ப்ரியங்களுடன் ப்ரியா–18

மழை தீபாவளி… மழலை தீபாவளி!

d1

மழலையாய்
புத்தாடை அணிந்து
அப்பாவின் கைப்பிடித்து
சாட்டை சுற்றிய 
மத்தாப்பூ தீபாவளி.,!

இளம் வயதில் 
அதிகாலை குளித்து
தன் விருப்பமான உடை அணிந்து
தங்கைக்கு தராமல் 
பட்டாம்பூச்சி  பிடிக்கிற பாவனையில் 
பட்டாசு பற்ற வைத்து தானே வெடித்து 
வேகமாய் ஓடிய தித்திப்பு தீபாவளி..!

கொட்டும் மழையில்
நனைந்தும் நனையாமலும் 
முடிந்த வரை வெடித்து தீர்த்த
மழை தீபாவளி..!

ஆயிரங் கனவுகளோடு அடியெடுத்து வைத்து 
ஆயிரத்தை தாண்டிய ஆழ்மனக் கனவுகளையும் கூட
அழகாய் நிறைவேற்றும் ஆருயிரானவன் 
உடன் இருக்க தலை தீபாவளி..!

தாய்மை தந்து என்னை முழுமை செய்த 
என் முழுமதி வைஷுவின்  முதல் தீபாவளி  …

எனக்கொரு அன்னையாய் மாறிப்போன 
என் மகள் இன்று வெடி வெடிக்க பாதுகாப்பாய் நின்று
கடந்த கால  நினைவுகளை அசை போடும்
ஆனந்த தீபாவளியாய் …

உறவெல்லாம் ஒன்று கூடி 
பிரிவெல்லாம் வெடித்து சிதற 
ஒளி சிந்தும்  சுடரின் நடனம்
தொடரட்டும்  தீபங்களில் ….

என் மகள் இன்று வெடி வெடிக்க பாதுகாப்பாய் நின்று
கடந்த கால  நினைவுகளை அசை போடும்
ஆனந்த தீபாவளியாய் …

உறவெல்லாம் ஒன்று கூடி 
பிரிவெல்லாம் வெடித்து சிதற 
ஒளி சிந்தும்  சுடரின் நடனம்
தொடரட்டும்  தீபங்களில் ….

d3

தீபம் என்றால் விளக்கு, ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்துக்  ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசியன்று தீபாவளியாக   கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்னும் இத்தெய்விகப் பண்டிகை, தீபாலங்காரப் பண்டிகையாக மனைதோறும் மங்களகரமாகக் கொண்டாடப்படுகிறது.

நாகரிக உலகின் நவீன கோமாளிகளாய் நாம் மாறிய பின்னர் நாம் பண்டிகைகள் கொண்டாடும் முறைகளே நிறைய மாறி விட்டன ..

எனக்கு தெரிஞ்சு எங்க வீடுகளில் தீபாவளி என்றால் அதோட கொண்டாட்டங்கள் எல்லாம் ஒரு மாதம் முன்னேரே ஆரம்பிச்சுரும் ..

பாட்டி ,,  அம்மா ,, பெரியம்மா ,, சித்தி ,, அத்தைகள் .. என எல்லோருமே சேர்ந்து ஒரு மாசம் முன்னாடியே பலகார தயாரிப்புகளில் ஈடுபட

வீடே களை கட்டிவிடும் … பள்ளிகூடத்தில் எடுக்க போற துணிகளை பற்றிய கற்பனைகளும் வெடிக்க போகும் வெடிகளை பற்றிய சிந்தையுமே

ஒரு மாதமாய் மனதை கொள்ளை கொள்ளும் ,,,

துணிக்கடைக்கு போறதே ஒரு திருவிழா போலத்தான் எங்களுக்கெல்லாம் … அம்மா இதை எடுத்துக்கவா ,,அப்பா இது நல்லா இருக்கா ? சித்தி இங்கே பாருங்களேன் என்று அங்கையே ஒரு தீப விழா எங்க கண்களுக்குள் நடந்து முடிஞ்சிரும் …

