வரம் கிடைக்காத குழந்தைகள்!

Image

(உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7)

உலகிலேயே மிகக் குறைந்த காலத்துக்கு தாய்ப்பால் வரம் கிடைக்கப் பெற்ற குழந்தைகள் வாழும் நாடு, இங்கிலாந்து. ‘இங்கிலாந்தில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான தாய்மார்கள், பிரசவத்துக்குப் பிறகு 6 வாரத்துக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பதில்லை’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதனால் அவர்களுக்குத் தங்கள் குழந்தைகளின் மேல் அக்கறையில்லை என்று அர்த்தமில்லை. தாய்ப்பாலின் அருமை அவர்களுக்குப் புரியவில்லை என்றுதான் அர்த்தம்.

‘உலகம் முழுக்க சத்துக் குறைபாடு காரணமாக, 5 வயதுக்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 3 கோடியே பத்து லட்சம். அந்தக் குழந்தைகளில் பாதி முதல் நான்கு வாரத்துக்குள் (28 நாட்களில்) இறந்து போகின்றன’ என்று குறிப்பிட்டிருக்கிறது யுனிசெஃப் அறிக்கை ஒன்று. தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு ஏற்படாது. பல உடல்நலக் கோளாறுகள் நெருங்காது. இதை பழைய பதிவுகளில் திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டோம். நல்ல விஷயத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம்தானே!

பல பெண்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும் ஆதாரச் சிக்கல், பயம்! அழகு குறைந்து போகும், நம் சக்தி போய்விடும் என்கிற பயம். சில பெண்களுக்கு போதுமான அளவுக்குப் பால் இருக்குமோ, இருக்காதோ என்கிற நம்பிக்கை இன்மை. இவர்களுக்கெல்லாம் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு இல்லை. சரியான வழிகாட்டுதல் இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் மருத்துவரையோ, செவிலியரையோ அணுகினால் போதும், சந்தேகங்களைத் தீர்த்து வைத்து உதவுவார்கள்.  

பிரசவத்துக்குப் பிறகு கட்டாயமாக 6 மாத காலத்துக்கும், அதன் பின் 2 வயது வரைக்கும் மற்ற சத்தான உணவுகளுடனும் தாய்ப்பாலை குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் புகட்டுவது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது. எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைக்கும் அம்மாவுக்கும் இடையே ஒரு ஆழமான நெருக்கத்தையும் பிரிக்க முடியாத பந்தத்தையும் ஏற்படுத்துவது தாய்ப்பால்தான்.

Image

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (American Academy of Pediatrics) அமைப்பு, தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு ஏற்படும் சில நன்மைகளைப் பட்டியலிட்டிருக்கிறது. அவை…

 • காது தொற்று நோய்கள் (Ear Infections) ஏற்படாது.
 • வயிற்றுப் போக்கு வராமல் தடுக்கும்.
 • நிமோனியா காய்ச்சல், மூச்சுத் திணறல், மூச்சு நுண்குழாய் அழற்சி (Bronchiolitis) வராது.
 • இரைப்பை, குடல் அழற்சி நோய்கள் (Gastrointestinal) நெருங்காது.
 • சிறுநீர்ப்பை தொற்று நோய்கள் (Urinary Tract infections) உண்டாகாது.
 • மூளைக்காய்ச்சல் (Meningitis) நோயும் மற்ற பாக்டீரியா,  வைரஸ் தொற்று நோய்களும் ஏற்படாது.
 • ரத்தத்தில் நச்சுப் பொருட்களோ, சீழோ (Sepsis) ஏற்படாமல் தடுக்கும்.
 • பிற்காலத்தில் ‘டைப் – 1’ மற்றும் ‘டைப் – 2’ நீரிழிவு நோய் ஏற்படாது.
 • நிணநீர் திசுக்கட்டி (Lymphoma), வெள்ளணுப்புற்று (Leukemia) நோய்கள் ஏற்படாது.
 • குழந்தைப் பருவத்தில் ஏற்படும் அதிக எடை, உடல் பருமன் பிரச்னைகள் நெருங்காது.
 • அம்மாக்களுக்கு…
 • பிரசவத்துக்கு முன்பிருந்த அதே அளவுக்கு கருப்பை வெகு விரைவாகத் திரும்பும்.
 • மாதவிலக்கு தாமதமாகி, தாயின் உடலில் இரும்புச்சத்து சேருவதற்கு உதவும்.
 • வெகு விரைவிலேயே பிரசவத்துக்கு முந்தைய எடைக்குத் தாய் திரும்ப முடியும்.
 • எலும்புகள் வலுவடையும்.
 • மார்பகப்புற்று நோய், மற்றும் கருப்பைக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு வெகுவாகக் குறைக்கப்படும்.

