கொலம்பஸ் டே!

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த தினத்தை ‘கொலம்பஸ் டே’ என்று அமெரிக்காவில் கொண்டாடுகிறார்கள். அக்டோபர் மாதம் இரண்டாம் திங்கக்கிழமையில் வருடா வருடம் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நம் சுதந்திர / குடியரசு தினங்களைப் போல் அமெரிக்காவெங்கும் வீதியில் ஒரே  கோலாகலமாக இருக்கும். 2010ம் ஆண்டு ‘குங்குமம் தோழி’ வாசகி உஷா ராமானுஜத்துக்கு அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.  நியூயார்க்கில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்…

Columbus Day 1

Columbus Day 2

மும்பையைக் கலக்கும் இட்லி, வடை!

Image

மும்பை… தமிழர்கள் வாழும் பகுதி அது… காலை ஏழுமணி… ரப்பர் பந்து பொருத்திய குழல் ஒன்றிலிருந்து ‘பீப்… பீப்’ என்கிற சத்தம் ஒலிக்கிறது. இந்த ஒலிதான் அந்த மக்களுக்கு அன்றாட தேவ கானம்… அந்த ஒலி அன்றையபிழைப்பு தொடங்கிவிட்டதற்கான அடையாளம்.

பத்தாம் வகுப்புப் படிக்கும் வயதில் சிறுவன்… அவன் தலையில் ஒரு பெரிய அலுமினிய அண்டா! அது முழுக்க இட்லிகளும் வடைகளும்! அதைச் சுற்றி சைக்கிள் டியூபினால் இறுக்கிக் கட்டப்பட்ட சில்வர் டப்பாக்களில் சட்னி, சாம்பார் மற்றும் பேப்பர் பிளேட்டுகள்! அந்தச் சிறுவன், அவனைப் போலவே உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ள பாத யாத்திரை தொடங்குகிறது. கால் நடையாகவே வீடு விடாகச் சென்று இட்லி, வடை விற்கிறார்கள் இந்த ‘தலையேந்தி பவன்’ வியாபாரிகள்!

இவர்களுடைய இட்லி,வடையின் சுவை மும்பையில் வசிக்கும் மற்றமாநில மக்களையும் கவர்ந்திருப்பதுதான் ஆச்சரியம். நடுத்தர மக்கள் மட்டுமில்லாமல் சில மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும்கூட இவர்களின் இட்லி, வடைக்கு பரம ரசிகர்களாகியிருக்கிறார்கள். 

Image

இந்த வியாபாரிகள் ஒருவர், இருவரல்ல… சுமார் ஆயிரம் பேர்! வியர்வை சிந்தி உழைக்கும், தினம் தினம் சாதனைபடைக்கும் ஒரு மனிதப் படையே இருக்கிறது. அதிகாலையில், மும்பையின் சென்ட்ரல்வெஸ்டர்ன் மற்றும் ஹார்பர் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். பிறகு, பல இடங்களுக்கு நடந்து சென்று எத்தனையோ பேரின் காலைப் பசிக்கு குறைந்த விலையில் உணவு தருகிறார்கள்.

அதிகாலை 3:30…  பேயும்உறங்கும்,திருடர்களுக்கு வசதியான நேரம்… அது இந்த சிறு வியாபாரிகளின் தொழில் தொடங்கும் நேரம். மும்பை தாராவியில் 90 அடி ரோட்டில், சாந்தி டவுனில் இருக்கும் இவர்களுடைய பதினைந்துக்குப் பதினைந்து அளவிலான  குடிசைகளில் டியூப் லைட்டுகள் எரிய ஆரம்பிக்கின்றன.பெரிய அலுமினிய அண்டாக்களை வணங்கி, அடுப்பிலேற்றி, அடுப்பைப் பற்ற வைக்கிறார்கள். (தொழிலுக்கு மரியாதை!) குடிசைக்கு வெளியே சாக்கடை ஓடுகிறது… வீட்டின்உள்ளேயோ கண்ணாடி போலப் பளபளக்கும் ‘பளிச்’ சுத்தம்.

சுமார் 500லிருந்து 700 குடும்பங்கள் இட்லி, வடை தயாரிக்கும்பணியில் ஈடுபட்டிருக்கின்றன. ஒரு வீட்டில், ஒருநாளைக்கு சராசரியாக 400 இட்லிகள் வார்க்கப்படுகின்றன. உதவிக்குபெண்களோ, ஓரிருவரோ கூட இருந்தால் அந்த எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடும். மலைக்க வைக்கும் எண்ணிக்கை..! ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட மூன்றுலட்சம் இட்லிகள் இங்கிருந்து தயாராகின்றன. ஏழு மணிக்குள்அவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டும்விடுகிறார்கள் இவர்கள்.  

இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மதுரை மாவட்டத்தில்இருந்து வந்தவர்கள் என்பது முக்கியமான செய்தி. ‘ஒருநாளைக்கு 400  ரூபாய் சம்பாதிக்கலாம்’ என்கிறார் மும்பையில் இப்படி இட்லி, வடை விற்கும் இளைஞர் ஒருவர். வியர்வைசிந்தி உழைக்கும் இவர்களுக்கு மற்ற சமுதாயத்தினரிடம் அதற்கான மரியாதையும்கிடைக்கிறது. இவர்களை ‘அண்ணாச்சி’ அல்லது ‘தம்பி’ என்றுதான் அழைக்கிறார்கள். 

இன்றைக்கு மும்பையின் புறநகர்களில் தெருவுக்குத் தெரு மண்டிக்கிடக்கும் ‘கை ஏந்தி பவன்’களின் ரிஷி மூலம் இந்த ‘தலை ஏந்தி’ பவன்களே! 

மதியம் 2 மணிக்கு வீடு திரும்புகிறார்கள் இந்த தலையேந்தி பவன் வியாபாரிகள். சிறிது நேரம் ஓய்வு… 5 மணிக்கு எழுந்து அரிசியையும் உளுந்தையும் ஊறப் போடுகிறார்கள். அடுத்த நாள் பிழைப்பு ஓட வேண்டுமே!

– உஷா ராமானுஜம்

Image courtesy:

http://jalebiink.com/ 

பேபி வாக்கர் வாங்கலாமா? – பெற்றோருக்கு ஓர் ஆலோசனை!

Image

செல்லக் குழந்தை தத்தித் தத்தி நடந்து வருவதை எந்தப் பெற்றோர்தான் ரசிக்க மாட்டார்கள்? 

அதை ஊக்கப்படுத்துவதற்காக ஒரு பேபி வாக்கரையும் வாங்கி விடுவார்கள். குழந்தை, வாக்கரின் வளையத்துக்குள் புகுந்து கொள்ளும். ஸ்கேடிங் செய்வது மாதிரி வீடு  பூராவும் வளைய வரும். அந்தக் காட்சி, பார்க்க ரம்மியமாகத்தான் இருக்கும். 

ஆனால், அந்தக் குழந்தைக்கு பிற்காலத்தில் ஏற்படும் விபரீதங்களைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். 

பேபி வாக்கர், குழந்தைகளின்  கால்களின் கீழ்ப்பாகத் தசைகளை  வலுப் படுத்துமே  ஒழிய, கால்களின் மேல் பாகத்தையோ அல்லது இடுப்பில் உள்ள தசைகளையோ வலுப்படுத்தாது. குழந்தை நன்றாக நடப்பதற்கு இடுப்பில் இருந்து கால்கள் வரையில் உள்ள தசைகள் வலுப்பட வேண்டியது மிக மிக அவசியம். வீட்டில் அனாயசமாக உலா வருவதற்கு வாக்கர் உதவலாம்.  ஆனால், குழந்தைகள் தாங்களாகவே தசைகளை  ஒருங்கிணைத்து பேலன்ஸ் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு, குழந்தைகள் இயற்கையாகவே விழுந்து, எழுந்து நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.   

இந்த பேபி வாக்கரால் சில அபாயங்களும் உள்ளன. நாம் கவனிக்காத போது, குழந்தை மாடிப்படிகளில் உருளவோ, படிக்கட்டைத் தாண்டி வெளியோ போகவோ வாய்ப்புகள் உள்ளன. அந்தக் காலத்தில் குழந்தைக்கு ‘நடை வண்டி’ (மூன்று சக்கர வண்டி) வாங்கிக் கொடுப்பார்கள். குழந்தை அதை ஓட்டிக் கொண்டே வலம் வரும். அது அது ஆரோக்கியமான பயிற்சியாக குழந்தைக்கு இருந்த்து. இன்றைக்கு நடை வண்டிக்கு எங்கே போவது என்கிறீர்களா? இன்னமும் தமிழகத்தின் சில ஊர்களில் நடைவண்டி கிடைக்கத்தான் செய்கிறது. கிடைக்காதவர்கள்,கனமான பொம்மைக் கார் ஒன்றை வாங்கிக் குழந்தைக்குக் கொடுக்கலாம்… அதைத் தள்ளச் சொல்லிக்  கற்றுக்கொடுக்கலாம். பேபி வாக்கருக்கு இது எவ்வளவோ மேல்! குழந்தையின் கையிலிருந்து கால் வரை உள்ள தசைகள் வலுப்பெறும். அவர்களும் ராஜ கம்பீரமாக நடை பயில்வார்கள்.