தீபாவளி நெருங்க நெருங்க அதும் முத நாள் இரவில் தூங்காம முழிச்சுவாசலில் அழகாய் கோலமிட்டு  எப்போடா விடியும் என்று விடிஞ்சும் விடியாம நம்ம தெருவில் நாமதான் முத வெடியை வெடிச்சு தீபாவளியை தொடங்கணும் என்று தெருவுக்கு ஓடுவதும் ஒரு சுகம்தான் …

அப்புறம் சுத்தமான தண்ணீரை எடுத்துக் அண்டாவில்  நிரப்பி, சந்தன, குங்கும அட்சதைகளாலும் மலர் களாலும் அலங்கரித்து

பிறகு ஆல், அரசு, புரசு, அத்தி, மாவலிங்கம் ஆகிய ஐந்து மரங்களின் பட்டைகளை யும் தண்ணீரில் சேர்த்துக் கலந்து பாட்டி வெந்நீர் தயார் செய்ய

வீட்டில் உள்ள எங்க எல்லோருக்கும்  நாயுருவிச் செடியினால்  தலையை மூன்று முறை சுற்றி, பிறரது காலடி படாத இடத் தில் அந்தச் செடியினை அப்பா எறிந்துவிட

( இதற்குக் காரணம் என்ன வென்றால், ஒரு சமயம் வேத புருஷனான பிரம்ம தேவனிடம் இருந்து அரக்கர்கள் வேதத்தைத் திருடிச் செல்ல எண்ணினார்கள். உடனே நான்முகன் “அபாமார்க்கம்’ என்று அழைக்கப்படும் நாயுருவிச் செடிகளாக மாறித் தன்னை மறைத்துக் கொண்டார். ஹரி நாராயணன் தோன்றி அரக்கர்களைக் கபடமாக வதம் செய்தார். தீபாவளி புண்ணிய தினத்தில்தான் மேற்படி நிகழ்ச்சியும் நடைபெற்றது. வேத புருஷனையே ரட்சித்த காரணத்தால்தான் நாயுருவிச் செடியை தீபாவளியன்று அதிகாலையில் நாமும் நமது ரட்சையாகப் பயன்படுத்துகிறோம்

இவ்விதம் செய்வதால் நமக்கு ஆத்ம ரக்ஷையும் ஐஸ்வர்யமும் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன )

d2

பிறகு தீபம் ஏற்றி, தைலம், வாசனாதி திரவியப் பொடிகள், லேகியம், புத்தாடைகள், ஆபரணங்கள் முதலியவற்றை பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். கடவுளுக்கு  பூமாலை சார்த்தி நிவேதனம், கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். பிறகு எண்ணெய் தேய்த்துக்கொண்டு, வெந்நீர் கலசத்தை ஒரு பலகையில் வைத்து, மலர்களை சமர்ப்பித்து கைகளைக் கூப்பியபடி கீழ்க்கண்ட சுலோகத் தைக் சொல்லுவோம்

“விஷ்ணோ: பாத ப்ரஸூதாஸி வைஷ்ணவீ விஷ்ணு தேவதா
த்ராஹி நஸ்த்வேனஸஸ் தஸ்மாத் ஆஜன்ம மரணாந்திகாத்
திஸ்ர: கோட்யோர்த்த கோடீச தீர்த்தானாம் வாயுரப்ரவீத்
திவி புவ்யந்தரிக்ஷே ச தானிமே ஸந்து ஜாஹ்னவி’.

இதன் பொருளாவது, “ஹே மாதா! கங்கா தேவி! நீ விஷ்ணுவின் பாதத்தில் தோன்றியதால் வைஷ்ணவியாகவும், விஷ்ணுவை அதிதேவதை யாக உடையவளாகவும் இருக்கிறாய். பிறப்பு முதல் மரணம் வரை உள்ள பாவங்களிலிருந்து எங்களைக் காத்தருள வேண்டும். தேவலோகம், பூமி, அந்தரிக்ஷம் ஆகிய எல்லாவற்றிலுமாக மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்கள் உள்ள தாக வாயு பகவான் கூறியுள்ளார். அவை எல்லாம் தங்கள் கருணையால் எனக்காக இங்கு வந்து அருள வேண்டும்’ என்பதாம்