குழந்தையின் உயிரைக் காப்பாற்றும், குழந்தை ஆரோக்கியமாக வளர உதவும் தாய்ப்பால், ‘அமுதம்’ என்பதில் சந்தேகமில்லை. தாய்ப்பாலின் மகத்துவத்தை ஒவ்வொரு அன்னைக்கும் உணர்த்துவோம். அந்த அமுதத்தைப் போற்றுவோம்! 

Image Credit: kootation.com

–  பாலு சத்யா 

அமுதம் – 6

நிஜம் நாடகமாகிறது!

Image

யேல் ஃபார்பர் (Yael Farber). தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நாடக இயக்குநர். நாடக ஆசிரியர். தன் படைப்புகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றவர். இவருடைய சமீபத்திய நாடகம், பார்த்தவர்களை உலுக்கிப் போட்டிருக்கிறது. கதற வைத்திருக்கிறது. கலங்கடித்திருக்கிறது. நாடகத்தின் பெயர், ‘நிர்பயா’. கடந்த டிசம்பரில், டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி அநியாயமாக உயிரை இழந்த அதே மாணவியின் கதைதான் நாடகத்தின் கருப்பொருள்.

ஸ்காட்லாந்தில் நடக்கும் ‘எடிபர்க் ஃபெஸ்டிவல் ஃபிரின்ச்’ (Edinburg Festival Fringe) கலைவிழா உலகப் புகழ் பெற்றது. உலகின் சிறந்த கலைஞர்களும் நாடக விற்பன்னர்களும் பங்கேற்கும் முக்கியமான ஒரு விழா. அதே போல உலகின் பல பகுதிகளில் இருந்து இந்த விழாவைக் காண்பதற்காகவே வரும் பார்வையாளர்களும் அதிகம். கடந்த வாரக் கடைசியில், அந்த விழாவில் ‘நிர்பயா’ நாடகத்தை மேடை ஏற்றினார் ஃபிரிஞ்ச். பலத்த வரவேற்பைப் பெற்றதோடு பார்த்தவர்களை அதிர வைத்திருக்கிறது ‘நிர்பயா’.

‘‘பாலியல் பலாத்காரம் என்பது இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்கும் இருக்கும் ஒரு பொது வியாதி. ஆனால், நிர்ப்பயாவுக்கு நிகழ்ந்த கொடுமை நம் ஒவ்வொருவரையும் துளைத்தெடுக்கும் சக்தி படைத்தது. இது போன்ற பாலியல் வன்முறைகள் குறித்தான மௌனத்தை உடைக்க, இந்த நிகழ்வை முன் வைத்து இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியிருக்கிறார்கள்’’ என்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் ஃபார்பர்.

Image

‘நிர்ப்பயா’ நாடகத்தின் கருப்பொருள் மிகச் சிறியது. மேடையில் ஐந்து பெண்கள் தோன்றுகிறார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் வன்முறைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அதே நேரம், நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடுமை தங்கள் மௌனத்தை எப்படி உடைத்தது என்பதையும் விவரிக்கிறார்கள். இந்திய மாணவி ‘நிர்பயா’ (கற்பனைப் பெயர்) பஸ்ஸில் ஏறியது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, வன்முறைக்கு ஆளானது, இறந்தது ஆகிய நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இந்நாடகம். நிர்பயாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் இந்தியாவில் இந்நாடகத்தை அரங்கேற்றவும் முடிவு செய்திருக்கிறார் ஃபார்பர்.

