காக்கா முட்டை எனும் தங்க முட்டை!
1.கோடி கோடியா சம்பளத்தைக் கொட்டிகொடுத்து, வெட்டி பஞ்ச் டயலாக் பேச வச்சு வெறுப்பேத்தாம, ரத்தம்… அருவானு அம்பது பேரை ஒரு ஆள் அடிச்சு ஜெயிச்சு பார்க்கறவங்களுக்கு தலைவலி வர வைக்காம, குத்தாட்டம்னு ஒண்ணு இருந்தாதான் ரசிகர்களை ஈர்க்க முடியும்னு நினைச்சு மோசமான ரசனையோட மக்களை எடை போடாம நல்ல படம் எப்படி எடுக்கறதுன்னு எல்லாரும் பார்த்து தெரிஞ்சுக்கணும்.
(தியேட்டர்ல போய் பாருங்க… எப்படி கைதட்டி ரசிக்கறாங்கன்னு. இப்போ ரசிகர்கள் மேல குறை சொல்லுங்க பார்ப்போம்!)
- தங்கள் குணத்துக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லாம நடிகர்கள் நடிக்க, அதுக்கு பாலாபிஷேகம், அடிதடி, முதல்நாளே பார்க்கணும்னு ஏகப்பட்ட பணம் செலவு பண்ணி அவங்களை உயர்த்திவிட்டு, இப்டில்லாம் இல்லாம, எப்படிப்பட்ட படத்தை ரசிக்கலாம்னு மக்கள் இந்தப் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கணும்.
(ரெண்டு பசங்களும் இன்னும் ரெண்டு படம் நடிச்சுட்டா ‘பெரிய காக்கா முட்டை ரசிகர் மன்றம்’, ‘சின்ன காக்கா முட்டை ரசிகர் மன்றம்’னு கொண்டு வந்துடாம இருந்தா சரி.)
- வர வர மக்களை யோசிக்க விடாம, எல்லா டி.வி. சானல்லேயும் மாத்தி மாத்தி கத்திட்டு (பேசிட்டு), அவங்கவங்க ரேட்டிங்கை ஏத்திக்க எவ்வளவு மோசமா இந்த மீடியா இருக்குன்னு புட்டு புட்டு வச்சுருக்காங்க. உள்ள பிரச்னைகளை, அதற்கான சரியான தீர்வை மக்களிடம் கொண்டு போய் சேர்க்காமல், இருக்கறதையும் குழப்பி விட்டுட்டே இருக்க மீடியாஸ்…
நாடு வீணா போறதுக்கு இவங்க எவ்ளோ மோசமான காரணமா இருக்காங்கன்னு இந்த டி.வி.காரங்க பார்த்து தெரிஞ்சுக்கணும்.
4 . எங்கே என்ன பிரச்னை முளைக்கும், எப்படி காசு பார்க்கலாம்னு அலையற அரசியல்வாதிகளையும் உயர்மட்ட ஆட்களையும் அப்படியே காட்சியாக கொண்டு வந்தது அசத்தல்!
அரசியல்வாதின்னா யாரு, எப்டின்னு எல்லாரும் புரிஞ்சுக்கணும்.
5 . இவ்வளவு நாளா அந்த மாதிரி பிள்ளைங்களை பார்க்கும் போது கையேந்துபவர்களாகவும், திருடர்களாகவும் மனதுக்குள் உருவகம் செய்து வைத்த ஒவ்வொருவர் மனநிலையிலும் மாற்றம் கண்டிப்பாக வந்திருக்கும், இந்தப் படம் பார்த்து வெளியில் வரும்போது. இனி அப்டி பிள்ளைங்களை பார்த்தா மறுபடியும் பார்க்கதான் தோணும்.
- ஆயா, அம்மா, அப்பா கேரக்டர்ஸ் ரியலா காட்டினது, அண்ணன் பின்னாடியே போகும் தம்பி கண்ணுக்குள்ளேயே இருக்கும் அழகான சிரிப்பு.
- ‘திருடுறோமா…’, ‘இல்ல, எடுக்கறோம்…’
‘உனக்கொண்ணு, எனக்கொண்ணு, காக்காக்கொண்ணு…’,
‘உனக்கு பிடிக்குதா…’, ‘ம்ஹும்… கொழ கொழன்னு… இதவிட ஆயா சுட்ட தோசையே நல்லா இருந்துச்சு…’
கைதட்டும்படியாக நச்சுன்னு வசனம்…
படத்தைப் பாராட்ட இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இந்தத் தங்க முட்டையை ..!!
ஷர்மிளா ராஜசேகர்
வாசிக்க…