ஸ்டார் தோழி – 20

11185755_942133792487388_13225070_n

புவனா ஸ்ரீதர் – ஒரு தோழி பல முகம்

நான்

Trichyட்

பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே திருச்சியில். பொறியியலில் டிப்ளமோ, சைக்காலஜியில் டிகிரி. அப்பா குடும்பத்தில் முதல் பேத்தி, பெற்றோரின் தலைமகள், கணவரின் அன்பான மனைவி, என் மகள் மற்றும் மகனின் பொறுப்பான தாய், புகுந்த வீட்டின் கடைசி மருமகள்… இப்படி எல்லா நிலைகளிலும் நல்லவர்கள் என்னைச் சுற்றி இருப்பதே வரம்.
பள்ளி

ஐந்தாம் வகுப்பு வரை மேட்டூரிலும், பின்பு ஸ்ரீரங்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். ‘படிப்பில் கெட்டி பள்ளியில் சுட்டி’ என்று பெயர் எடுத்ததால் கிளாஸ் லீடர் ஆகவும் பொறுப்பேற்ேறன். எந்த நெருக்கடியும் இல்லாத பட்டாம்பூச்சி வாழ்க்கையாக என் நட்புகளுடன் அமைந்தது என் பள்ளி வாழ்க்கை. இன்றும் என் பள்ளிக் கல்லூரி தோழமைகளுடன் நட்பு தொடர்கிறது.
குடும்பம்

கணவர் ஸ்ரீதர் வங்கியில் தலைமை மேலாளர். மகள் கல்லூரியில் நுழைகிறாள். மகன் 11ம் வகுப்பில் அடியெடுத்து வைக்கிறான். என் குழந்தைகள் இருவரையும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் மனிதநேயத்துடனும் வளர்த்து வருகிறேன்.
ஊரும் பேரும்

திருமணத்துக்குப் பிறகு கணவரின் பணி இடமாற்றம் காரணமாக முதலில் மும்பை, பிறகு கள்ளக்குறிச்சியில் கூட்டுக்குடும்பம், பின் கோயம்புத்தூர், பாலக்காடு, கிருஷ்ணகிரி, இப்பொழுது செங்கல்பட்டில்… ஒவ்வோர் ஊரிலும் புதுப்புது வீடு, அனுபவம், மனிதர்கள் என்று வாழ்க்கை சுவாரஸ்யமாகிறது.
பொழுதுபோக்கு

பலவகை ஓவியங்கள், Soft toys, க்வில்லிங் காதணிகள், செயற்கை ஆபரணம் செய்தல், மணப்பெண்களுக்காக டிசைனர் பிளவுஸ் செய்தல் ஆகிய கலைகளை கற்றுள்ளேன். ஃபேஸ்புக்கில் ‘ஸ்ரீவிஜா ஆரி டிசைனர்ஸ்’ பேஜ் நடத்தி வருகிறேன். ஆன்லைன் டிேரடிங்கும் செய்வதுண்டு.
ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும்

பள்ளி, கல்லூரி நட்புகள், மறந்தே போன குடும்ப உறவுகள் அனைவரையும் கண்டுபிடிக்கவும் அவர்களுடன் தொடர்பு நீடிக்கவும் ஃபேஸ்புக்கே காரணம். பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் இதில் நிறைய விஷயங்களை கற்றும் கொள்ளலாம்.
வீடு

ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு விதமான வீட்டில் வசித்துள்ளோம். சொந்த வீட்டில் வசிக்க முடியவில்லையே என்ற எண்ணமே வராத அளவுக்கு ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. விதவிதமான மனிதர்கள், கலாசாரம், சமையல் என்று குழந்தைகளும் நானும் புதுப்புது அனுபவங்களைப் பெற்று வருகிறோம்.
மனிதர்கள்

அப்பா, அம்மா, நான், தங்கை என்று சிறிய குடும்பத்தில் பிறந்தேன். படிப்பு, நட்பு என்று பட்டாம்பூச்சியாக சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. திருமணத்துக்குப் பிறகுதான் மனிதர்களைப் புரிய ஆரம்பித்தது. பொறாமைக்காரர், நம்பிக்கை துரோகிகள், புறம் பேசுபவர்களைக் கண்டால் இன்றும் அலர்ஜிதான்…  ஒதுங்கிவிடுகிறேன்.
புத்தகம் 

vedathiri maharishi

பள்ளிக் காலத்திகல் இருந்தே ஒரு புத்தகமும் விடாமல் படிப்பேன். ‘அம்புலி மாமா’ முதல் சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகள் வரை ஆர்வமுண்டு. இறையன்பு, சுகிசிவம், வேதாத்ரி மகரிஷி போன்றவர்களின் ஆன்மிக நூல்களை விரும்பிப் படிப்பேன். சைக்காலஜி படித்ததால் டாக்டர் ஷாலினியின் மருத்துவக் கட்டுரைகள், வலைத்தளங்களும் வாசிப்பதுண்டு.
வாழ்க்கை

வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்வதே மன நிம்மதியைத் தரும். எந்த எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தைத் தரும். ஒவ்வொரு நிமிடமும் வரமே. மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்து ஒவ்வொரு நொடியையும் வாழ வேண்டும்.
பிடித்தப் பெண்கள்

நான் சந்தித்த எல்லாப் பெண்களுமே எனக்குப் பிடித்தவர்களே. குடும்பத்துக்காக படிப்பைத் துறந்த பெண்கள், கணவன் சரியில்லாமல் தைரியமாக குடும்பத்தைச் சுமக்கும் பெண்கள் என்று தன்னம்பிக்கையுடன் வாழும் ஒவ்வொரு பெண்ணுமே பிடித்த பெண்தான். என் அப்பா வெளிநாட்டில் வாழ்ந்தபோதும் தனியாளாக இரண்டு பெண்களை வளர்த்த என் அம்மாவே நான் வணங்கும் தலைமைப் பெண்.
இசை 

m-s-subbulakshmi1

காலை நடைப்பயிற்சியில் ஆரம்பித்து இரவு தூங்கும்வரை இசையுடனே வாழ்வது நிம்மதி தரும். இசை இன்றி அமையாது இவளுலகு. எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் ‘குறையொன்றும் இல்லை’ பாடலைக் கேட்டாலே மனம் அமைதி கொள்ளும்.

உடலும் மனமும் 

yoga

அளவான உணவு, நடைப்பயிற்சி, நிறைய தண்ணீர், மனதை சந்தோஷ நிலையில் வைத்துக் கொண்டாலே போதும்… யோகா செலய்வதும் உடல், மனம் இரண்டையும் புத்துணர்ச்சியாக்கும். வெறும் அரிசி உணவை மட்டும் உண்ணாமல் சிறுதானிய உணவுகளையும், நிறைய பழம் மற்றும் காய்களையும் உண்டு வந்தாலே உடல் எடை குறைந்து இளமையாகக் காட்சியளிக்கலாம்.
சமையல் 

meen_fish_kuzhambu

nandu gravy

திருமணத்துக்குப் பிறகுதான் கற்றுக் கொண்டேன். கோயம்புத்தூரின் அரிசிம் பருப்பு சாதம், பச்சைப் பயறு கூட்டு, மும்பையின் பாவ் பாஜி, கிருஷ்ணகிரியின் சிறுகீரைத் தொக்கு என ஒவ்வோர் ஊரிலும் பலவித சமையலைக் கற்றுக் கொண்டேன். நான் செய்யும் மீன் குழம்பு, நண்டு கிரேவி என் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். கேழ்வரகு உருண்டையுடன் மீன் குழம்பு எனக்குப் பிடித்த உணவு.
இயற்கை

பள்ளி விடுமுறைக் காலத்தில் கிராமத்திலுள்ள தாத்தா வீட்டுக்குச் சென்று விடுவோம். தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, ரோஜாப்பூ தோட்டம், மல்லிகைத் தோட்டம், என்றுமே வற்றாத ஆறு என்று சித்தி, மாமா பசங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாட்டம்தான். கிராமத்தின் அத்தனை குறும்புகளும் விளையாட்டுகளும் கலந்த அழகிய நாட்கள் எங்கள் குழந்தைப் பருவம். கணவரும் குழந்தைகளும் விடுமுறையில் எங்கள் விவசாய நிலத்துக்குச் சென்று பலவகை மரக்கன்றுகள் நடுவது, உரமிடுவது என ஆர்வத்தோடு இறங்கி விடுவார்கள். என் அப்பாவுக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகம். ஜீவாமிர்தம், அமிர்த கடைசல் என்று அவரே தயார் செய்து செடிகளுக்கும் மரங்களுக்கும் இடுவார். இயற்கையை ரசிக்கும் போது மனதுக்கு அமைதி கிடைக்கும். விடுமுறையில் குடும்பத்துடன் மலைப்பிரதேசங்களுக்கும் சென்று வருவோம்.
மரம் வளர்த்தல், மரங்களை அழியாமல் காத்தல், பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் மண்வளத்தை காப்பாற்றுவது போன்றவற்றை நாமும், நம் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுத்தும் வாழ்வோம். இயற்கையையும் சுற்றுசூழலையும் காப்பதும் நம் கடமை என்று உணர்வோம்.
தண்ணீர் 

Water-Saving

பிறந்து வளர்ந்தது காவிரிக் கரையோரம் என்பதால் தண்ணீர் பிரச்னை என்றால் என்ன என்று கூட்த் தெரியாமல் வளர்ந்தேன். ஊர் மாறும் போதுதான் நீரின் அருமை புரிந்தது. தண்ணீர் கஷ்டம் இல்லாத வீடாக அமைய வேண்டும் என்று வேண்டுதலே வைக்கிறேன். தண்ணீரின் அவசியம், தண்ணீர் சிக்கனம் போன்றவற்றை இளைய தலைமுறைக்கும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டியது நம் கடமை. பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் குறைத்தாலே ஆறு, ஏரி, குளம் போன்றவை மாசுபடாமல் காத்து, அவற்றில் மழைக்காலத்தில் தண்ணீரை சுத்தமாக சேமித்து வைக்கலாம். துணிப்பைகளை உபயோகிப்பதால் மட்டுமே பிளாஸ்டிக் பைகளை விட்டொழிக்க முடியும். நாம் ஒவ்ெவாருவரும் செய்யும் இந்த முயற்சிகூட கணிசமாக பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் குறைக்கும். நம்மால் இயன்ற வரை வீட்டுத் தோட்டங்கள் அமைக்கலாம். மரங்களை நடலாம். மழை பெறலாம். நீரின்றி அமையாது உலகு.
புகைப்படக்கலை

சிறுவயதில் இருந்தே புகைப்பட கலையில் ஆர்வம் அதிகம். கோயில்கள், குளங்கள், மலைப்பிரதேசம், பூக்கள், சூரியன், பறவைகள், விலங்குகள் என்று நிறைய புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்தும் வருகிறேன்.
அழகென்பது

அழகென்பது தன்னம்பிக்கை, நேர்மை, மனதை மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டாலே அழகு தானே கூடிவிடும்.

நேர நிர்வாகம்… 

சரியான திட்டமிடல் இருந்தாலே போதும்… நிச்சயமாக நிறைய நேரத்தை மிச்சபடுத்தலாம். ‘நான் ரொம்ப பிஸி… நேரமே இல்லை’ என்று புலம்பவே வேண்டாம். முதல் நாள் இரவில், தூங்கப் போவதற்கு முன்பே மறுநாள் வேலை என்னென்ன… எப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டாலே போதும்… மறுநாள் காலை முதல் டென்ஷன் இல்லாமல், நிதானமாக வேலைகளைச் செய்து முடிக்கலாம்.

பிடித்த ஆளுமைகள் 

diana

இந்திரா காந்தி, மதர் தெரசா, டயானா. மூன்று தலைமுறைகளையும் தன் கட்டுபாட்டில் வைத்து இருக்கும் மனோரமா ஆச்சியும் எனக்குப் பிடித்த ஆளுமையே.