மாணவி நிர்பயா, உலகெங்கும் அன்றாடம் பெண்களுக்கெதிராக  நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு உதாரணம். ‘நிர்பயா’ நாடகம், இனிமேலாவது இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக மக்களை உணர வைத்திருக்கும் ஆவணம்!

– பாலு சத்யா 

சென்னிமலை தெய்வம்!

Image

‘கந்தர் சஷ்டி கவசம்’ அரங்கேறிய இடம் ‘சென்னிமலை’ என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். இன்னும் பல சிறப்புகளையும் பெற்றிருக்கிறது இத்தலம். முருகப்பெருமானுக்குரிய பதினாறு மூர்த்தங்களும் இக்கோயிலில் காணப்படுவது தனிச்சிறப்புடையது.

புராண வரலாறு

ஒருமுறை ‘அனந்தன்’ என்ற நாகார்ஜுனனுக்கும் வாயு தேவனுக்கும் பலப்பரீட்சை நடந்தது. அனந்தன், மகாமேரு பர்வதத்தை சுற்றிப் பிடித்துக் கொள்ள, வாயுதேவன் தன் பலத்தை (காற்றை) கடுமையாக வீசி, அனந்தன் பிடியிலிருந்து மேருமலையை விடுவிக்க முயன்றார். மேருமலையின் சிகரப்பகுதி முறிந்து, பறந்து சென்று பூந்துறை நாட்டில் விழுந்தது. அதுவே ‘சிரகிரி’, ‘சிகரகிரி’, ‘புஷ்பகிரி’, ‘மகுடகிரி’, ‘சென்னிமலை’ என்றானது. அந்த வகையில், மேருமலையின் ஒரு பகுதியாக சென்னிமலை கருதப்படுகிறது.

இங்குள்ள ஆற்றின் கரையில் ‘கொடுமணல்’ என்ற கிராமம், ஒரு காலத்தில் பெருநகரமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அங்கு வாழ்ந்த ஒருவரின் காராம்பசு ஓர் இடத்தில் தினமும் பாலைச் சொரிந்திருக்கிறது. அந்த இடத்தை தோண்டிப் பார்த்தார்கள். பூரணப் பொலிவுடன் கூடிய முருகப்பெருமானின் கற்சிலை கிடைத்தது. இடுப்பு வரைக்கும் நல்ல வேலைப்பாடுகளுடனும் இடுப்புக்குக் கீழ் சரியான வேலைப்பாடுகள் இல்லாமலும் இருந்தது முருகன் சிலை. அதனை சரி செய்ய முயற்சித்திருக்கிறார்கள் ஊர்க்காரர்கள். அதன் மேல் உளிபட்டதும் ரத்தம் பீரிட்டதாம். அதனால் அதை அப்படியே விட்டு விட்டார்களாம். இன்று வரை இங்கிருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணியின் திருவுருவம் இடுப்பு வரை நல்லவேலைப்பாடுகளுடனும் இடுப்புக்கு கீழே வேலைப்பாடற்றும் காணப்படுகிறது.

‘பின்னாக்குச் சித்தர்’ வாழ்ந்து முக்தி அடைந்த திருத்தலம் இது. கோயிலைத் தாண்டி மேலே ஏறிச் சென்றால் இவர் சமாதி இருப்பதைக் காணலாம். இது, ‘தன்னாசி கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.

நவக்கிரகக் கோயில்

இங்கு மூலவர், ‘சென்னிமலை ஆண்டவர்’ நடுநாயகமாக ‘செவ்வாய்கிரகமாக’ அமைந்து, மற்ற எட்டுகிரகங்களும் ‘தேவ கோஷ்டங்களில்’ அமர்ந்துள்ளதால், மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவக்கிரகங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.