இதன் பிறகு ஆரம்பம் ஆகும் பாருங்க எங்களோட கொண்டாட்டம் எல்லாம் , புது ட்ரெஸ் போட்டிட்டு பாட்டி ,, அப்பா அம்மா என் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதமும் தீபாவளி காசும் வாங்கிட்டு ,, தெரிஞ்சவங்க ..சொந்தகாரங்க வீடுங்க எல்லாத்துக்கும் பலகாரம் கொண்டுபோய் குடுத்துட்டு அங்கயும் தரும் பலகாரங்கள் சாப்பிட்டு ஆசிகளை வாங்கிட்டு ,, வெடிகளை அள்ளிகிட்டு போய்ட்டு வெடிச்சு  ,, மறுநாள் தீபாவளி லேகியம் சாப்பிடும் வரை உள்ள அனுபவங்களை இப்போ நினைச்சாலும் நெஞ்சில் தித்திப்பு வருது ,,,

ஆனா இப்போதைய கால கட்டத்தில் தீபாவளி என்பது கடந்து போகும் நாட்களில் ஒரு விடுமுறை தினமாக மாறியதில் மிகவும் வருத்தமே ..

இன்ஸ்டன்ட் பலகாரம் .. ஆன்லைன் துணிகள் .. சம்பிராதய குளியல் … தொடந்து விடுமுறை தின சிறப்பு நிகழ்சிகள் என சுருங்கி போனது நமது கலாச்சாரம் எல்லாமே ..

வாழ்க்கையில் பலவித சோதனைகளும், இன்ப துன்பங்களும் மாறி மாறி வருவதால் நம்ம எல்லோருக்குமே வாழ்க்கை அலுத்துவிடுகிறது. வழிநெடுக நடந்து களைத்துப் போனவன் தாகசாந்தி செய்து சற்றே இளைப்பாறுவது போலத்தான் வருடத்தில் சில ,பண்டிகைகள் என்று மனித குலம் குதூகலித்துக் கொள்கிறது.

வாழ்க்கையில் அலுப்புத் தட்டாமல் இருப்பதற்கும், அதே சமயத்தில் ஆன்மிகத்திலும், இறைபக்தியிலும் மனம் ஈடுபடுவதற்காகவுமே பல பண்டிகைகளை நமது ஆன்றோர்களும், சான்றோர்களும் நிர்ணயித்து உள்ளனர். அதை இப்போதெல்லாம் வியாபார யுக்தியில் மட்டுமே பயன்படுத்துவது கொஞ்சம்  கஷ்டமாகதான்  இருக்கிறது..

நம்ம இந்தியாவில் நாம் கொண்டாடும் ஒவ்வொரு விழாவிற்கும் பின்னால் ஒரு வரலாறு இருப்பது இப்போதைய தலைமுறை தெரிந்து கொள்ளாமல் இருப்பது பெரிய தவறு ..

அதை தெரியபடுத்தாமல் நாம் இருப்பது மிக பெரிய தவறு …

நினைச்சாலும் நெஞ்சில் தித்திப்பு வருது ,,,

ஆனா இப்போதைய கால கட்டத்தில் தீபாவளி என்பது கடந்து போகும் நாட்களில் ஒரு விடுமுறை தினமாக மாறியதில் மிகவும் வருத்தமே ..

இன்ஸ்டன்ட் பலகாரம் .. ஆன்லைன் துணிகள் .. சம்பிராதய குளியல் … தொடந்து விடுமுறை தின சிறப்பு நிகழ்சிகள் என சுருங்கி போனது நமது கலாச்சாரம் எல்லாமே ..

வாழ்க்கையில் பலவித சோதனைகளும், இன்ப துன்பங்களும் மாறி மாறி வருவதால் நம்ம எல்லோருக்குமே வாழ்க்கை அலுத்துவிடுகிறது. வழிநெடுக நடந்து களைத்துப் போனவன் தாகசாந்தி செய்து சற்றே இளைப்பாறுவது போலத்தான் வருடத்தில் சில ,பண்டிகைகள் என்று மனித குலம் குதூகலித்துக் கொள்கிறது.