சினிமா 

Jyothika_Sadanah_Wallpaperjpg_qllbl_Indya101(dot)com (1)

ரஜினி படத்தை மட்டும்தான் தியேட்டருக்குச் சென்று பார்ப்போம். இப்போது சூர்யா பசங்களின் சாய்ஸ். எல்லா நல்ல படங்களையும் தியேட்டருக்குச் சென்று பார்க்கிறோம். ஜோதிகா மீண்டும் நடிப்பது சந்தோஷமாக உள்ளது. அவர் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்.

கடந்தது வந்த பாதை

புது அனுபவங்களையும் பக்குவத்தையும் படிப்பினையும் தந்திருக்கிறது. இன்னும் கடக்க வேண்டிய பாதை நிறைய இருக்கிறது. கற்ற ஒவ்வொரு பாடத்தையும் படிக்கட்டுகளாக எண்ணி பயணம் செய்கிறேன்.

பிடித்தவை

இயற்கையை ரசிக்கவும் இசை கேட்கவும் பிடிக்கும். தொலைதூர பயணம்… அதில் மெலடி பாட்டுகள், தோழிகளுடன் மணிகணக்கில் அரட்டை மிகவும் பிடித்தவை.

வாழ்க்கை

நட்புகள், உறவுகள் மனநிலை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கிறது. வருவதை அப்படியே ஏற்று நதி போல ஓடிக்கொண்டே இருப்போம். இந்த நிமிடம் அழகு என்று ஒவ்வொரு நிமிடமும் ரசித்து வாழ்வோம். வாழ்க்கை வாழத்தானே!

11028968_862442367154003_2615257940376410732_o

***

Image courtesy:

http://www.trichypress.com

http://raviyolimathi.blogspot.in/

rlalitha.files.wordpress.com

http://www.landofyoga.com

http://cdn.awesomecuisine.com

http://ennsamaiyal.blogspot.in

http://www.sparkenergy-blog.co.uk

http://media-1.web.britannica.com

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

ஸ்டார் தோழி – 15

ஸ்டார் தோழி – 16

ஸ்டார் தோழி – 17

ஸ்டார் தோழி – 18

ஸ்டார் தோழி – 19

ஸ்டார் தோழி – 19

ஒரு தோழி பல முகம் 

4

ப்ரியா கங்காதரன் 

நான்…

கொங்கு திருநாட்டில் கொஞ்சும் தமிழோடு வெள்ளியங்கிரி, சந்திரா தம்பதிகளின் தலை மகளாகப் பிறந்தேன். மகளாகப் பிறந்தாலும் மகனைப் போல தன்னம்பிக்கையை மட்டும் தாய்ப்பாலாக பருகி வளர்ந்ததால் வெல்லும் தூரத்தில்தான் வானம் என சிறகு விரித்துப் பறந்தேன். உடன் பிறந்த தீபா திவ்யமான தோழி. என் கவிதைகளின் நாயகன் கங்காதரன்… கொண்டவளை அடக்கியோ/அடங்கியோ ஆள்வோர் மத்தியில் என் எண்ணங்களுக்கு வண்ணமும் பூச ஏங்குபவர். என் இறைவன் என்னிடமே தந்த என் செல்ல மகள் வைஷாலி… இதுதான் நான்… இவர்களும் நான்தான்… என்னுலகம் தமிழாலும் இவர்களாலும் மட்டுமே நிறைந்தது.

கற்றதும் பெற்றதும்

மருத்துவக் கல்வியை மனதில் எண்ணி பள்ளிக் கல்வியை படித்தாலும் கணினி துறையில்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். படித்தது அறிவியல் என்றாலும் ரசித்தது தமிழை மட்டுமே. எழுத்தில் இதயம் தொலைத்து, கவிதைகளில் வாசம் செய்து, என்னை நானே உணரும் நேரத்தில் கைப்பிடித்தேன் என்னவனை, மனதில் கொண்டவனை, என் மன்னவனை. இனிய இல்லறத்தில் நிலவாகப் பூத்து என்னை முழுமை செய்தவள் வைஷாலி. அவள் வளர, அவர் வியாபாரத்தில் வெற்றிநடை போட எனக்குக் கிடைத்த தனிமையில் மீண்டும் எழுத்தில் பயணம் செய்தேன். என் தமிழை துடுப்பாக்கி கற்பனை கடல்களில் நீந்த செய்தேன்.

பிடித்தவை 

flower

எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக் கொண்டால் பிடிக்காது என்பதே இருக்காதே! இருந்தாலும் மலை முகட்டில் ஒற்றை புல்லின் பனித்துளி ரசித்து கவிதை சொல்ல பிடிக்கும். இளையராஜாவின் இசையை இணைந்து பாடப் பிடிக்கும். வேகமாக கார் ஓட்டிச் செல்ல பிடிக்கும். என்னைப் பிடிக்கும்… எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். அப்பா மடியில் படுத்து அடம் பிடிக்க, அம்மாவிடம் செல்ல அடி வாங்க, தலை போகும் வேலையாயிருந்தாலும் என் தங்கத்துக்கு என் கையால் சமைத்துக் கொடுக்க, விட்டுக் கொடுக்க ரொம்பவே பிடிக்கும்… அதை அவர்கள் வெற்றியாக நினைத்து சிரிக்கும் அந்தச் சிரிப்புப் பிடிக்கும். பூ பிடிக்கும், புன்னகை பிடிக்கும். அம்புலி பிடிக்கும். அலை கடல் பிடிக்கும். காதல் பிடிக்கும். காவியும் பிடிக்கும். பிடிக்காத எல்லாவற்றையும் பிடித்ததாக மாற்ற முடியும் என்ற என் தன்னம்பிக்கை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

வாசித்தலில் வருடியவர்கள் 

சில நேசிக்கும் எழுத்துகளை வாசிக்கும்போது அவர்கள் சொல்லி விளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும். கதகதப்பான சாம்பலில் கண்திறக்க மனமின்றி எழுகின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துகளின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும். அப்படி என்னை மடியில் கிடத்தி தலை கோதி வருடிய சில…

s.ramakirhsnan

1. எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி.’ வரிகளை வாசிக்கும் பொழுதே உடன் பயணம் செய்கிற அனுபவம்… ஒவ்வொரு தேசமாக ஒவ்வொரு மனிதராக அவர் சந்தித்த பயணத்தின் சுகானுபவம் படிக்கும் பொழுதே நம்மையும் பற்றிக் கொண்டு விடுகிறது. இவரின் வரிகளை கடக்கையில் ‘அட… ஆமாம்! எப்படி இதை நாம் ரசிக்காமல் விட்டோம்… நாம் ரசித்தவற்றை இவர் எப்படி அறிந்தார்?’ என மனசு கேட்காமல் இருபதில்லை.  புத்தகத்தின் சில தேன் துளிகள்…

‘சாரநாத்தில் இன்று நான் காணும் ஆகாயமும் காற்றும் நட்சத்திரங்களும் கெளதம புத்தரும் கண்டவை. சாரநாத்தின் காற்றில் புத்தரின் குரல் கரைந்துதானே இருக்கிறது…’

நிலமெங்கும் பூக்கள்…

‘பனிக்காலத்தில் புதரில் படர்ந்துள்ள பசிய கொடிகளையுடைய அவரைச் செடியின் பூவானது கிளியின் அலகு போலத் தோன்றுவதாகவும், முல்லைப் பூக்கள் காட்டுப் பூனையின் பற்கள் போன்ற உருவத்தைக்கொண்டு இருப்பதாகவும் குறுந்தொகையில் 240 பாடல்களாக இடம்பெற்றுள்ள கொல்லன் அழிசியின் முல்லைப் பாடல் விவரிக்கிறது.

நெடுஞ்சாலையோரமாகவே ஒரு முறை நடந்து பாருங்கள்… எத்தனைவிதமான மலர்கள்..! பூமி தன்னை ஒவ்வொரு நாளும் பூக்களால் ஒப்பனை செய்துகொண்டு, ஆகாசத்தில் முகம் பார்த்துக்கொள்கிறது போலும்…’

உறங்கும் கடல்… 

‘தனுஷ்கோடியில் கடல் உறங்கிக்கொண்டு இருக்கிறது. நிஜம்தான் அது! ஒரு நகரையே விழுங்கிவிட்டு, இன்று சலனமற்று இருக்கிறது. ஒரு காலத்தில் ரயிலோடிய தண்டவாளங்கள் இன்று தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அழிவின் வாசனை எங்கும் அடிக்கிறது. மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கடல் கொண்டபின்னும் நினைவுகளாக கொப்பளித்துக்கொண்டேதான் இருக்கின்றன.
டிசம்பர் மாதத்து இரவுகள் மிக அற்புதமானவை. வசந்த காலத்தில் பூமியெங்கும் பூக்கள் நிரம்புவது போல டிசம்பர் மாதத்து இரவுகளில் நட்சத்திரங்கள் பூத்துக் சொரிகின்றன…’

balakumaran

2. எழுத்து சித்தர் பாலகுமாரன் வரிகளில் வாழ்க்கையை உணரலாம்… மனசோ உடம்போ சோர்வாக இருக்கும் பொழுது இவருடைய புத்தகம் போன்ற மருத்துவன் வேறு யாரும் இல்லை.
இவருடைய வரிகளில் எனது அடி நாதம் வென்றவை…
மரணம் பற்றிய பயமே கடவுள் நம்பிக்கை.
‘அக்கறைக்குப் பெயர் காதல், காதலுக்கு பெயர் அக்கறை, வேறு வார்த்தையில் மதித்தல்.  காதல் என்பது மதித்தல்.
உலகத்தில் எந்த உயரினமும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததே இல்லை. சகலமும் ஒரே விஷயம். உண்ணும் உணவால், வடிவத்தால் இயற்கை சூழ்நிலையால் உருவங்கள் மாறலாமே ஒழிய இலையில் இருக்கும் புழுவும், மனிதனும் ஒன்றே. இதில் கர்வப்பட ஒன்றுமில்லை.’ – ‘குன்றிமணி’யிலிருந்து…

‘விவேகம் என்பது திமிர் அல்ல. விவேகம் என்பது அடக்கமும் அல்ல. சூழ்நிலையின் உண்மையை தனது வலிமையை பற்றித் தெளிவாக யோசிப்பதே விவேகம்.
ஒரு மகனுக்கு நல்ல தந்தையே குரு. நல்ல தந்தையே தோழன். அவனே தெய்வம் போன்றவன். தந்தை என்பது மந்திர ரூபம். மந்திரம் என்பது வாழ்வதற்கான விதிமுறைகளின் சுருக்கம். ஒருவனுக்கு நல்ல தந்தை கிடைத்தால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதென்று அர்த்தம்.’- ‘சுழற்காற்று’ நூலிலிருந்து…

‘நல்லவனாகவும் வல்லவனாகவும் ஒரு ஆண் இருந்துவிட்டால் அதைவிடப் பெரிய நிம்மதி ஒரு பெண்ணுக்கு எதுவுமில்லை.’ – ‘உத்தமன்’ புத்தகத்திலிருந்து…

‘பெண்கள் எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ, எந்த இடத்தில் அன்பும் மரியாதையுமாய் நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும் சிறந்து விளங்கும்.’ – ‘என் கண்மணித்தாமரை’யிலிருந்து…

RAMANICHANDRAN

3. குடும்ப உறுப்பினர்களின் மூலம் அறிமுகமானவர் ரமணிசந்திரன். அந்தப் பெயர் மனதில் பதிய, சந்தர்ப்பம் வாய்த்தபோது தேடிப்பிடித்து படிக்கவும் தொடங்கினேன். இவர் கதைகளில் கதாநாயகிகளை அத்தனை கண்ணியமாகக் காட்டி, அவருடைய எண்ண ஓட்டங்களைச் சொல்லும் போது படிக்கும் பலருக்கும் புத்தி சொல்லும் விதமாக, எது நல்லது, எது கெட்டது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது, எது தப்பு, எது சரி, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்மைக்கு உதாரணம் தருவது அருமை. சில நேரங்களில் அந்த கதாநாயகிகளாகவே கற்பனை செய்து பார்ப்பதும் உண்டு. படிக்கும் போதே நம் பிரச்னைகளுக்குத் தீர்வு நம்மிடமே இருக்குமோ என்றே எண்ண வைக்கும் எழுத்து இவருடையது.

vairamuthu

4. திரைப்படங்களிலும் நாடகத்திலும் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ மட்டும் எப்படி இவ்வளவு சோகம் என்று நான் நினைத்தது உண்டு. அது சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று நினைததுமுண்டு. ஆனால், ‘கருவாச்சி காவியம்’ என் எண்ணத்தை மாற்றிவிட்டது.
வைரமுத்துவின் வைர வரிகளில் என் கண்களை குளமாக்கிவிட்டது. படிக்கும் போதே உயிர் ஒடுங்கி, ஒரு நடுக்கம் வருவதைத் தடுக்க முடியாது. கருவாச்சி, ஆத்தா பெரியமூக்கி, கொண்ணவாயன், கட்டையன், அவன் அப்பா சடையதேவர், கருவாச்சி மகன் அழகுசிங்கம், கெடா பூலித்தேவன், வைத்தியச்சி, கனகம், பவளம்… இவர்கள் எல்லோருடனும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிந்த அனுபவம் கிடைத்தது. காவியம் என்பது இதிகாசம் தொடர்பான ஒன்று என்று நினைத்திருந்த என் எண்ணத்தை ‘கருவாச்சி காவியம்’ முற்றிலும் மாற்றிவிட்டது.