Image

வள்ளி, தெய்வானை இருவரும், ‘அமிர்தவல்லி’, ‘சுந்தரவள்ளி’ என்ற பெயர்களுடன், இரு உருவங்களாக ஓரே கல்லில் பிரபையுடன் அமைக்கப்பட்டு, தனிப்பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். இந்த சிறப்பம்சம் வேறு எங்கும் இல்லை.

அருணகிரி நாதர் ‘திருப்புகழ்’ பாடி மகிழ்வித்து முருகப் பெருமானிடம் ‘படிக்காசு’ பெற்ற திருத்தலமும் இதுதான்.

இங்கு, இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இமையன் தீர்த்தம், காசியப தீர்த்தம், பட்சி தீர்த்தம், சிவகங்கை, மாமாங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர், வாவி விஷ்ணு தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்கண்டேய தீர்த்தம் (தெப்பக்குளம்) முதலிய பல தீர்த்தங்கள் உள்ளன.

அவற்றுள் ‘மாமாங்க தீர்த்தம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மலைக்கோயிலுக்கு தென்புறம் அமர்ந்துள்ள ‘மாமாங்க தீர்த்த விநாயகர்’ முன்பு பொங்கி வழிந்தோடுமாம்.

அதேபோல் இங்குள்ள ‘மார்கண்டேய தீர்த்த’த்தில் நீராடினால் இளமை நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

மலையில் பல சித்திப் பொருட்கள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

இங்கள்ள காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சன்னதியில் கீழே உள்ள புளியமரத்தின் அடியில் ‘சந்தானகரணி’ என்னும் சித்திப்பொருள் உள்ளது. சஷ்டி விரதம் இருந்து இங்கு கொடுக்கும் பிரசாதத்தை உண்டால், பிள்ளைப்பேறு கிடைக்கும் என்கிறார்கள்.

மலையில் வெண்சாரை, வெண்தவளை காணாச்சுனை, கையாத எட்டி, கருநொச்சி முதலிய சஞ்சீவி மூலிகைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தண்டாயுதபாணி திருக்கோலத்திலுள்ள முருகனுக்கு ‘நைவேத்தியம்’ முடிந்த பிறகே சந்நதி விநாயகருக்கு பூஜை. ஏனென்றால், பழத்தின் பொருட்டு கோபித்துக் கொண்டு மலை மேல் இருப்பதால் அவரை சாந்தப்படுத்தவாம். தொன்று தொட்டு இங்கே பூஜைகள் இப்படித்தான் நடக்கின்றன.

ஆடிக்கிருத்திகையில் அவனருளால் அவன் தாள் வணங்கி, சென்னிமலையை வலம் வந்து அவனருள் பெறுவோமாக!

– திஷானி   

 

பட்டடா வடா

Image

பட்டடா வடா (Batata Vada). இதற்குப் பூர்விகம் என்னவோ மகாராஷ்டிராதான். ஆனால், வட இந்தியா முழுக்க இந்த டேஸ்டி உணவுக்கு ரசிகர்கள் ஏராளம். வட இந்தியா பக்கம் ரயிலில் பயணம் செய்தவர்கள் நிச்சயம் இதை சுவைத்திருப்பார்கள். மராத்தியில் ‘பட்டடா’ என்றால் உருளைக்கிழங்கு என்று பொருள். நம் ஊர் உருளைக்கிழங்கு போண்டா மாதிரிதான். என்ன… தொட்டுக்கொள்ள மிளகாயும் பிரத்யேக துவையலும் சுவையை மாற்றிவிடும். மும்பை தெருக்களில் உள்ள கடைகளில் அதிகம் பார்க்கலாம். உருளைக்கிழங்கு பூரணம் வைக்கும் முறை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. மகாராஷ்டிராவுக்குள்ளேயே பூனாவில் ஒரு சுவையும் நாசிக்கில் ஒரு சுவையுமாக இருப்பதற்கு அதுதான் காரணம். மழைக்கால மாலையில் சுடச்சுட பட்டடா வடா சாப்பிடுவது… சுகானுபவம்!