வாழ்க்கையில் அலுப்புத் தட்டாமல் இருப்பதற்கும், அதே சமயத்தில் ஆன்மிகத்திலும், இறைபக்தியிலும் மனம் ஈடுபடுவதற்காகவுமே பல பண்டிகைகளை நமது ஆன்றோர்களும், சான்றோர்களும் நிர்ணயித்து உள்ளனர். அதை இப்போதெல்லாம் வியாபார யுக்தியில் மட்டுமே பயன்படுத்துவது கொஞ்சம்  கஷ்டமாகதான்  இருக்கிறது..

நம்ம இந்தியாவில் நாம் கொண்டாடும் ஒவ்வொரு விழாவிற்கும் பின்னால் ஒரு வரலாறு இருப்பது இப்போதைய தலைமுறை தெரிந்து கொள்ளாமல் இருப்பது பெரிய தவறு ..

அதை தெரியபடுத்தாமல் நாம் இருப்பது மிக பெரிய தவறு …

தீபாவளி கொண்டாட  வேறு பல காரணங்களும் உள்ளதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றது..

1. திருப்பாற்கடலை அமிர்தம் பெறுவதற்குக் கடைந்தபொழுது தோன்றியவர் இலட்சுமி. இவர் செல்வத்தைத் தரும் தேவி. விஷ்ணுவின் சத்தியாக அமைந்தவர். இவர் இவ்வாறு திருப்பாற்கடலில் இருந்து இலட்சுமி தோன்றிய நாள் தீபாவளி என்று கூறுவர்.

2. பாண்டவர்கள் வனவாசம் முடிந்து பாரத யுத்தத்தில் வெற்றி பெற்று மீண்டும் தமது அத்தினாபுரம் மீண்ட நாள் தீபாவளி என்று கூறுவர்.

3. விக்கிரமாதித்த மகாராஜா முடி சூடிய நாள் தீபாவளி என்பர்.

4. சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரர் பரிநிர்வாணம் அடைந்த நாள் தீபாவளி என்று சமணர்கள் கொண்டாடுகின்றார்கள்.

5. சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த சிங் அவர்கள் அவுரங்க சீப் மன்னனுடைய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாள் தீபாவளி என்பர்.

6. இதேபோல இதற்கு முந்திய சீக்கிய குருவான ஹார்கோபிந்த் சிங் அவர்கள் ஜஹாங்கீர் மன்னனுடைய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாள் கி.பி. 1619ம் ஆண்டின் தீபாவளி தினமாகும்.

7. இதேபோல இந்தியாவில் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் கி.பி 1577ம் ஆண்டு தீபாவளி நாளாகும். இவ்வாறு பல காரணங்களுக்காக சீக்கிய மதத்தவர்களும் தீபாவளியைச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். தீபாவளிக்காக சீக்கியர்களின் பொற்கோவில் ஒவ்வொரு வருடமும் விளக்குகளால் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்படுவது வழமை.

8. இந்தியாவில் உள்ள பௌத்தர்களும்கூட கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி விளங்குகின்றது.

9. 1999 இல் கத்தோலிக்க மதத்தின் புனித போப்பாண்டவர் இந்தியாவிக்கு விஜயம் செய்தபோது அவர் பிரசங்கம் செய்த தேவாலயம் தீபாவளிப் பண்டிக்கைக்காக தீப அலங்காரங்களால் அலங்கரிக்ப்பட்டிருந்ததுடன் போப்பாண்டவர் நெற்றியில் திலகமிட்டு வரவேற்கப்பட்டார். அவருடைய உரையிலும் போப்பாண்டவர் தீபாவளியைக் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

10. வட இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளியை இராமர் வனவாசத்தில் இருந்து மீண்டும் அயோத்திக்கு திரும்பிய நாளாகக் கொண்டாடி அதையே புது வருடப்பிறப்பாகக் கொண்டாடுவர். ஆங்கில புதுவருடம் போலவே இதற்கும் எந்தவிதமான வானியல் கணித விஞ்ஞான அடிப்படையோ ஆதாரமோ அல்லது ஆகம நூல்களின் ஆதாரமோ இல்லை என்பது இங்கு நோக்கத்தக்கது. உண்மையில் இராமர் வனவாசம் முடிந்து அயோத்தி நகருக்குத் திரும்பியது சித்திரை மாதத்து வளர்பிறை சஷ்டி நாள் என்றும் அதற்கு அடுத்த நாளான சப்தமியில் அவர் முடி சூடினார் என்றும் வான்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 127ம் சர்க்கம் கூறுகின்றது. இராமர் மீண்டும் நாடு திரும்பிய நாள்தான் புதுவருடப் பிறப்பு என்றால் இது நாம் புதுவருடம் கொண்டாடுகின்ற சித்திரை மாதத்தில்தான் வர வேண்டும்…