Pa Vijay

5. நிலவையும் தாளில் கொண்டு வந்தவர் வித்தக கவி பா.விஜய். சரித்திர கால காதல் நிகழ்வுகளை, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட காதல்களை கவிதைகளாகத் தொகுத்து நெய்யப்பட்டது இவருடைய ‘உடைந்த நிலாக்கள்.’ ஷாஜகான், அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முகம்மது, ஆபிரஹாம் லிங்கன், திப்பு சுல்தான், ஒத்தெல்லோ, பிருத்விராஜன்… இப்படி நீண்டுகொண்டே போகும் சாதனை மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த பெரும் மாற்றங்களுக்கு பெண் மட்டுமே முக்கிய காரணம்.
‘பெண் என்னும் பிஞ்சு பிராவகமே! கனவாக நீயிருந்தால் கண்விழித்தா நான் இருப்பேன்? நிலமாக நீயிருந்தால் நடக்க மாட்டேன்… தவழ்ந்திருப்பேன். முள்ளாக நீயிருந்தால் குத்திக் கொண்டு குதூகலிப்பேன். தீயாக நீயிருந்தால் தினந்தோறும் தீக்குளிப்பேன். தூசாக நீயிருந்தால் கண் திறந்து காத்திருப்பேன். மழையாக நீயிருந்தால் கரையும் வரை நனைந்து நிற்பேன்.’

என்னை கவர்ந்த எனது வரிகள் 

Window

ஜன்னல்
ஜன்னல்களுக்கு நான்
நன்கு பரிச்யமானவள்…
இன்னும் சொல்லப்போனால்
ஜன்னல்கள் குடும்பத்தில்
நானொரு கம்பி போன்றவள்!

இந்த ஜன்னல் வழியே
நான் வீசி எறிந்த திண்பண்டத்தின்
மிச்சத்தை இழுத்து ஓடிய எலியை
பின்னாளில் ஒரு காக்கா கொத்திக்
கொண்டிருந்ததும் பிறகு ஒரு
நாளில் அந்த இறந்து கிடந்த
காக்கையை எறும்புகள் மொய்க்க…

ஒரு உணவு சுழற்சிமுறையை காணநேர்ந்தது இந்த ஜன்னல் வழியேதான்!

இந்த ஜன்னல் வழியே
வீசி எறிந்த மாங்கொட்டை ஓன்று
மரமாகி கூட போனது!
இயற்கைக்கு என்னால் செய்ய
முடிந்தது இந்த ஜன்னல் வழியேதான்!
மழையில் நனைவது அவ்வளவு
சுகமென்று கவிதை எழுதி
வைத்துவிட்டு மழையில் நனையாமல்
வேடிக்கை பார்ப்பதும் இந்த
ஜன்னல் வழியேதான்!
பக்கத்து வீட்டுகாரனும்
எதிர்த்த வீட்டுகாரனும்
தெரு சண்டைகளில் இறங்கி
சண்டையிடும்போது சமூகத்தை
பார்த்து முகம் சுளித்ததும்
இந்த ஜன்னல் வழியேதான்!
ஒரு வேடிக்கையாளனுக்கு
இந்த ஜன்னல்கள் எப்படியெல்லாம்
விசுவாசமாக இருக்கிறது!
எனக்குதான் ஜன்னல்களிடத்தில்
நன்றியுணர்ச்சி அறவே இல்லை…
நான் இல்லாத நேரத்தில் அதை மூடி வைத்து விடுவேன்!

ஆளுமை செய்பவர்கள்… 

என் பாட்டி… கடின உழைப்பும் சிக்கனமும் கொண்டவர். படிப்பறிவு இல்லாவிட்டாலும், எதை எப்படி செய்ய வேண்டுமென்று அழகாக யோசித்து செய்வார்கள். தள்ளாத வயதிலும் தனி ஆளாக தோட்டத்தில் துறு துறு என சுற்றித் திரிந்து வேலையாட்களிடம் விவேகமாக வேலை வாங்கும் பாட்டியிடம் 10 வயது வரை வளர்ந்ததால் அந்த தன்னம்பிக்கையும் தைரியமும்தான் இன்று நான் செய்யும் வியாபாரத்திலும் வெற்றிநடை போட உறுதுணையாக இருப்பதாக உறுதியிட்டுக் கூறலாம்.

லக்ஷ்மி டீச்சர்… ஆ’னா, ‘ஆ’வன்னா கைப்பிடித்து எழுத வைத்தவர். படிப்பில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் கூட இவர் பாடம் எடுத்தால் கற்கும் ஆர்வம் வந்துவிடும். பெயரிலேயே லக்ஷ்மியை வைத்து கொண்டு வாழும் சரஸ்வதியாக வலம் வந்தவர்.
திருமணம் செய்து கொள்ளாமல் கல்வி சேவை புரிந்தவர். ‘ஏன் டீச்சர் கல்யாணம் செய்யலை?’ என்று கேட்டால், ‘கல்யாணம் ஆனா ஒரு புள்ளை, ரெண்டு புள்ளைக்குத்தான் தாயா இருக்க முடியும். இப்போ பாரு… எம்புட்டு பிள்ளைக்கு தாயாக இருக்கேன்’ என்று சொல்லி கல்வி மீது காதல் வர வைத்தவர்.

வைஷாலி… குழந்தைத்தனத்தோடு  இருந்தவளைத் தாயாக மாற்றியவள். குழந்தையாக, ஆசிரியராக, தோழியாக, தாயாக, மகளாய் பன்முகம் காட்டுபவள்… என்னை முழுமை செய்த முழு நிலவு அவள். என் வாழ்வின் அர்த்தமே இவள்தான்.

அப்பா… அப்பா என்று சொன்னதும் எனக்கு ஆயிரம் எண்ணங்கள், பெண் குழந்தைக்கு அப்பாவையும், ஆண் குழந்தைக்கு அம்மாவையும்தான் பிடிக்கும் என்று சொல்வார்கள். எது எப்படியோ, என் விஷயத்தில் அது முற்றிலும் உண்மை. அம்மாவை எவ்வளவு பிடிக்குமோ, அதற்கு ஒரு படி மேல் என் அப்பாவைப் பிடிக்கும். எனக்கு என் அப்பா எப்பவுமே ஒரு ஹீரோதான். எப்போவாவது வீட்டில் சின்னச் சின்ன சண்டை வந்தாலும்  நா அப்பா சைடுதான். சரியோ, தப்போ அப்பாவைதான் சப்போர்ட் பண்ணுவேன். எனக்கு நினைவு தெரிந்து அப்பா (அம்மாவும்) என்னை அடித்ததோ, திட்டியதோ இல்லை. இத்தனைக்கும் அப்பா ரொம்ப கோபக்காரர். அடிக்கடி தான் சிறுவயதில் கஷ்டப்பட்டதை கூறுவார். இதெல்லாம் சொல்லி வளர்த்ததனாலேயோ என்னவோ எது தேவை எது தேவையில்லை என்று யோசிக்கும் பக்குவம் அப்பாவிடம் இருந்து வந்தது. அப்பாவிடம் ரொம்பப் பிடித்த விஷயம் அவர் எனக்கு அளித்த சுதந்திரம்… ‘எங்கே போய்ட்டு வந்த? ஏன் லேட்டு?’ போன்ற எந்தக் கேள்விகளையும் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. இந்த சுதந்திரம் என் எல்லைகள் எதுவென்பதை எனக்கு உணர்த்தியது. எல்லாவற்றையும் தாண்டி அவர் என் மீது வைத்திருக்கும் அன்பையோ, நான் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தையோ ஜஸ்ட் லைக் தட் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

என் சமையல் அறையில் 

kitchen

எனது சமையல் அறை எனது இரண்டாவது பூஜை அறை. ஒவ்வொரு முறை உள்ளே நுழையும் பொழுதும் கர்பககிருகத்தில் செல்லும் உணர்வு ஏற்படும். எப்பொழுதும் நாம் அன்பா சமைத்து, அதை எல்லோரும் ஆசையாக ரசித்து சாப்பிடும் அந்த உணர்வை, சந்தோஷத்தைப் பகிர வார்த்தைகளே இல்லை. என்னதான் வேலை, டென்ஷன் இருந்தாலும் வீட்டுக்குப் போனதும் ‘மாமாவுக்கு இதைச் செய்யணும்… அவருக்கு இது பிடிக்கும்… வைஷு இது வேணும்னு ஆசைப்பட்டாளே…’ என்று நினைக்கும் பொழுதே என்னோட டென்ஷன் எல்லாமே மறந்து போயிரும். என்னை அனுதினமும் புதுப்பிக்கும் மற்றொரு கோயில் எனது சமையல் அறை.

கோவையும் நானும் 

ooty

சிலிர்க்கும் சிறுவாணி (உலகின் சுவையான 2வது குடிநீர்), மனம் மயக்கும் மருதம் (மலை),  தீரனின் வீரம், கரிசல்காட்டில் நெரிசல் கட்டிய பஞ்சாலைகள், பல உன்னத கண்டுபிடிப்பை உலகுக்குத் தந்த ஜி .டி. நாயுடு, கல்விக்கு கண்திறக்கும் ஏராளமான கல்லூரிகள், கார் சாம்பியன் கார்த்திகேயன், தென் இந்தியாவின் மான்செஸ்டர், கலைவண்ணம் சிலைவண்ணம் கொண்ட பேரூர், கற்பகவிநாயகன், அன்னபூர்ணா இட்லி சாம்பார், பாலக்காட்டு கணவாயின் பசுமையான காற்று, வாழ முதுகெலும்பான விவசாயத்துக்கு முதல் கல்லூரி, மரியாதை அறிந்த மக்கள், இன்றும் ஓடிக்கொண்டு இருக்கும் இந்தியாவின் ஒரே புகைவண்டி (ஊட்டி), எட்டும் தூரத்தில் ஏலகிரி, தொட்டுவிடும் தூரத்தில் தொட்டபேட்டா, பாரதி கண்ட சேரநன்னாட்டிளம் பெண்களுடன்… மார் தட்டி சொல்வேன் என்னை கொங்கு தமிழச்சி என்றே!