என்னென்ன தேவை?

வேக வைத்த பெரிய சைஸ் உருளைக்கிழங்கு – 4, பச்சை மிளகாய் – 6 (விழுது), இஞ்சி, பூண்டு விழுது – 1½ டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – பொரிப்பதற்கு.

தாளிக்க…

எண்ணெய் – 2 அல்லது 3 டீஸ்பூன், கடுகு – ¼ டீஸ்பூன், சீரகம் – ¼ டீஸ்பூன், பெருங்காயம் – சிறு விள்ளல், மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

மேல் மாவுக்கு…

கொண்டைக்கடலை மாவு – 1 கப், தண்ணீர் – ¾ அல்லது 1 கப், மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பேக்கிங் சோடா – சிறிது.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை நன்கு மசிக்கவும். மிகவும் குழைவாக இருக்கக்கூடாது. வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி, பூண்டு விழுது போட்டு 10 வினாடிகள் வதக்கவும். அதன் மேல் மசித்த உருளைக்கிழங்கைக் கொட்டவும். எலுமிச்சைச்சாறு, தேவையான உப்பு சேர்க்கவும். வாணலியை இறக்கி, உருளைக்கிழங்கு கலவையை நன்கு பிசைந்து, 1 ½ இஞ்ச் அளவு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

மேல் மாவு செய்யும் முறை…

ஒரு கிண்ணத்தில் கொண்டைக்கடலை மாவை எடுத்துக் கொள்ளவும். அதோடு தேவையான அளவு உப்பையும் மஞ்சள் தூளையும் சேர்க்கவும். தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும்.

அடுப்பில் கடாயை ஏற்றி, எண்ணெய் ஊற்றிக் காயவிடவும். பொரிக்கும் அளவுக்கு காய்ந்ததும், மேல் மாவில் உருளைக்கிழங்கு உருண்டைகளைத் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். ஒரே நேரத்தில் 2 அல்லது 3 உருண்டைகளைப் பொரித்தெடுக்கலாம். சுடச்சுடப் பரிமாறவும்.

– மேகலா பாலசுப்ரமணியன்

கவிதையும் கவிதையும் – 8

கமலா தாஸ் கவிதை

Image

கற்காலம்

 

பிரியமுள்ள கணவன், பழமையில் குடியேறியவனின் மனதில்

வயதான பருத்த சிலந்தி, வலைகளைப் பின்னுகிறது குழப்பத்துடன்

அனுதாபம் காட்டு!

நீ என்னைக் கற்பறவையாக மாற்றினாய்,

கருங்கல் பறவையாய்

என்னைச் சுற்றி வெறுக்கத்தக்க அறையைக் கட்டினாய்.