அப்படியே வெடி வெடிப்பதை பற்றியும் ஒரு பார்வை பார்த்து விடுவோமா ??

முன்னாடி எல்லாம்  மாடி வீடுகள் அதிகம் இல்லை. திறந்த வெளிகள் நிறைய இருந்தன, அதனால புகை வானத்தில் போக வசதியாக இருந்தது. இப்போது பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் வந்து அடைத்துக் கொண்டு விட்டன. சில பதினாறு மாடிகள் வரை உயர்ந்து நிற்கின்றன. ஆகையால் இந்தப்ப புகை மண்டலம் கீழேயே அதிகம் சூழ்ந்து கொள்கிறது. ஆனாலும் திருநாள் என்றால் வெடி இல்லாமலா ?

தீபாவளிப் பண்டிகைக்குக் காரணாமான நரகாசுரனே தன் மரணத்தை வாண வேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படிக் கேட்டுக் கொண்டானாம், ஏன் என்றால் அவனுக்குக் கடைசியில் கண்ணன் அல்லவா காட்சி அளித்தார்?

 பட்டாசு கொளுத்தும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் விபத்து நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச்சுற்றி இருப்பவருக்கும் வருவது உண்டு. மகிழ்ச்சியுடன் இருக்கும் வேளை வருத்தத்தைக் கொடுத்து விடும். பெரிய வெடிகளை   பெரியவர்கள் துணையுடன் அல்லது அவர்கள் மேற்பார்வையில் தான் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது நீண்ட ஊதுவத்தி ஏற்றி நேருக்கு நேர் நிற்காமல் சாய்ந்தவாட்டில் நின்று கொளுத்த வேண்டும். நைலான் ஆடை அல்லது பட்டாடை தவிர்க்க வேண்டும். பட்டாசு விடும் போது ஒரு கர்ச்சீப்பை நனைத்து முகத்தில் முகமூடி போல் கட்டிக் கொள்வது நல்லது, ஆஸ்த்மாகாரர்களுக்கு இப்படிச் செய்வது மிகவும் அவ்சியம். எதை ஏற்றினாலும் அது முடிந்தவுடன் ஒரு பக்கெட் தண்ணீரில் போட்டுவிட வேண்டும். சுடச்சுடக் கீழே போட்டுவிட்டு அதைத் தவறிப் போய் யாராவது மிதித்துப் பின், “ஆ சுட்டுவிட்டதே எரியறதே!” என்று அலறுவதைத் தவிர்க்கலாமே. பட்டாசு வெடிக்கும் போது அருகில் கார், ஸ்கூட்டர் இல்லாமல் இருப்பது நல்லது. பெட்ரோல், டீசல் போன்றதிலிருந்து தூரமாக இருப்பது நல்லது தானே! வீட்டில் நோயாளிகள் அல்லது வயதானவர்கள் இருந்தால், அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அங்கு வெடிக்காதீர்கள். பாவம், நோயால் அவதிப் படும்போது இதனால் இன்னும் சிரமம் ஏற்படலாம். அதே போல் சின்னப் பாப்பா இருந்தாலும் அந்த வெடிச் சத்தத்தில் அதன் உடல் தூக்கித் தூக்கிப் போடும், அதன் அருகில் வேண்டாமே!

சில ஏழைக் குழந்தைகள் ஏக்கமாகத் தானும் விடமாட்டோமே என்று பார்த்துக் கொண்டு நிற்பார்கள். அவர்களுக்கும் திறநத மனதுடன் பாட்டாசுகளைக் கொடுங்கள். உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள், அவர்களுக்கு நாம் மகிழ்ச்சி கொடுக்க நம் மனமும் மகிழும்.

