ப்ரியங்களுடன் ப்ரியா–17

உலகம் அழகாகும்

ஒரு பெண்குழந்தை பிறந்தால்!

10505507_712368662134116_517736864291242019_n

எனதுலகம்  அழகாகுதடி
நீ விழி விரிக்கையிலே…
எனது  சிறகுகள் விரியுதடி
நீ தேவதை கனவு காண்கையில…
என் கண்மணி கூட உனை காக்குதடி
நீ மெல்ல அடி வைத்து பழகுகையில் …
என் முத்தாரம் கூட விகசிக்குதடி
நீ முத்தமிடுகையில்…
என் தாய் மொழி அழகு மறக்குதடி
நீ மழலையிலே மிழற்றுகையில்…
என் பாதங்கள் காற்றில் மிதக்குதடி
நீ பாடி ஆடுகையில்…
என் கனவு உன் காவியம் பாடுதடி
நீ கண்ணயர்கையில்…
என் உயிருக்குள் வலிக்குதடி
நீ விழி நீர் சுரக்கையில்…
என் கைகள் தீண்டும் காற்றை கூட வடிகட்டுதடி 
நீ என் கைகளுக்குள் உறங்கையில் …
என் ஆன்மா சிலிர்க்குதடி
நீ அம்மா என்றழைக்கையில் …
என் தாய்மை சிப்பிக்குள்ளிருந்து
தரை தீண்டிய வெண்முத்து நித்திலமே..
என் மழலை சித்திரமே..
கடவுளின் பரிசடி 
நீயெனக்கு என் செல்லமே …

10687199_743530039017978_1219088183025069879_n
உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு!
எல்லா  அப்பாவுக்கும்  இது ஒரு தெய்வீக வார்த்தை. அதுவும் அது பெண் குழந்தையெனும் பட்சத்தில் அவரை விட அதிர்ஷ்டக்காரர் யாருமிருக்கமுடியாது.

நான் பிறந்தும் என் அப்பாவும் அதிர்ஷ்டக்காரர் ஆனார். வைஷு பிறந்தும் என் கணவரும் அதிர்ஷ்டக்காரர் ஆனார்.
இப்படிதான் நானும் அதிர்ஷ்டக்காரி ஆனேன்!

ஆமாங்க…

உங்கள் குழந்தை மகளாக இருக்க நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருக்க வேண்டும். காரணம்…

பெண்குழந்தைகள் தேவதைகள். அந்த தேவதைகள் எல்லா வீட்டிலும் வாசம் செய்வதில்லை…

அதிர்ஷ்ட தேவதைகள் வெள்ளுடையணிந்து, வெண்சிறகடித்து, எப்போதும் வானிலிருந்து வந்திறங்குவதில்லை.

வீடுகளில் மகள்களாகவும் வந்து பிறக்கிறார்கள்!
11008563_835877473116567_5100451327705142025_n

நாம்  எங்காவது வெளியூர் போயிருந்தால் மகள் “எப்பமா  வருவீங்க” என்றும், மகன் ‘என்ன வாங்கீட்டு வருவீங்க’ என்றும் கேட்பதை பொதுவாக எதிர்கொண்டிருக்கலாம். பெண் குழந்தைகள் பொருட்களால் ஆளப்படுவதை விட பாசத்தால் ஆளப்படுபவர்கள்.

எங்க வீட்டில் நான் தீபா – ரெண்டு பேர்தான். நாங்க ரெண்டுபேருமே பெண்ணாகப் பிறந்தில் எங்க உறவுமுறையே சந்தோஷக் கடலில் மூழ்கியது உண்மை. நான் தலைப்பிள்ளை என்பதால் நெறைய சலுகை, சந்தோஷம் என்னைச் சுற்றியே எப்போவுமே இருக்கும்.

இப்போ கூட அப்பா வியாபார, குடும்ப ரீதியாகவோ ஏதேனும் முக்கிய முடிவு செய்வாதாக இருந்தால் எங்க ரெண்டு பேரையும் கலந்து கொள்ளாமல் செய்வது இல்லை. திருமணம் ஆகி 17 வருடம் ஆகியும் இன்னும், ‘சாப்டியா பிரி… எப்படிமா இருக்கே” என்று தினமும் தொலைபேசி அழைப்பு வருவது தவறுவது இல்லை.

10552428_714905481880434_7405080986481281981_n

நான் புகுந்த வீட்டில் பெண்குழந்தைகள் இல்லை. என் கணவரும் அவரின் தம்பியும் மட்டுமே… அந்தக் குடும்பத்திலும் நான்தான் மகள்… செல்ல மகள்!
‘மருமகளாகச் சென்று மகளாக ஆனேன்… கடவுளின் பரிசாக எங்களுக்குப் பிறந்தும் தேவதைதான்…

‘வந்தாள் மகாலட்சுமியே!
இனி என்றும் அவள் ஆட்சியே…’

இப்படி பெண்குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு ஏற்படும் குதுாகலத்தை யாராலும் அளவிட முடியாது.பெண்குழந்தைகளை ‘மகாலட்சுமி’ எனவும் ‘ஆதி பராசக்தி’ எனவும் பலவகை பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு.