நீ வாசிக்கையில்

கவனமின்றி அம்மைத்தழும்பு நிறைந்த முகத்தில் அடித்தாய்

உரத்த பேச்சுடன் நீ

எனது அதிகாலை உறக்கத்தைக் கலைத்தாய்

எனது கனவுகாணும் கண்களில் உன் விரலைக் குத்தினாய்

இருந்தும் பகல் கனவுகளில் பலவான்கள் நிழல்களைப் பதித்தனர்

மூழ்கினர் வெண்சூரியன்களாக பெருகும் எனது திராவிட குருதியில்

ரகசியமாய் வடிகால்களைப் பாயச் செய்தனர் புனித நகரங்களின் அடியில்

நீ பிரிந்தபோது நான் எனது நீலநிற பலமுறை அடிவாங்கிய வாகனத்தை

நீலக்கடல் நெடுக ஓட்டினேன்

நான் நாற்பது பலத்த ஓசை எழுப்பும் காலடிகளுடன்

இன்னொருவரின் கதவைத் தட்ட ஓடினேன்

அக்கம்பக்கத்தினர் எட்டிப்பார்க்கும் துவாரத்தின் வழியே பார்த்தனர்

அவர்கள் கவனித்தனர் என்னை

நான் மழையைப் போல வந்துசென்றதை

கேள் என்னை

அனைவரும் கேளுங்கள் என்னை

அவன் என்னில் என்ன பார்த்தான்

கேள் என்னை ஏன் அவன் சிங்கம் எனப்பட்டான்

ஒழுக்கமில்லாதவன் எனப்பட்டான்

கேள் என்னை ஏன் அவனது கை படம்விரித்தாடும் பாம்பைப்போல அசைந்து

எனது இடையின் பின்பக்கம் அடித்தது

கேள் என்னை ஏன் அவன் பெரும் மரம் வீழ்ந்ததுபோல

எனது மார்பகங்களில் விழுந்து உறங்கினான்

கேள் என்னை ஏன் வாழ்க்கை குறைவாய் உள்ளது

மேலும் காதல் இன்னும் குறைவாய்

கேள் என்னை எது பேரின்பம் மேலும் அதற்கான விலை என்ன…

 தமிழாக்கம்: மதுமிதா

Image

 

painting: suzichua.com

 

மதுமிதா கவிதை

Image

 

உனக்கான பாடலைப் புனைய…

 

ஏதோ ஒரு பேச்சு ஏதோ ஒரு நிகழ்வு

எப்படியோ நினைவுபடுத்திவிடுகிறது

இன்னுமொரு நினைவினை  மற்றுமொரு நிகழ்வினை

 

இந்த சிறுதூறலும் இழுத்து வந்து சேர்க்கிறது

அந்த மழைச்சாரலை

அந்த மரத்தினடியில் நடுங்கியபடி ஒதுங்கியதை

அந்தக் கிளையின் இலைகளசைந்து

அட்சதையாய் பொழிந்து தூவிய

இன்னொரு மழையை

இதழ்கள் ஒற்றிக்கொள்ள இணைந்ததும் விலகிய குளிரை

குபீரெனப் பறந்து சென்ற வெட்கம் பூசிய பறவையை

அந்த நீண்ட பயணத்தை

.

அந்த மிக நீண்டதொரு பயணம் மீண்டும் வாய்க்கவேயில்லை

 

கதகதப்பான உன் ஸ்பரிசம்

அழைக்கிறது உன் வாசம்

 

அடவியின் இருள்

ஆனந்த கீதமிசைத்த புள்ளினங்கள்

ஆடிக்களித்த மான்கள்

அருகில் வந்து பயந்து விலகிய முயல்கள்

இரவா பகலா தெரியா பொழுதில்

இயைந்த பத்து விரல்களின்

இசைவாய் ஒன்றிணைந்த தாபங்கள்

சுவைத்து மகிழ்ந்த இவ்வினிப்பின் சுவை

இனியெங்கே கிடைக்குமென

இங்குமங்கும் தேடியலைந்த அணில்குஞ்சு

 

வீசியெறியப்படுகிறேன் நினைவின் சுழலுக்குள்

விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது

வேட்கையும் உயிரும் மீட்பாரின்றி

மூழ்கிக் கிடந்த பெருங்கடலினுள் தத்தளித்தபடி

மேல்நோக்கிப் பாய்ந்து வருகிறேன்

உன் நினைவினைப் பற்றிக்கொண்டு

வெளிவந்து மூச்சடைப்பை நீக்கி மூச்சு எடுத்துவிடும் தீவிரத்துடன்

உயிர் காத்திடும் ஆவேசத்துடன்

 

வற்றாது சுரக்கும் தீராத சொற்களின் குவியலிலிருந்து

எதை விடுத்து எதை எடுத்து

எப்படி பொறுக்கி அடுக்கிக் கோர்க்கப்போகிறேன்

முற்றாத உனக்கான பாடலைப் புனைய.

Image

Painting Credit: Leonid Afremov MAGIC RAIN

 

Himalayan blunders

Image

by Sunita Narain

The floods in the Himalayas have been ferocious and deadly. Fears are that the final body count could run into several thousands. There is no clear estimate of the number of villages wiped out, property destroyed, roads washed away and hydropower projects damaged in the mountain state of Uttarakhand. The mountains are bleeding and its people have been left battered, bruised and dead.