சமூக மாற்றம்

ஒரு சமூகம் மாற்றம் பெறுவது கல்வியால் மட்டுமே! ஒருவனுக்குக் கல்வியை அளித்து விட்டாலே போதும்… அவன் அவனையும் அவன் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்வான். ஆனால், அதே நேரம் அதற்குத் தகுந்த பாடத் திட்டங்களில் நமக்கு மாற்றம் தேவை என்பதும் உண்மை. நமது பாடத் திட்டங்கள், இன்னும் மெக்காலேயின் எழுத்தர்களை உருவாக்கும் கல்வித்திட்டத்தின் அடிப்படையிலேயே உழன்று கொண்டிருக்கிறது. ஒரு மிகச் சிறந்த அடிமையை எப்படி உருவாக்குவது என்பதுதான் மெக்காலே உருவாக்கி இந்திய சமூகத்துக்குப் பரிசளித்த கல்விமுறை. நாம் அந்த முரணை இன்னும் கடக்காமல் பயணிப்பதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொடுமை. இப்போது சமச்சீர் கல்வி குறித்த விவாதத்தில் நாம் எல்லோரும் குதித்திருக்கிறோம், ஆனால், அடிப்படைக் கல்வி மற்றும் கல்விச் சூழல் குறித்த எந்த விவாதக் களங்களையும் மேடைகளையும் நாம் உருவாக்குவதே இல்லை. இப்போது நம்மில் பலர் உரையாடிக் கொண்டிருக்கிற சமச்சீர் கல்வி குறித்த விவாதங்கள் அரசியல் முடிவுகள் குறித்த விமர்சனங்களாகவும், நம்மையும் அறியாத ஒரு பக்கச் சார்பு உரையாடல்களாகவுமே இருப்பதை ஆழமாகக் கவனிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.
நமது அடிப்படைக் கல்வி முறையில் காலம் காலமாக ஒரு வியப்பான, மிகக் கொடுமையான முரண் இருக்கிறது. அந்த முரணை நம்மில் பலர் கடந்து வந்திருக்கிறோம். கடக்க முடியாமல் தேங்கிப் போனவர்களாகவும் இருக்கிறோம். அந்த முரண், கல்வியை ஒரு நினைவாற்றல் தொடர்பான திறனாக மாற்றி வைத்திருப்பதில் இருந்து தொடங்குகிறது. நினைவாற்றல் கல்வியின் ஒரு மிக இன்றியமையாத பகுதி என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், நினைவாற்றலே கல்வி என்கிற ஒரு முரணை நாம் விரைவில் கடந்தாக வேண்டும்.
கல்வி என்பதை பொருளீட்ட உதவும் கருவி அல்லது வாழ்க்கையின் பொருட் தேவைகளை எதிர்கொள்ள நாம் கண்டறிந்த ஒரு தகுதி என்பது மாதிரியான ஒரு பிம்பத்தை நமது அறிவுலகமும் அரசும் கட்டமைத்திருக்கின்றன. கல்வி உறுதியாகப் பொருளீட்ட உதவும் ஒரு கருவிதான் என்பதை நாம் ஒப்புக் கொண்டாலும், அடிப்படைக் கல்விக்குப் பொருளீட்டுவதை விட மிக முக்கியமான ஒரு தேவை இருக்கிறது. அதுதான் சமூக மாற்றம்.

சமுக மாற்றத்தில் எனது பங்கு 

bharathi

‘அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல்… அதனிலும் ஆங்கோர் ஏழைக்கோர் எழுத்தறிவித்தல்…’ என் பாரதி எங்கோ, என்றோ சொன்னது கனவிலாட… இன்று வரை அதை நனவாக்க
என்னால் முயன்ற முயற்சியை செய்து கொண்டு இருக்கிறேன்.
வருடம் ஒரு 12ம் வகுப்பு மாணவர்… படிக்கும் ஆர்வமுவும் வெல்லும்  எண்ணமும் கொண்ட, படிக்க வசதி இல்லாத ஒருவரைத் தேர்வு செய்து அவரின் இளங்கலைப் படிப்பு முழுவதும் எங்கள் குடும்பச் செலவில் எங்கள் நிறுவன முயற்சியில் செய்கிறோம்.
இறைவன் அருளில் அதைப் பன்மடங்காகச் செய்யணும்.

எழுத்தின் இலக்கு

எழுதும் எல்லோருக்கும் உள்ள ஆசைதான் எனக்கும்.
கருவில் இருக்கும் குழந்தையை ஈன்றெடுக்கும் அன்னையின் ஆவலில் நானும்… ஆம். என் கவிதைக் குழந்தையை புத்தகமாக  பிரசுரம் செய்து, ஆசை தீர அள்ளி முகர வேண்டும் என்பதே…

ஒவ்வோர் எழுத்தையும் அன்னையாக ஆராதனை செய்து, நான் பெற்றெடுக்கும் என் கவிதைக் குழந்தை அனைவரின் கையிலும்  தவழ வேண்டும். ஓர் அன்னையாக  அதனை நான் ரசிக்க வேண்டும். என் வரிகளின் வாயிலாக இந்த உலகை காண வேண்டும். ஒவ்வொரு வரிகளும் பெறும் கைதட்டலை உள் வாங்கி உணரவேண்டும். என் கவிதைக் குழந்தையை எல்லோரும் ரசிக்கும் பொழுது… பிணியில்லா உலகும், பசியில்லா வாழ்வும், குறைவில்லா கல்வியும் எல்லோருக்கும் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, நன்றி சொல்கிறேன்.

Image courtesy:

http://www.thenewsminute.com/

http://imgkid.com/

http://wallpaperjpeg.com/

http://upload.wikimedia.org/

http://www.goodluckkitchen.com/

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

ஸ்டார் தோழி – 15

ஸ்டார் தோழி – 16

ஸ்டார் தோழி – 17

ஸ்டார் தோழி – 18

13

ஸ்டார் தோழி – 18

ஒரு தோழி பல முகம் 

Star Thozhi 2

ஷர்மிளா ராஜசேகர்

நான்…

தாயாக என்பதைக் காட்டிலும் நல்ல தோழியாக வாழ்வதே வசதியாக இருக்கிறது. அதிகபட்ச நேரங்களில் தாயாக, தோழியாக என்பதைக் காட்டிலும், நல்ல ‘மனுஷி’யாக இருப்பதையே விரும்புகிறேன். பிள்ளைகளின் படிப்பு, ஹெல்த் தவிர வேறெந்த விஷயங்களிலும் கட்டுப்பாடே கிடையாது.  அம்மா என்பதற்கு நம் சமூகத்தில் வைத்திருக்கும் அளவுகோலில் சேர்ந்து கொள்வதில்லை!

தோழியாக இருக்கையில் நல்ல நட்புடன் இருந்திருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘பெஸ்ட் தோழி’ என்று சொன்னால் அது நானாகத்தான் இருப்பேன். மனது என்ன நினைக்குமோ அது மட்டும்தான் வார்த்தையில் வரும். மனஸ்தாபம் வந்தால் விலகி நிற்பேனே தவிர, குறை பேசுதல் பிடிக்காது.

கஷ்டம் என்று சொல்லும் போதோ, உதவி என்று நம்பி வந்துவிட்டாலோ எப்படியும் உதவி செய்து விடுவேன். இதனால் இன்றளவும் குடும்பத்தில் மனஸ்தாபங்கள் வந்ததுண்டு. குடும்பம் என்பதை தாண்டி, வீட்டில் உள்ள முகங்களை தாண்டி, மற்ற மனிதர்களும் கூட உயிர்தான், சக மனிதர்கள்தான் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்று சொல்வார்கள். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு வகையில் எங்கிருந்தோ உதவி செய்ய, யாரோ ஒருவர் முன்னிற்பார். உதவி செய்தலில், சாப்பாட்டில் எதிர் பாராமல் கூடிய காரம் போல சிலநேரங்களில் தவறு நேரலாம்.  எப்பொழுதுமே தவறாக இருந்து விடாது.

பள்ளி

திருச்சி, ராமகிருஷ்ணா மிடில் ஸ்கூல், BHEL கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல். கோயில் என்றால் என் பள்ளிதான். சிறு வயதிலேயே எனக்கு கோபம் வர வைக்க, என் அண்ணன் என் பள்ளியைத் திட்டுவான். அடக்க முடியாத கோபம் அப்போதுதான் வரும். ‘படி படி படி’ என்பதைத் தாண்டி எங்கள் பள்ளியில் போதித்தது சுத்தம், உதவி செய்தல், நட்பு, பணிவு, கடவுள் பக்தி, நாட்டுப்பற்று, பெரியவர்களுக்குத் தலை வணங்குதல்… இந்த குணங்கள் எல்லாம் வந்துவிட்டாலே படிப்பு தானாக வந்து விடும்.

ஆசிரியர்

சுவாமிநாதன் (ஹெச்.எம்.)… சுகந்தா மிஸ் இருவரும் என்றும் நினைவில் நிற்பவர்கள். சிறு குழந்தையில் எங்கள் ஹெச்.எம்.முக்கு செல்லப்பிள்ளை நான். வகுப்பில் வரலாறு பாடம் எடுக்க வருவார். உள்ளே நுழைந்ததும் புன்னகைத்து, எழுந்து நின்று என்னை படிக்கச் சொல்வதே பெருமையான விஷயமாயக நினைத்து மனம் துள்ளிடும்.

சுகந்தா மிஸ்… அவரின் உடல்நிலை மோசமான நிலையிலும் ‘என் பிள்ளைகளின் பத்தாம் வகுப்புத் தேர்வு முடியாமல் ஆப்ரேஷனுக்குப் போகப் போவதில்லை’ என்று சிகிச்சையையே தள்ளிப்போட்டவர். சிறந்த ஆசிரியை. ஒவ்வொரு கட்டத்திலும் பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னுதாரணமாக என் மனதில் என்றும் இருப்பவர்.

ஊர் 

Trichy

திருச்சி. எனக்குத் தெரிந்தவரை அமைதியான ஊர், மரியாதை நிரம்பிய மக்கள், நல்ல உணவு, அதிக சாதி, மத வேறுபாடு பார்க்காத மக்கள். எந்தப் பிரச்னை நாட்டில் நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படாத நகரம். எந்தப் பகுதியில் இருந்தாலும் நினைத்த இடத்துக்கு 15 நிமிடங்களில் போய்விடலாம். சுத்தமான நகரம். இன்னும் கூட சுத்தம் இருந்தால் நன்றாக இருக்கும்.

புத்தகங்கள் 

Nenjukku needhi

suki Sivam

thabu shankar

கலைஞர் கருணாநிதியின் அனைத்து படைப்புகளும், இறையன்பு,லேனா தமிழ்வாணன், சுகி சிவம் அவர்களின் படைப்புகளும் என் வாசிப்பில் முக்கியமானவை. தபூ சங்கர் கவிதைகளில் சொக்கிப் போயிருக்கிறேன்.

குடும்ப அமைப்பு 

குடும்பம் என்பது அழகிய பூந்தோட்டம் போல. ஏனோ நம் குடும்ப அமைப்பில் மாற்றி, மாற்றி அடிமைத்தனம் செய்வதே முக்கியமான அம்சமாக ஆகிப் போனது. விட்டுக்கொடுத்தல், அனுசரித்து நடத்தல், ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்டல் எல்லாமே யாரோ ஒருவரை அடக்கி வைத்தலிலேயே முடிந்து விடுகிறது. இது மன அழுத்தத்தில் கொண்டு போய் விடுமே தவிர, வாழ்க்கை முழுமை அடையாது. முன்பிருந்த காலம் போல இல்லாமல் இனி வரும் தலைமுறை புரிந்து கொண்டு மாற்றிக்கொண்டால் மட்டுமே குடும்பம் முழுமையடையும்.

பொழுதுபோக்கு 

ஃபேஸ்புக் வருவதற்கு முன் புத்தகம் படிப்பதே பிடித்த விஷயம். இப்பொழுது ஃபேஸ்புக்கில் படித்துக்கொண்டிருக்கிறேன் இசை கேட்பதும் பிடிக்கும்.