– உஷா ராமானுஜம்

Image courtesy:

http://www.newbornbabyzone.com/

 

கொசுக்களைக் கலங்கடிக்கும் கற்பூர வில்லை

உஷா ராமானுஜம்

Image

 

 

லேரியா மற்றும்  டெங்கு நோய்கள் வேண்டாத  விருந்தாளிகளாக வராத ஊர்களே இல்லை எனலாம். முக்கிய காரணம் கொசுக்கள்!

கொசுக்களைக் கட்டுப்படுத்த லிக்விட் வெபரைசர் அல்லது நீல நிற வில்லைகளை ஒரு பேடில் சொருகி, கரன்டில் இணைத்துப் உபயோகப்படுத்துவோம். பலவித க்ரீம்களை உடம்பில் தேய்த்துக் கொள்வோம். ஆனால், மாண்புமிகு கொசுவாரோ இதற்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு  நம் காதுகளில் ரீங்காரம்  பாடுவார். மேலும் இவற்றை நாள் முழுவதும் உபயோகப்படுத்த முடியாது. இதனால் ஏற்படும் ‘அலர்ஜி’ தவிர்க்க  முடியாத ஒரு  வேதனை… 

Image

இதற்க்கு தீர்வுதான் என்ன? 

கற்பூரம்… ஒரு கண்கண்ட கிருமி நாசினி. வீடுகளில் தினமும்  பூஜை செய்யும்  போது  கற்பூரத்தை கொளுத்தி ஆரத்தி எடுப்போம். இதைச் செய்யும்போது அறையில் உள்ள காற்றின் மாசுக்கள், பேக்டீரியா, வைரஸ், கொசு மற்றும் பூச்சிகளை விரட்டி  அடிக்கின்றன கற்பூரப் புகையும் மணமும். சுற்றுப்புறத்தை ஆரோக்கியமாக்கும் சக்தி கற்பூரத்துக்கு உண்டு. நிரூபிக்கப்பட்ட பல மருத்துவ  குணங்கள் இதில்  

அடங்கியிருக்கின்றன. மூக்கடைப்பு, இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றுக்கு கற்பூரத் தைலம் கண்கண்ட மருந்து. பல வலி  நிவாரண மசாஜ்  க்ரீம்களுக்கு கற்பூரம்  ஒரு இன்றியமையாத பொருள். 

Image

நம்மில் பலருக்கு கற்பூரம் ஒரு சிறந்த கொசு நிவாரணி என்கிற உண்மையே தெரியாது.  பக்க விளைவுகள் இல்லாத, 24   மணி நேரமும் இயங்கக்கூடிய ஒரு அரு மருந்து. இதற்காக கற்பூரத்தை நாள் முழுவதும் எரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை . அதற்கு சுலபமான மூன்று வழிகள் இருக்கின்றன.  

1. கொசுவர்த்தி பேடில் வழக்கமாக வைக்கும் நீல நிற வில்லைக்கு  பதில் கற்பூரத்தை தினமும் ஒரு மணி நேரம் – காலையிலும் மாலையிலும் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

2. இரண்டு வில்லை கற்பூரத்தை அறையின் மூலை முடுக்குகளில் – எங்கு கொசுக்கள்  அதிகமாக இருக்கிறதோ – அங்கு வைத்து  விடவும். அந்த வில்லைகள் தாமாகக் கரையும். காற்றும் சுத்தமாகும். கொசுவும் இருக்காது.  

3. இரவில் படுக்கை அறையில் ஒரு வாய் அகன்ற கப்பில் தண்ணீருடன் இரண்டு கற்பூர வில்லைகளைப் போட்டு ஒரு மூலையில் வைத்து விடவும். கற்பூரம் தண்ணீரில் கரைந்து காற்றுடன் கலக்கும். கற்பூர மணத்துடன்  கொசு இல்லா நிலையை அனுபவிக்கலாம்.

ஹேப்பி ஸ்லீப்பிங் தோழிகளே!