதாயம் முன்னேறவும் மக்களின் நல்வாழ்வுக்கும் பெரும் பங்கு பத்திரிகையாளர்களின் கையில் இருக்கிறது. அரசு அதிகாரிகளோ, அரசோ செய்ய முடியாத நலத்திட்டங்களை செய்ய வைக்க பத்திரிகைகளால் முடியும். மக்களின் மனதை ஒருசேர மாற்றும் சக்தி கொண்டவை பத்திரிக்கைகள். இப்படி மக்களின் வாழ்க்கையை, நாட்டின் வளர்ச்சியை தன்னகத்தே கொண்டிருந்தும் தங்கள் பொறுப்பினை அறியாமல் காசு பார்க்கும் நோக்கில் பல பத்திரிக்கைகள் தவறான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சாபம். பத்திரிகையில் வந்தால் சரியாக இருக்கும் என்று நம்பியிருக்கும் மக்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்! நடுநிலை பத்திரிகைகள், நாட்டு நலனை மட்டுமே கருத்தில் கொண்டுள்ள தொலைக்காட்சிகளின் செயல்பாடு மட்டுமே இனி மக்களை காக்கக்கூடியதாக இருக்கும். இப்போதைய மிகப்பெரிய தேவை நாட்டின் வளர்ச்சிக்கு சரியான வழிகாட்டியாக நல்ல ஊடகங்கள்!
***
Image courtesy:
http://tirunelveli.tamilnaduonline.in
வாசிக்க…