இயற்கை 

Then sittu

குளிர்ந்த காற்று, மேகங்கள், ஊர்ந்து செல்லும் உயர்ந்த மலை… இப்படிப்பட்ட இயற்கை தினமும் கண்களுக்குக் கிடைத்துவிடாதே… அதனால் இயற்கையின் ஓர் அம்சமாக தினம் தினம் ரசிப்பது விடியற்காலையில் வீட்டின் முன்புற மரத்தில் வந்து அமர்ந்து தாவித்தாவி குதிக்கும் தேன்சிட்டு… இது எங்கிருந்தோ வந்து தினமும் சந்தோஷப்படுத்திச் செல்லும்.

தண்ணீர் சிக்கனம் 

water

ஒவ்வொரு மனிதரின் மிகப் பெரிய கடமை. முடிந்த வரை வருங்கால சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய மிகப் பெரிய சொத்து தண்ணீர்.

இதில் மக்களாக 100 மடங்கு கவனம் தேவை என்றால், அரசாங்கம் கவனிக்க வேண்டியது 1,000 மடங்கு. மழை நேரத்தில் கிடைக்கும் அத்தனை தண்ணீரையும் கடலுக்கு அனுப்பி விட்டு, ‘தண்ணீரை சேமியுங்கள்…  சேமியுங்கள்’ என்பது சரியானதாயகப் படவில்லை. மழைக் காலத்தில் ஒரு சொட்டு நீரையும் வீணாக்காமல் சேமிக்க அரசும் முன்வர வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி, குளம் எல்லாம் தூர்வாரப்பட்டு மழை நீர் சேமிக்கப்பட வேண்டும்.

பிளாஸ்டிக் 

ஏதோ ஒரு வகையில் ஒரு பெரிய தவறு மக்கள் பயன்பாட்டுக்குள் வந்து வாழ்க்கையின் மாற்ற முடியாத சக்தியாக ஆகியிருக்கிறது பேப்பர் கப், பேப்பர் பேக் என்று எவ்வளவு மாறினாலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிப்பது சிரமமே.

plastic-waste-road

ஒரே வழி இப்படி உபயோகத்தில் இருக்கும் பிளாஸ்டிக்கை ரீயூஸ் செய்வது. பிளாஸ்டிக் ரோடு போல வேறு என்னென்ன வகையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம் என்று கண்டறிந்து, உபயோகப்படுத்திய ப்ளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் ஆக்கபூர்வமான வழிகளில் உபயோகப்படுத்தலாம்.

சமூக அக்கறை

சமீப காலங்களில் சமூகத்துக்கு மிகப் பெரிய பாதிப்பாக நான் உணர்வது டாஸ்மாக் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு. இவற்றை வளரும் பிள்ளைகளின் மனதை சிதறடிக்கும் விஷயங்களாகப் பார்க்கிறேன். சில இடங்களில் 9ம்  வகுப்பு, 10ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் கூட தங்கள் வாட்டர் பாட்டிலில் மதுவை கலந்து வைத்துக்கொண்டு அருந்துவதை கேள்விப்படும் போது மனம் வேதனையடைகிறது.

மிருகத்திலிருந்து மனிதனை வேறுபடுத்திக்காட்டுவது மனித குலத்தின் யோசிக்கும் தன்மைதான். ஒரு வருங்கால சந்ததியே போதையில் சிக்கி,  யோசிக்கும் திறனற்றுப் போய் விடுமோ என்ற அச்சம் எழுகிறது.

cellphone

இன்டெர்நெட் பயன்பாடு… பேச, சிரிக்க, அரட்டை அடிக்க என்று இருந்த காலம் மாறிப்போய்  ‘தானும் தன் போனும்’ என்று ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளப் பழகிவிட்டோம்.

மனிதர்கள்

விவசாயிகளும், நகரை சுத்தம் செயபவர்களுமே நாம் கண்ணால் காணும் தெய்வங்கள். இவர்கள் இருவரும் இல்லையென்றால் நாமெல்லாம் வாழவே முடியாத நிலையில் தள்ளப்படுவோம். எக்காரணம் கொண்டும் இவர்களை இழிவாகப் பார்ப்பதோ கிண்டலாகப் பேசுவதோ கூடாது என்பதை என்னிடம் பயிலும் பிள்ளைகளுக்கு மனதில் விதையாக ஊன்றியிருக்கிறேன்.

நாட்டில், சிறிதுசிறிதாக மனிதம் இறந்து போய்க்கொண்டிருப்பதற்குக் காரணம் நம்பிக்கை துரோகங்கள். மனித உருவில் இருக்கும் மிருகங்கள், கொஞ்ச நஞ்சம் இருக்கும் மனிதாபிமானத்தையும் இரக்க குணத்தையும் சாகடித்துக்கொண்டு இருக்கிறார்கள். எப்படியான சூழ்நிலையிலும், எவ்வளவோ விமர்சனங்கள் இருந்த போதும் மனிதாபிமானம் தவறில்லை, மனிதர்களாகவே இருப்போம் என்று நம்பிக்கை தரும் வண்ணம் நடக்கும் ஒரு சில நேர்மையான காவல் அதிகாரிகளால்தான் இன்னமும் மனிதம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

சொல்ல விரும்புவது… ரோட்டில் ஒரு பள்ளம் இருக்கிறதென்றால் உடனே ஒதுங்கி ஒதுங்கிப் போகாதீர்கள். சக மனிதன் உங்கள் பின்னாலேயே வந்து விழ வாய்ப்பிருக்கிறது. அரசாங்கம் சரி செய்யும் வரை அதில் ரெண்டு கல்லை எடுத்துப் போட்டு நாமே சரி செய்யலாம். மழைக்காலங்களில் இப்படிப்பட்ட உதவி தேவைப்படும்.

சமூக கோபம் 

ரோட்டில் போய்க்கொண்டு இருக்கும் போதே எச்சில் துப்புவது… எந்த கட்டிடமாக இருந்தாலும் எல்லா மூலையிலும் தவறாமல் எச்சில் துப்புவது…

பொதுக்கழிவறையை உபயோகப்படுத்தினால் அதை சரியாக சுத்தம் செய்யாமல், தண்ணீர் கூட ஊற்றாமல் வருவது… ‘நாம யூஸ் பண்றது தானே’ங்கிற எண்ணம் நிறைய பேருக்கு இல்லை… அப்போல்லாம் கோபம் வருது.

சொந்தங்கள் 

என்றோ ஒரு நாள் பார்க்கும் போது ஆசையாகப் பேசி, அன்பால் மனதை நிறைக்கும் சொந்தங்கள்… அதிக பட்சமாக வீட்டுக்கு ஒரு பிள்ளை என்றாகிப் போன நிலையில், இனி வரும் காலங்களில் நட்புகளே சொந்தங்கள்!

கற்றதும் பெற்றதும் 

எல்லா காலகட்டங்களிலும் எந்தச் சூழ்நிலையிலும் என்ன செய்தாலும் அதில் குறை சொல்லவும், குற்றம் காணவும் ஏதோ ஓர் உயிர் நம் உடனேயே பயணம் செய்து கொண்டே இருக்கும். கண்டு கொள்ளாமல் விடுவதுதான் ஒரே வழி. ஒவ்வொருவருக்காகவும் மாறினால், இறுதியில் நம் சுயத்தை இழந்து நாம் நம் தனித்தன்மையை இழந்துதான் நிற்க நேரிடும். எனக்கு எது பிடிக்குமோ, நான் எப்படியோ அப்படியே இருக்க விரும்புகிறேன்… எவ்வளவு சோதனைகள் வந்தாலும்!

நேரம்

ஸ்ரீ மனோஜ் ஹிந்தி வித்யாலயா… என்னுடைய கல்வி மையம். என் பிள்ளைகள், என் வகுப்பு எஅன என் நேரம் இனிதாக நிறைகிறது.

சமையல் 

cooking

காரசாரமாக, அதிக வெரைட்டியோடு வெஜிடேரியன் ஃபுட் மிகவும் பிடிக்கும். நான்கைந்து சைட்டிஷ்களோடு சமையலை சட்டென்று முடித்துவிடுவேன். ஜுரம், சளி, தலைவலி, வயிற்றுவலி என்று எதுவாயக இருந்தாலும் சமையிலிலேயே சரி செய்து விடுவேன். நம் ஆரோக்கியம், நம் குடும்ப ஆரோக்கியம் எல்லாம் நம் கையில்தான். சமையல் சரியாயக இருந்தால் ஆரோக்கியம் நம் வசம்!

பிறகலை 

டிராயிங், பூவேலை, தையல் என்று நிறைய தெரிந்தாலும் என்னவோ ஒன்றின் மேல் 10 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடிவதில்லை.

வீடும் நிர்வாகமும்

முழு வீட்டு நிர்வாகமும் நான்தான். முடிந்த வரை அதிகப் பொறுப்புகளை சேர்த்துக் கொள்வது என் பழக்கம்.

உடல்நலமும் மனநலமும்

உடல்நலம் நம்மைச் சார்ந்தது. மனநலம் நம்மைச் சார்ந்தவர்களைச் சார்ந்தது.  மனநலனை காத்தாலே உடல்நலத்தையும் சீராக வைத்துக் கொள்வது எளிதாகிவிடும்.

சினிமா

ஒரு மிகப் பெரிய சக்தி. சமுதாயத்தை சீர்ப்படுத்தவும் நாசமாக்கவும் அதனால் முடியும். ஆனாலும் சினிமா துறையினர் பல பொறுப்பில்லாமல் இருப்பது பெரிய ஆதங்கம். வயதானவர்கள் அதிகம் திரையரங்குக்குப் போவதில்லை. இப்பொழுதெல்லாம் அடிதடி, திருட்டு, டாஸ்மாக் போன்றவை அதிகம் சினிமாவில் இடம் பெறுகின்றன. ‘எவனையும் மிச்சம்வைக்காதே! போட்டுத் தள்ளு’ போன்ற வசனங்கள் இடம் பெறுவது சர்வ சாதாரணம். சினிமா  இளையதலைமுறையினரை நல்வழிப்படுத்த வேண்டாம்… அவர்களை வீணாக்காமல் இருந்தாலே போதும்.

கடந்து வந்த பாதை

அமைதியாக, நிம்மதியாக, சுலபமாக ஒரு வாழ்க்கை. எண்ணங்களும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகம். நிறைய நாடுகளுக்கு பயணப்பட, நிறைய எழுத, அரசியல் பக்கம் செல்ல என்று நிறைய ஆசைப்பட்டதுண்டு. ஆனாலும், நம் சமுதாயம், கட்டுப்பாடு, குடும்பம் என்று சிறு வட்டத்துக்குள் அமைந்த ஒரு வாழ்க்கை.

இசை 

music-symbols

இசை போல் மனதுக்கான இனிய மருந்து எதுவுமே இல்லை. எப்படிப்பட்ட வெறுமையையும் தனிமையையும் இனிமையாக்கும் இசை.

என் மரியாதைக்குரிய பெண்கள்

என் வாழ்வில் சந்தித்தவர்களில் என் அம்மாவும் தங்கையும்…

கட்சி, கட்சி என்று குடும்பத்தைப் பார்ப்பதில் அப்பா அதிக ஈடுபாடு காட்டாவிட்டாலும், இரும்பு மனுஷியாக பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர உழைத்தவர் அம்மா.

பிள்ளைகளிடம் ‘என்ன ஆக ஆசைப்படற?’ என்ற கேள்விக்கு பெரும்பாலும் ‘டாக்டர் ஆகணும்’ என்பதே பொதுவான பதிலாக இருக்கும். அப்படிச் சொன்னதை செய்து காட்டி, நல்ல ‘மகப்பேறு’ மருத்துவராக வலம் வரும் என் தங்கை டாக்டர் கனிமொழி.