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 முதல் இரவு 10 வரை. பொது இடங்களில் பொது வழிகளில் வெடிக்கக்கூடாது. சுற்றுப்புறச்சூழல் விதிப்படி வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசை வெடிக்கக் கூடாது.

தவறிப்போய் உடையில் தீப்பற்றினால் ஓடக்கூடாது. ஒருவரையும் பயத்தில் அணைக்கக்கூடாது. உடனே கீழே படுத்து உருள வேண்டும். தீப்புண் மேல் குளிர்ந்த நீரை ஊற்றி மெல்லிய காட்டன் துணியினால் மூட வேண்டும். பின் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும். தன் இஷ்டப்படி மருந்துகளை அதன் மேல் தடவக்கூடாது …

நம் பாதுகாப்பை நாம்தான் உறுதி செஞ்சுக்கணும் .. முடிஞ்சா பட்டாசு வெடிப்பதை குறைச்சு நம்ம ஊரு மாசுபடாமல் வச்சுக்குவோம் ..

இப்படியே எல்லோரும் நினைச்சு  ஊரு, நாடு முழுதும் புகையில்லாத தீபாவளி கொண்டாடினால் நாட்டுக்கும்.. நம்ம நலனுக்கும் ரொம்ப நல்லது ..

உலகத்தில்  உள்ள ஒளிகள் அனைத்தையும்விட, நம் உள்ளத்தில் ஒளிஏற்றுவதே உண்மையான தீபாவளியாகும். வாழ்வில் எத்தனையோ தீபாவளிகள் போய்விட்டாலும் நம் மனதில் இருளைப் போக்க முயற்சிக்காவிட்டால் புறத்தில் ஏற்றப்படும் விளக்குகளால் பயனில்லை.

நம் இதயங்களில் இருக்கும் அறியாமை இருளை அகற்றி, அறிவாகிய ஒளிச்சுடரை ஏற்றி வைப்பதே பயனுடையதாகும். தீபாவளி நன்னாளில் நம் அறிவு கடவுள் அருளால் ஒளிமயமானதாகட்டும் , வாழ்வியலுக்குத் தேவையான பொருள் வளத்தையும், ஆன்மிகத்திற்கு தேவை யான அருள் செல்வத்தையும் இந்நாளில் பெற்று மகிழ்வோமாக.

d4

மழலையாய்
புத்தாடை அணிந்து
அப்பாவின் கைப்பிடித்து
சாட்டை சுற்றிய
மத்தாப்பூ தீபாவளி.,!

இளம் வயதில்
அதிகாலை குளித்து
தன் விருப்பமான உடை அணிந்து
தங்கைக்கு தராமல்
பட்டாம்பூச்சி  பிடிக்கிற பாவனையில்
பட்டாசு பற்ற வைத்து தானே வெடித்து
வேகமாய் ஓடிய தித்திப்பு தீபாவளி..!

கொட்டும் மழையில்
நனைந்தும் நனையாமலும்
முடிந்த வரை வெடித்து தீர்த்த
மழை தீபாவளி..!

ஆயிரங் கனவுகளோடு அடியெடுத்து வைத்து
ஆயிரத்தை தாண்டிய ஆழ்மனக் கனவுகளையும் கூட
அழகாய் நிறைவேற்றும் ஆருயிரானவன்
உடன் இருக்க தலை தீபாவளி..!

தாய்மை தந்து என்னை முழுமை செய்த
என் முழுமதி வைஷுவின்  முதல் தீபாவளி  …

எனக்கொரு அன்னையாய் மாறிப்போன
என் மகள் இன்று வெடி வெடிக்க பாதுகாப்பாய் நின்று
கடந்த கால  நினைவுகளை அசை போடும்
ஆனந்த தீபாவளியாய் …

உறவெல்லாம் ஒன்று கூடி
பிரிவெல்லாம் வெடித்து சிதற
ஒளி சிந்தும்  சுடரின் நடனம்
தொடரட்டும்  தீபங்களில் ….

வாழ்க வளமுடன் …
இனிய தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்…

  • ப்ரியா கங்காதரன்

IMG-20151107-WA0021

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s