We know that the Himalayas are the world’s youngest mountain range, prone to landslide and flash floods. But what we do not easily comprehend is that two factors have made the already vulnerable region more hazardous. One, climate change-related extreme weather events; Indian monsoon has become more intense. Studies show extreme rain events are becoming more frequent as compared to moderate rain events. Rainfall is also becoming variable and unseasonal. This is what happened in Uttarakhand on that fateful June 16. It rained without a break; some 200 mm came down within hours at a few places like Kedarnath. It brought down the mighty Himalayas. Rain was also unseasonal. June is still not considered the beginning of the monsoon season, so pilgrims and tourists thronging the region were caught unawares.

What really compounded the disaster—made it truly man-made—is the scale of development intervention in the past decade or so. This Himalayan region has seen unchecked construction activity, illegal and legal mining, unscientific road building and, of course, hydropower projects built next to each other. In Kedarnath large-scale construction has been done on the land evacuated by glacier in the past few years. It is small wonder that the water, moraine and stones came crashing down and took all with it. Many human lives were lost that morning and families shattered. This is the deadly and painful cost of environmental mismanagement.

Will we learn from this? Will we learn how to live with the excesses and shortages of water, particularly in the fragile Himalayan ecosystem? Will we learn that extreme rain conditions will require us to build a new water culture?

In 1991, environmentalist Anil Agarwal, after months of research for the publication, Flood, Flood Plains and Environmental Myths, brought to attention facts, which were then considered inconvenient. He wanted to understand why floods occurred, with greater intensity, in the plains of India. The common perception was deforestation in the Himalayas caused floods in the plains. Planting trees upstream would “fix” the problem. His research showed that the Himalayas were geologically dynamic, prone to landslides, which would in turn block rivers and create natural dams. The bursting of these dams made of rubble, stone and silt, would wreak havoc downstream. He then went on to argue that we needed to consider a Himalayan policy that took into account the fragility and vulnerability of the region. By then, road activity had started to scar the hills and landslides were increasing. This, in turn, was making it more dangerous for people to live there.

His message was tough: stop blaming the people living in the Himalayas for the floods in the Indo-Gangetic plains. Instead, focus on building a management system to live with floods; to harvest the excess water in ponds, tanks and groundwater recharge systems. It was the willful destruction of the flood plains through unchecked construction of buildings and drainage systems that had exacerbated floods. The Himalayas, he said, would remain vulnerable to landslides and flash floods and development would not work if it did not take into account the true nature of the region. Learn, therefore, to live with the hazards of the Himalayas. The bottom line is that we need to learn to live with nature and not have the temerity to think that we can overcome it.

He had another message a few years later on how we could optimise use of nature’s bounty. In 1997, he published, once again, a seminal volume, Dying Wisdom: Rise, fall and potential of India’s traditional water harvesting systems. It taught us how every region had traditionally devised a unique system of water management, which harvested rainwater and adapted to both scarcity and excess of it. The principle was catch rain where it falls. This system was different from how water bureaucracies functioned by centralising water storage and making its distribution through canals and pipelines the responsibility of the irrigation and water agencies. Agarwal argued, against conventional thinking, that this centralised system would not serve India in the future. We needed to rebuild our water systems of the past and in doing so use modern science and technology to improve it.

As we sadly witness the devastation and loss of lives, Agarwal’s messages hit home. The future will be even more uncertain and riskier because of extreme weather events and mismanagement of resources.

The way ahead is to respect the vulnerability of the region. It cannot be anybody’s contention that the Himalayan region must not see development. The question to consider is how it should develop: by building roads and hydropower projects or local economies based on tourism, which do not work against nature. It is also a fact that changing monsoon pattern will require us to optimise use of every drop and not allow rain to become devastating flood. Only then will the Himalayan tragedy not be repeated.

This is our agenda for survival. Let’s learn it fast.

(CSE)

Image