மகிழ்ச்சி தருணம் 

தினமும் மாலை என் ஹிந்தி வகுப்பில் என் குழந்தைகள் அத்தனை பேரும் செய்யும் சேட்டைகளும், பேசும் பேச்சுகளும், சந்தோஷக்கடலில் ஆழ்த்தும் மகிழ்ச்சியான தருணங்களே. பெற்றோரிடம் பேசறாங்களோ, இல்லையோ… எல்லா விஷயங்களையும் என்கிட்டேதான் சொல்லுவாங்க.

வீடு 

paint

வரைவதற்காக காஸ்ட்லி பெயின்ட்ஸ் வாங்கி, வீடு முழுவதும் அங்கங்கே வரைந்து, அரைகுறையாக விட்டுவிடும் மகனின் ஓவியங்கள்தான் சிறந்த இன்டீரியர்.

வாழ்க்கை 

வாழும் நாட்களைத் தள்ளுவது வாழ்க்கையில்லை. வாழ்வதே வாழ்க்கை.  ‘குடும்பம் இப்படித்தான் இருக்கணும்’, ‘இது சரி… இது தப்பு’ என்று ஒரு வட்டமிட்டு முடக்கிக்கொண்டு வாழாமல், கையில் கிடைத்த, கண்முன் இருக்கும் வாழ்க்கையில், பிடித்ததைப் பேசுங்கள்… பாருங்கள்… வாழுங்கள்!

அழகு

அழகு என்பது இன்னொருவரின் மனதில் இடம் பிடிக்க ஒரு ‘என்ட்ரி’ டிக்கெட் மட்டுமே. உங்களின் அன்புதான் பிறகு அழகாக மாறும். உங்களைச் சார்ந்தவர்களிடம் சரியோ, தவறோ ரசித்து வாழப் பழகுங்கள்… அவர்களின் உயிருக்கு உயிராக ஆவீர்கள். இல்லையென்றால், அவர்களின் நினைவின் மூலையில் கூட உங்களின் நினைவு இருக்காது.

ஃபேஸ்புக்

மறுஜென்மம் என்ற கூற்று உண்மையானால் நாம் ஒரு ஜென்மத்தில் சந்தித்த நபர்களை மறு ஜென்மத்தில் சந்திக்க நேரிடுமாம். அவ்வகையில் அத்தனை பேரையும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்த களம் ஃபேஸ்புக்.  ஒவ்வொருவருக்கும் அன்பாக, நட்பாக, உயிராக நட்புகளைக் காட்டும் தளம்… அன்பான நட்பினை மனதின் நெருக்கத்துக்குக் கொண்டு வந்து வைக்கும் கடவுள் வசிக்கும் தளம்.

எதுவாக இருந்தாலும் மனதில் உள்ளதை கொட்டிவிடலாம். கேட்க, மதித்து பதில் சொல்ல என்று நட்புகள்… எந்தக் கவலை இருந்தாலும் மனதை உடனடியாக ரீசார்ஜ் செய்துவிடும்.

நல்ல மனிதர்கள் எவ்வளவோ அதைக்காட்டிலும் தவறானவர்கள் பலமடங்கு உலவும் இடம்… இருப்பினும், நாம் நண்பர்களை சரியாகத் தேர்ந்தெடுத்து விட்டால் நல்லதே நடக்கும்.

குடும்பம்

என் இரு மகன்கள் – அரவிந்த், மனோஜ்ராகுல். வீட்டின் பெண் பிள்ளையாக என்னைக் கொண்டாடும் கணவர்… பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்ளும் பொறுப்பான குடும்பத்தலைவர்.

இன்னும் என்னை குழந்தையாகவே பாவிக்கும் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை (தங்கையாய் இருந்தாலும் அதுவும் அப்படித்தான்!)

போகும் வரும் இடத்திலெல்லாம் என்னைப் பற்றியே பேசி, கொண்டாடும் இன்னொரு அம்மா (மாமியார்), கணவரின் உடன்பிறப்பாக இருவர், அன்பான குடும்பம்!

எழுதியதில் பிடித்தது

முதன்முதலாக ‘குங்குமம் வலைப்பேச்சி’ல் வெளியானது…

‘தனியாக இருப்பதுதான் தனிமையா? பத்து பேர் நடுவுல நாம இருந்தாலும் நம்ம செல்போன் நம்ம கையில இல்லாம இருக்கும் போது வர்ற ஃபீலிங்தான் தனிமை.’

‘சளி பிடிச்சுருக்கு’, ‘பேய் பிடிச்சுருக்கு’ன்னு பிடிக்காததெல்லாம் பிடிச்சுருக்குன்னு சொல்றாங்களே… வேற என்னவெல்லாம் பிடிக்காதது பிடிச்சுருக்கு!!!

எனக்குப் பிடித்த என் எழுத்துகள்…

ஒரு வரிக்கதை…

சிறு ஊடல்

அவன் பேசட்டும் என அவள் காத்திருந்தாள். அவள் பேசட்டும் என அவன் காத்திருந்தான். இந்தக் காத்திருப்பில் தற்கொலை செய்து கொண்டது இருவருக்கிடையேயான நட்பு!

***

  • நட்புடன் இருப்பதாக நடிக்க கற்றுத் தர சிறந்த இடம் ஃபேஸ் புக்!
  • நட்பு என்னும் கோட்டினை தாண்டி சிறிது எட்டிப் பார்த்தாலும் அந்த நட்புக்கு அற்ப ஆயுள்தான்!
  • பொண்ண பெத்தவங்கல்லாம், பையன் போல வளர்க்கறேன்னு வளர்க்கறாங்க. இனி அமைதியான பையன் கிடைச்சாலும் கிடைப்பான்… அமைதியான பொண்ணு கிடைக்கறது ரொம்ம்ம்ம்ம்ப கஷ்டம்!
  • அன்பாக இருப்பதை தாய்மொழியிலும், கோபத்தை வேற்று மொழியிலும் வெளிப்படுத்துதல் உறவுகள் பிரியாமல் இருக்கும் ஒரு ராஜதந்திரம் தான்!
  • என் எல்லா மகிழ்ச்சியையும் ‘மகிழ்ச்சி என்பது யாதெனில்’ என்று மகிழ்வாக குங்குமம் தோழி வெளியிட்ட அனைத்தும் பாராட்டு வாங்கிக்கொடுத்தன.

Star Thozhi 1

Image courtesy:

http://fc03.deviantart.net

http://static.ibnlive.in.com

http://beta.slashdigi.com

http://www.rodalenews.com/

http://upload.wikimedia.org/

http://epikardia.com/

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

ஸ்டார் தோழி – 15

ஸ்டார் தோழி – 16

ஸ்டார் தோழி – 17

ஸ்டார் தோழி – 17

kirthika 1ஒரு தோழி பல முகம்

கிர்திகா தரன்

நான்…

கிர்த்திகா, கீர்த்தி, அம்மா, அக்கா – ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பதவி, பட்டம். அந்தந்த வயதில் அவற்றை அனுபவித்தே இருக்கிறேன்… மனுஷியாக வாழ்வதே சவாலாக இருக்கும் காலத்தில் திரும்பி பார்க்கும் வாழ்க்கை திருப்தியாக இருப்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம். காலம் ஒவ்வொரு பருவத்திலும் மனிதர்களை சேர்க்கிறது… விலக்குகிறது. அனைவரிடமும் முடிந்த வரை அன்பு பாராட்டி நதி போல ஓடிக்கொண்டு இருப்பதே சாதனை. தாய் என்பது மிகப்பெரிய பதவியும், பொறுப்பும். வாசிக்க, எதையும் கவனிக்க, கேள்விகள் கேட்க, பதில்கள் தேட கற்றுக் கொடுப்பது மட்டும் பெற்றோரின் பொறுப்பு என்று நம்புகிறேன். கல்வியை கற்றுக் கொடுப்பது நம் கடமையல்ல… அது திணிப்பாக மாற வாய்ப்பு உண்டு. நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள தூண்ட வேண்டும். பிறகு அவர்களே கற்றுக் கொள்வார்கள். இன்றும் நான் ஐந்து வயது தோழமை கூட பேசிகொள்வது வரம்… ஐந்து நிமிட தோழமைகள் கூட மறக்காமல் இருப்பது வரமோ வரம்.

பள்ளி

பள்ளிப் பருவத்தில் ஒரு பட்டாம் பூச்சியாக என்னை இருக்க விட்டது மிகப் பெரிய விஷயம். இப்போதைய பள்ளிகளைப் போல சிறகை ஒடித்து அடைத்து ருசிக்காமல்,  சிறகை விரித்து பறக்க விட்ட காலம். மதிப்பெண்கள் பற்றிய கவலை தேர்வு நேரங்களில் மட்டும். உற்சாகம், சந்தோஷம், விளையாட்டு, பேச்சு, பேச்சு, பேச்சு நிரம்பிய காலம் அது. பெரிய பள்ளியில் ஆசிரியர்கள் அறிய இருப்பதே பெரிய விஷயம். அவர்களிடம் நெருக்கமும் இருந்தது. அந்த நெருக்கமே அவர்கள் போதிப்பதை நெருங்கி பார்க்க செய்தது. வீட்டில் படித்த நினைவே இல்லாமல் இருக்கிறது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அதற்கு ஆசிரியர்கள் காரணமாக இருதிருக்கின்றனர்.

ஊர்… கற்றதும் பெற்றதும் 

பெங்களூரு

பெங்களூரு

20 வருடமாக  வசிக்கும் இடம் என்று சொல்லி, தள்ளி வைக்க முடியாது பெங்களூரை… இதன் நீரை அதிகம் குடித்து, அதன் காற்றை சுவாசித்து, இந்த ஊர் என் மெய்யோடு கலந்து யுகமாகிவிட்டது. ஆரம்பத்தில் ‘என் மாநிலம் தமிழ்நாடு’ என்று சொன்னது போய் ‘கர்நாடக வாழ் தமிழர்’ என்று சொல்லும் அளவுக்குக் கலந்து விட்டது.

பல மொழிகள் , பல கலாசாரம், கல்வி முறைகள், உடை வகைகள், பரந்த சிந்தனை, மாடர்ன் மனசு, எதையும் சகித்துக்கொண்டு, ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைத்தையும் கற்றுக்கொண்டது இங்குதான். தனியாக மொழி தெரியாமல் எங்கும் போய் சமாளிக்கும் தன்னம்பிக்கையையும் இது தந்தது.

உணவு 

Maddur Vada

உடுப்பி கடுபு, மங்களூர் ஹோலிகே, வட கர்நாடக ஜோலா தோசை, கத்தரிக்காய் கொஜ்சு, பெங்களூரு போண்டா சூப், மதுர் வடை, ராகி உருண்டை – தொட்டுக்க பசார் கீரைக் குழம்பு, கர்நாடக ரசம், ரோட்டோர பானி பூரி, மசால் பூரிகள்,  எம்.டி.ஆர். ரவா இட்லி, வீணா ஸ்டோர் இட்லி-சட்னி… ஐயர் கஃபே வடை, காபி, CTR வெண்ணெய் தோசை… ஒன்றா இரண்டா உணவு வகைகள்? அனைத்தையும் ஒரு கை பார்ப்பதே நம் வேலை!

புத்தகம் 

ambai sirukathaigal
சுஜாதாவுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. சிறு வயதில் மகாபாரதம், ராமாயணம், தேவி பாகவதம் மற்றும் பத்திரிகைகள்… தவிர பாலகுமாரன், ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஜெயமோகன், சுந்தர ராமசாமி, காஃப்கா, புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜி.நாகராஜன், பஷீர்… அடுத்து பெருமாள் முருகனின் எழுத்துகள்… கொங்கு நாடு பற்றிய அறிமுகம் அவர் நாவல்கள் மூலமே. இன்னும், இன்னும் நிறைய எழுத்தாளர்கள்… தற்பொழுது வாசித்துக்கொண்டு இருப்பது அம்பை சிறுகதைகள். இதுதான் என்று இல்லை… நல்ல புத்தகங்கள் அனைத்தையும் வாசிக்கப் பிடிக்கும்.