10552361_713227718714877_5647803810278893506_n

பழமைவாத உணர்வுகளை ஒரு காலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக் கொண்டு பயணிக்காமல், பெண்ணுக்குப் பெண்ணை எதிரி ஆக்காமல், அவர்களையும் அவர்களின் உள்ளத்தின் உணர்வுகளையும் புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும் நாமும் பயணிக்க வேண்டும்.

இந்தப் பதிவின் நோக்கம் பெண்குழந்தைகளின் சிறப்பை சொல்ல மட்டுமல்ல… அவர்களுக்கான உரிமைகளை பற்றியும் பேசத்தான்!
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் பரவலாக எல்லா நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. பெண்குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது படைப்புகளை அங்கீகரிக்கும் விதமாகவும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாட ஐ.நா சபை 2012ல் முடிவு செய்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவுகட்ட பதின்பருவ பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது இந்த ஆண்டு பெண் குழந்தைகள் தினத்தின் மையக்கருத்தாகும்.
10478536_707577309279918_1817993399449361569_n
நமது அரசின் கீழ் பெண்குழந்தைகள் பயன்பெறும் திட்டங்கள்…
சமூக நலத்துறையின் கீழ் திட்டங்கள் என்னென்ன?
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம், ஈவெரா மணியம்மையார் ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவை மறுமண உதவி திட்டம், தமிழக அரசின் கலப்பு திருமண நிதி உதவி திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், குழந்தைகள் காப்பகம், அரசு சேவை இல்லம் போன்றவை சமூக நலத்துறையின் கீ்ழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் என்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?
பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்டத்தில் ஒரே ஒரு பெண் இருந்தால் ரூ. 22 ஆயிரத்திற்கான வைப்புத் தொகை பத்திரம் சமூக நலத்துறை மூலம் அரசு வழங்குகிறது. இரண்டு பெண் இருந்தால் தலா ரூ.15 ஆயிரத்து 200 வீதம் சம்பந்தப்பட்ட குழந்தையின் பெயரில் வைப்பு தொகை பத்திரம் வழங்கப்படும்.
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற நிபந்தனைகள் என்னென்ன?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்க கூடாது. ஆண் குழந்தையை தத்து எடுக்க கூடாது. பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை இருந்தால் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இரண்டு இருந்தால் ஆண்டு வருமானம் ரூ. 12 ஆயிரத்திற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற எங்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்? என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும்?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சமூக நல அலுவலகம் அல்லது அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுக வேண்டும். விண்ணப்பத்துடன் குழந்தைகள் பிறப்பு சான்றிதழ், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான சான்று, சாதிச் சான்று, பெற்றோர் வயது சான்று, ஆண் வாரிசு இல்லை என்ற சான்று, குடும்ப அட்டையின் நகல், குடும்ப புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
10460347_707949835909332_1835426729873613230_n
பெண் குழந்தைகளுக்கு முதலீடுகள்…
* சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts ) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஜனவரி 22  அன்று தொடங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ, பாதுகாப்பாளரோ குறைந்தபட்ச தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 1,50,000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 9.1 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வுத் தொகையை 21ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம். மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.
* ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலிடு செய்யலாம்.
  • குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாப்பாளர் இக்கணக்கினை தொடங்கலாம்.
* குழந்தைக்கு 10 வயது வரை இந்த கணக்கினை தொடங்கலாம்.
baby 3
பெண் குழந்தைகளுக்கு நாம் கற்று தர வேண்டிய முக்கிய விஷயங்கள் …
மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்..
கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இப்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவளுடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.
வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார் என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

கடை, ஷாப்பிங் என்று அழைத்துச் செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்குச் சொல்லிக்கொடுங்கள்.

நீங்கள் எவ்வளவு தூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள்?
அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள்? அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர்? இதையெல்லாம் அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.
நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னோர் சிறப்புகளையும் அவர் தெரிந்து கொள்ளட்டும் .
உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.
புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.
உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.
இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும்!
10479077_704671519570497_4127134574686631643_n
எனதுலகம்  அழகாகுதடி
நீ விழி விரிக்கையிலே…
எனது  சிறகுகள் விரியுதடி
நீ தேவதை கனவு காண்கையில்…
என் கண்மணி கூட உனை காக்குதடி
நீ மெல்ல அடி வைத்து பழகுகையில்…
என் முத்தாரம் கூட விகசிக்குதடி
நீ முத்தமிடுகையில்…
என் தாய் மொழி அழகு மறக்குதடி
நீ மழலையிலே மிழற்றுகையில்…
என் பாதங்கள் காற்றில் மிதக்குதடி
நீ பாடி ஆடுகையில்…
என் கனவு உன் காவியம் பாடுதடி
நீ கண்ணயர்கையில் …
என் உயிருக்குள் வலிக்குதடி
நீ விழி நீர் சுரக்கையில் …
என் கைகள் தீண்டும் காற்றை கூட வடிகட்டுதடி 
நீ என் கைகளுக்குள் உறங்கையில் …
என் ஆன்மா சிலிர்க்குதடி
நீ அம்மா என்றழைக்கையில் …
என் தாய்மை சிப்பிக்குள்ளிருந்து
தரை தீண்டிய வெண்முத்து நித்திலமே..
என் மழலை சித்திரமே..
கடவுளின் பரிசடி 
நீயெனக்கு என் செல்லமே…
– ப்ரியா கங்காதரன்
20150414_093124

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s