குடும்பம் 

20 வருடங்களாக கூட்டுக் குடும்பம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மாமியாருடன் இருக்கிறேன். அம்மா, அப்பாவோடு இருந்ததை விட அவரோடு அதிகம் இருக்கிறேன். குழந்தைகளுக்கு பாட்டியின் அரவணைப்பு கிடைத்தது வரம். பக்கத்திலாவது சித்தப்பா, அத்தை, பாட்டி, கசின் என்று யாரேனும் அருகிலாவது இருக்க வேண்டும். அப்போது குடும்பத்தின் ஆணி வேர் பலமாக குழந்தைகளின் மனதில் ஊன்றப்படும். எல்லார் அன்பும் நிறைக்கும் வேளையில் அவர்கள் குடும்பத்தை விட்டு விலக விரும்ப மாட்டார்கள். வாய்ப்பு இருக்கும் வேளையில் பெரியவர்களோடு குழந்தைகள் ஐக்கியமாக விட வேண்டும். நம் பிரச்னைகளை அவர்கள் முன் தவிர்க்க வேண்டும். கணவர் மருத்துவர்… இரு ஆண் குழந்தைகள்… ஆண்களால் அழகாக சூழப்பட்ட வாழ்க்கை.

பொழுதுபோக்கு 

புத்தகம், இணையம், நண்பர்கள், பயணம்…

இயற்கை 

shark
பையன் ஒரு கேள்வி கேட்டான்… ‘வெளிநாட்டில் தண்ணீருக்கு அடியில் கண்ணாடிக் குழாயில் இருந்து கொண்டு மீன்கள், டால்பின்கள், சுறாக்கள் பார்க்க முடியுமே! ஏன் நம்ம ஊரில் அந்த வசதி இல்லை?’ ‘உன்னை கண்ணாடி வீட்டில் குடியிருக்க சொன்னால் இருக்க முடியுமா?’ என்று கேட்டேன். ‘ஹையோ. நான் பாத்ரூம் போகணும். அம்மாவை கட்டிக்கிட்டு தூங்கணும். முடியாது’ என்றான். ‘அதே போல்தான் மிருகங்களும். அதுவே நீருக்கு மேலே வரும். இல்லையென்றால் நீச்சல் கற்றுக்கொண்டு மூழ்கிப் போய் பார்க்கலாம்… நட்பாக அளாவலாம்… அதை விட்டுவிட்டு வேடிக்கை பொருளாக்கி பார்க்க கூடாது’ என்றேன். இயற்கையும் அப்படித்தான். காய்ந்து இலையும் சருகுமாக இருக்கும் காட்டுச் செடிகளை, மரங்களை அழித்து கொரியன் புல் வளர்ப்பது, பூச்செடிகள் போடுவது  இயற்கை காட்சி  அல்ல. இயற்கையாக இயற்கையை விடுவதே இயற்கை. அதைக் காப்பாற்றி குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

தண்ணீர் சிக்கனம் – பிளாஸ்டிக் பயன்பாடு 

BBMP
இரண்டு மூன்று வருடங்களாக பிளாஸ்டிக் பைகளை கடைகளில் வாங்குவதை முடிந்தவரை தவிர்கறேன். முக்கியமாக தமிழ்நாட்டில் மிக அதிக பிளாஸ்டிக் பை உபயோகம் கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது. பிளாஸ்டிக்குகளை எல்லா இடங்களிலும் வீசி வருவது வருத்தம் தருகிறது. சமீபத்தில் ஒருநாள் பார்த்தேன். இங்கு ஒரு மூலையில் நான்கு, ஐந்து BBMP குப்பை லாரிகள் நின்று கொண்டு இருந்தன. ஈரக் குப்பைகள்  தனியே உரத்துக்கு… பேப்பர் குப்பைகள் விலைக்கு என்று அனைத்தையும் அழகாகாகக் கழித்துவிட்டனர். டம்ப் செய்வது பெரும்பாலும் குறைக்கப்பட்டு இருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் விழிப்புணர்வு வந்தால் வாழும் இடம் சொர்க்கமாகும்.

பள்ளியில் ஒருநாள் குழந்தைகளுக்குப் பாடம் எடுத்தேன். ‘நீங்கள் குடிக்கும் தண்ணீரை வெளியே எடுங்கள்’ என்றேன். ‘அது எவ்வளவு ஃப்ரெஷ்?’ என்று கேட்டேன். அனைவரும் ‘இப்பதான்’ என்றார்கள். ‘எங்கம்மா பழைய தண்ணி வைக்க மாட்டாங்க’ என்றார்கள். ‘எங்கிருந்து வந்தது?’ என்றேன். ‘பைப்’, ‘டாங்க்’, ‘அக்வா கார்ட்’ என்று பதில்கள்… ‘பிறகு?’ என்றதற்கு ‘ஆறு’, ‘ஏரி’ ‘நிலத்தடி நீர்’… இன்னும் ரிவர்ஸில் போகச் சொன்னேன். ‘மழை’, ‘மேகம்’, ‘பனி’… இன்னும் பின்னே… ‘கடல்’, ‘ஆறு’, ‘ஏரி’, ’குளம், குட்டைகள்… பிறகு? சுற்றிச் சுற்றி வந்தது.

‘நாம் குடிக்கும் நீர் பல மில்லியன் காலங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. நம்மால் ஒரு சொட்டு கூட ஆய்வு கூடத்துக்கு வெளியே உருவாக்க முடியாது என்பதே உண்மை. நம் பாட்டிலில் இருக்கும் நீர் நம் கொள்ளு தாத்தாவின் உச்சாவாகக் கூட இருக்கலாம். ஆனால், அதில் விஷம் கலந்தால் நமக்குத்தான் திரும்பி வரும்’ என்றேன். ‘சுத்தப்படுத்த மிக அதிக செலவாகும். மரங்கள் ஓவர் டியூட்டி செய்ய வேண்டும். சிக்கனமாக இருப்பது நல்லது’ எனச் சொல்ல… மாணவர்கள் அழகாக ஏற்றுக்கொண்டனர். கதையால் சிக்கனம் சொல்லலாம்… அறிவுரை யாருக்கும் பிடிக்காது.

சமூக அக்கறை 

எப்பொழுதும் உண்டு. இப்பொழுதும் இரு பொருளாதாரத்தில் பின் தங்கிய  பள்ளிகளில் பாடம் எடுக்கிறேன். கல்வியின் மூலமே ஒரு சமூகத்தை வளர்த்து எடுக்க வேண்டிய நிர்பந்தம். ஆனால், அந்த வாய்ப்பு சிலருக்கு இல்லாமல் போவது சமூக்க் கேடு. அனைவரும் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வாழ வேண்டும். இளைஞர்கள் அனைவரும் சமூகத்துக்கு சிறு பங்காவது செய்ய வேண்டும். பலர் அப்படிச் செய்வது நம்பிக்கையைத் தருகிறது.

மனிதர்கள் 

அனைவரும் நல்லவர்கள். மிகக் குறைந்த விகித அளவே வேறு மாதிரி இருக்கிறார்கள். நாம் குறை, பகை இல்லாமல் அன்பாக இருந்தால் நம்மிடம் அன்பு செலுத்த மனிதர்களுக்குத் தடை ஏதும் இல்லை. நாம் நட்புரிமையுடன், ப்ரியத்துடன் நேசத்தை செலுத்தினால் உலகம் அழகாகும். நமக்கு நம்மை மாற்றிக்கொள்ளும் சக்தி மட்டுமே உண்டு.

பிறந்த ஊர் 

oonjal

கொல்லுமாங்குடி… கும்பகோணம் அருகில். இன்னமும் கிராமத்தின் வெள்ளந்தித்தனத்தை ஒளித்து வைத்து இருப்பது வரம். கிரிகெட், சீரியல்  உள்ளே நுழையாத காலம்… அதனால் பளிங்கு, கிட்டிப்புல், கபடி, பாண்டி, ஊஞ்சல் என்று உற்சாகப் பறவையை கட்டிக்கொண்டு பறந்த காலம். கற்றுக்கொள்ள வாழ்கை எத்தனையோ வைத்திருக்கிறது. குழந்தைப் பருவம் மிக இனிமை… அதை எல்லாக் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை கற்றுத் தந்தது ஊர்.

நேர நிர்வாகம் 

அப்படியெல்லாம் எதுவுமில்லை. எத்தனை வேலை இருந்தாலும் அவ்வப்போது முடித்து விட வேண்டும். சும்மா இருக்கும் பொழுது சந்தோஷமாக இருக்க வேண்டும். நேரம் என்ன தேக்கி வைத்து இருக்கிறதோ அதை  எடுத்துக்கொண்டு போக வேண்டும்.

சமையல் 

சுவையா சமைக்க பிடிக்கும். ஆனால், இரண்டு மணி நேரத்துக்கு மேல் கிச்சனில் இருக்கப் பிடிக்காது. திறமையான பல பெண்கள் சமையல் அறையில் நேரத்தை வீணடிப்பதில் ஒப்புதல் இல்லை. எளிமையாக இந்த நேரத்தில் ஒரு நாளுக்கே சமைத்து விடலாம். அதை இன்னொருவரிடம் தொழில் ரீதியாக ஒப்படைத்தால் அவர் குடும்பத்துக்கும் வருமானம் கிடைக்குமே.
பிற கலை 

சினிமா, டிராமா, எழுத்து, ஓவியம, புகைப்படம், நாட்டியம்… ஏன் பஜன் கூட ரசிக்கப் பிடிக்கும்.

வீடு-அலுவலகம் சமாளித்தல் 

கற்றுக்கொண்டு இருக்கிறேன். எத்தனை ஒழித்தாலும் குப்பை சேருவதை தடுக்க முடியவில்லை. அதனால் அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டு இப்படி இப்படியே வேலை செய்து முடிக்கிறேன்.

கடந்து வந்த பாதை

மிக அழகான பாதை… கிராமத்தில் பிறந்து, விவசாயத்தோடு வளர்ந்து, டவுனில் படித்து, நகரத்தில் வாழ்ந்து, உலகம் சுற்றும் குழந்தைகளை வளர்த்து… நல்ல குடும்பம், நட்புகளை வரமாக பெற்று… வேறென்ன வேண்டும்..

சினிமா 

Actor Karthi in Madras Movie Posters

நல்ல சினிமாக்களை பார்ப்பது பிடிக்கும். மசாலாவும் பிடிக்கும், ஜேம்ஸ் கேமரூன், மணிரத்னம், மிஷ்கினும் பிடிக்கும். பிடித்த ஹீரோக்களில் அரவிந்த் சாமி முதல் ஜார்ஜ் க்ளூனி வரை ரசனை நீள்கிறது. தரமான உலக படங்களும் பிடிக்கும். தற்பொழுது தமிழ் படங்கள் உச்சத்தை நோக்கி பயணம் செய்வதாக தோன்றுகிறது. ‘ஜிகர்தண்டா’, ‘சதுரங்க வேட்டை’, ‘மெட்ராஸ்’ என்று இயக்குநர்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள். அந்தப் பக்கம் பார்த்தால் கலர்ஃபுல்லாக ’காவியத் தலைவன்’… மிக அழகாக அடுத்த கட்டத்துக்கு தமிழ் சினிமா நகர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

உடல் நலம் மன நலம் 

இரண்டும் ஒன்றுகொன்று தொடர்பு உடையவை. ஒன்று நன்றாக இருந்தால் இன்னொன்றும் அப்படியே இருக்கும்.

எழுதியதில் பிடித்தவை 

குட் டச்… பேட் டச்…’ பற்றி அதிகம் தெரியாத நேரத்தில் அதைப் பற்றி விளக்கமாக எழுதினேன். அது ஃபேஸ்புக்கில் நிறைய ஷேர் செய்யப்பட்டு வலம் வந்தது. அடுத்து அப்பா பற்றி எழுதியது… அனைத்துமே உணர்வு பூர்வமானவை.

இசை

மனதுக்கினிய எந்த ஒலியும் இசையே. அன்பின் ஹலோ, குழந்தையின் அழைப்பு, பையனின் ஸ்கைப் கால் – அனைத்துமே இசைதான். சிலரின் பேச்சுகள் கூட இசையாக ஒலித்துக்கொண்டே இருக்கும்.

பிடித்த ஆளுமைகள் 

தமிழ் இணையத்தில் ஈரோடு கதிர், ரவி நாக், அமுத தமிழ் இன்னும் பலர். அன்பின் ஆளுமைகளும் அதிகம் உள்ளனர்.  வெளியில் படேல், அம்பேத்கர், காந்தி. அதைத் தவிர அனைத்து தன்னம்பிக்கை பெண்களும் பிடித்த ஆளுமைகள்.

பிடித்த பெண்கள் 

அம்மா, அக்கா, தம்பி மனைவி… வீட்டுக்கு வெளியே கிரண் மசூம்தார்- தொழில் அதிபராக. ஜெயலலிதா, இந்திரா அவர்களின் தன்னம்பிக்கைகாக. மதர் தெரசா சேவைக்காக.

நகைச்சுவை… வாழ்க்கையில்! 

ஒன்றா, இரண்டா… எத்தனையோ காமெடிகள். காமெடி திருவிழாவே நடக்கும் நம்மைச் சுற்றி
ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும்
கற்றது கொஞ்சம்… எழுத்து, தமிழ், மன உறுதி. பெற்றது அன்பு, நட்புகள், இது போன்ற வாய்ப்புகள். இழப்பதற்கு எதுவும் இல்லை.

அழகென்பது 

தன்னம்பிக்கை.

வீடு

வீட்டை அலங்கரிக்க மிக ஆசை. பையன் கொஞ்சம் சுட்டி என்பதால் அவன் பொம்மைகளைத் தவிர வேறு எதற்கும் இடமில்லை. சுவரில் இத்தனை நாள் அவன் கிறுக்கல்களே ஓவியம். ஒரு பூவைக் கூட ஓர் இடத்தில் வைத்தால் வீட்டை அழகாக்கும் சூத்திரம் மிகப் பிடிக்கும்.

வாழ்க்கை 

நதி போல அணைத்து, கழுவி, வீழ்ந்து, எழுந்து, வேகம் கொண்டு, சுழித்து, பயன் பெற்று, பயன் அளித்து… ஓடிக்கொண்டே கலக்க வேண்டும். ரசனை நொடிகள்… அழகு நிமிடங்கள்… வாழ்தல் மிக இனிது.

மறுசுழற்சி

அதைவிட மினிமலிசம் நல்லது. தேவை இல்லாமல் சேர்ப்பது லக்கேஜ் சுமக்கும் அபாயம்.

எழுத்தும் வாசிப்பும்

அனைத்து எழுத்துகளும்… வடை சுற்றின பேப்பரைக்கூட விடுவதில்லை.

புகைப்படக்கலை

ஒரு கணத்தை ஓராயிரம் விழிகளுக்கு படைப்பது அத்தனை எளிதல்ல அந்தக் கணம். அதை மனதில் பிடிப்பதா, கேமராவில் பிடிப்பதா என்ற சண்டையில் கேமரா தோற்க நேரும். மனமும் கேமராவும் ஒன்று சேரும் கணத்தில் காட்சி கவிதையாகிறது.

kirthika 2

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

ஸ்டார் தோழி – 15

ஸ்டார் தோழி – 16
Image courtesy:

http://upload.wikimedia.org/wikipedia/commons

 

 

ஸ்டார் தோழி – 16

ஒரு தோழி பல முகம்

Star Thozhi 2 copy

தமிழரசி

நான்…

ஒரு மனுஷியாக என் சுதந்திரத்தை முழுதாக சுவாசிப்பவள். என் கட்டுப்பாடென்பது… எவரையும் பாதிக்காது, எதனினும் மூக்கை நுழைக்காது, எல்லை மீறல் இருக்காது, எவரையும் வருத்தாது. அதே நேரம் என்னை சீண்டினால் தேவைக்கும் காரணத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப என் விட்டுக்கொடுத்தலும் தணிந்து போதலும் போராடுதலும் இருக்கும்,

தாயாக…

என் குழந்தைகளுக்கு நல்ல தாயாகவே இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

தோழியாக…

பெரும்பாலும் நட்புக்கு ஆண், பெண் பேதம் பர்ப்பதில்லை நான். நண்பர்கள் என்ற பொதுவான சொல்தான் இருபாலினருக்கும்.

பள்ளி

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பள்ளி… இப்போதைய வயது நூறாண்டுகளுக்கு மேல். அதன் ஒவ்வொரு தூணும் ஐந்து பேரும் கைகோர்த்து நின்றாலும் அணைத்து கொள்ள முடியாத அளவு பெரிய தூண்கள். அத்தனை அழகும் நேர்த்தியும்! அறிவியல் பாடமெடுத்த முனுசாமி வாத்தியார் எனக்கு பிடித்தவர்… ஒரு கம்பீரமும் மிடுக்கும் இருக்கும். இவர் வகுப்பு வராதா என்று காத்திருப்போம். ஒழுக்கம், நேர்மை, கல்வியின் அவசியம் ஆகியவற்றையும் பொய் சொல்வது பிழையென்றும் பள்ளி போதித்தது. போட்டிகளில் ஆர்வம் காட்டுதல், விட்டுக்கொடுத்தல், தோழமை, நட்பின் ஆழம் இப்படி நிறைய நல்ல விஷயங்களும் அங்குதான் கிடைத்தன.

ஊரும் பேரும்

chitoor

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம். பிறந்து வளர்ந்தது வாழ்வதென அனைத்தும் இங்கேதான். ஊரைச்சுற்றி மலைகளை ரசிக்கலாம். பனியோ, வெயிலோ, குளிரோ எல்லாமே அதிகம். உணவில் காரம் அதிகம் சேர்த்து கொள்வோம். மாம்பழம், வெல்லம், சிவப்பு சந்தனம், பால்கோவா, கிரானைட் போன்றவை பிரசித்தி பெற்றவை. மார்கழிப்பனியில் அதிகாலையில் பச்சை தண்ணீரில் குளித்து, மலைக்கோயில் முருகன் கோயிலுக்குப் போகும் வழியில், தாத்தா வாங்கி தந்த டீயை குடித்துவிட்டு அவரோடு வெடவெடத்துக்கொண்டு போவது ஒரு சுகானுபவம்.. குளிர் தளர்ந்து ஒரு தெய்வீகம் மனசை சூழும் அந்த நொடி பிறப்பின் அதிசயம் கண்ட தருணமாக இனிக்கும். மூலை, முடுக்கு, சந்து, பொந்தெல்லாம் என் சினேகத்தின் வாசனை நிறைந்திருக்கும் என் ஊரில்!

புத்தகங்கள்

kadal-pura

marapasu

parisukku-po

மரப்பசு, கங்கை எங்கே போகிறாள், பாரீசுக்கு போ, கடல் புறா, பாரதியின் கவிதைகள்…

குடும்பம்

கூட்டுக்குடும்பம் சுருங்கும் காலப்போக்குக்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல. எல்லோரும் சொல்லும் வழமையான வரிகள்… அழகான குழந்தைகள், உண்மையாக நேசிக்கும் கணவர் – மொத்தத்தில் அன்பான குடும்பம்.

பொழுதுபோக்கு

கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, ஃபேஸ்புக், பாடல்கள் கேட்பது, கிளாஸ் பெயின்டிங், எம்பிராய்டரி…

இயற்கை

nature

இயற்கையை வேட்டையாடி அழித்து, நாட்டை வெறிச்சோடி வெறுமையாக ஆக்கி வருகிறோம். இயற்கையை மாசு படுத்தாமல் இருத்தல், மரக்கன்று நடுதல் ஆகியவை அவசியத் தேவை இன்று. இயற்கை நம் வாழ்வாதாரத்துக்கு அவசியமான வரப்பிரசாதம். அழகு மட்டுமே இயற்கையல்ல… அடிப்படையே இயற்கைதான்.

தண்ணீர் சிக்கனம் – பிளாஸ்டிக் பயன்பாடு

தண்ணீர் சிக்கனம் இன்றைக்கு அத்தியாவசியமாகிப் போனது. மழை நீர் சேகரிப்பு அவசியம், ‘அதற்கு மழை வந்தால்தானே!’ என்பதற்கு விடை யாரிடமுமில்லை. ஆகையால் இயன்ற எல்லா வகையிலும் நீரை சேமிக்கப் பழக வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

plastic

மக்காத பொருளாகிய ப்ளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது என்று சொல்வதை விட தவிர்த்தல் நலம். கெடுதி மட்டுமே இதன் ஆய பயன் என்றபடியால் இதைக் கையாள்வதை நிறுத்த வேண்டியது அவசியம்.

சமூக அக்கறை

நிறையவே உண்டு. வறுமை ஒழிய வேண்டும் என்பதே தலையாய எண்ணம். கல்வியை அனைவருக்கும் பயிற்றுவிக்க வேண்டும். அது வியாபாரமயமாவதை கட்டுப்படுத்த வேண்டும். சமூகத்தையும் அரசியல்வாதிகளையுமே குறை கூறிக்கொண்டு நம் கடமையை தட்டிக்கழிக்காமல் நம்மால் இயன்றதை செய்யலாம். நம்மைச் சுற்றி இருக்கும் இடங்களை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரு சிறு மரக்கன்றை நடுவது கூட சமூக அக்கறையே…

மனிதர்கள்

கவலையோடு இருக்காதீர்கள்… கருணையோடு இருங்கள்.

பிழைகள் நேரலாம் அரிதாக மட்டுமே.

மனிதப்பிறவி என்பது ஒரு கொடுப்பினை… மலிவான மனிதர்களிடம் விலை போகாதீர்கள்.

நம் நம்பிக்கைக்கு புறம்பான செயல்பாடுகளை ஆதரிக்கவும் வேண்டாம்… துணை நின்று தூக்கி விடவும் வேண்டாம்… மனிதனுக்குரிய பண்புகளை மட்டும் பராமரித்து வந்தால் போதும்.

புறம் பேசுதல், பொது இடத்தை அசுத்தப்படுத்துதல், இயன்ற வரை மற்றவர்களை சொற்களாலும் செயலாலும் காயப்படுத்தாமல் இருத்தல், உணவை வீணடிக்காமல் இருத்தல் போன்றவை வேண்டும். முடிந்தவரை அனைவரிடத்திலும் அன்பாக இருத்தல் நலம்.

உறவுகள்…

சொந்தங்கள் வழமை போல் அனைவரும் உண்டு. கற்றுக்கொண்ட்து… இனிப்பு இருந்தால் ஈக்கள் மொய்க்குமென்று.

நேர நிர்வாகம்

TimeManagement

நேரப் பற்றாக்குறை என்று எதுவுமில்லை. வீட்டு வேலைகளை நானே செய்து கொள்வதால் நேரம் வீணாவதுமில்லை. என் கைப்பட செய்து கொள்கிறேன் என்கிற நிறைவும் உண்டு. வீட்டு வேலைகள் போக, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, இதர பணிகளை செய்ய போதுமானதாக இருக்கிறது நேரம். இதில் முகநூல் அரட்டை, பத்திரிகைகளுக்கு எழுதுவது, கவிதை கட்டுரை எழுத என எல்லாவற்றுக்கும் நேரம் கிடைக்கவும் செய்கிறது.

சமையல்

Cooking

அசைவம் சமைப்பதில் ஆர்வம் அதிகம். வெரைட்டி உணவுகள் பற்றி ஓரளவே தெரியும். பெரும்பாலும் இன்றளவும் என் பாட்டி கைப்பக்குவமே சமைப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் பண்பாடான விருந்தோமல் மிகவும் பிடித்த ஒன்று.

கடந்து வந்த பாதை

என் பாதையும் எல்லார் பாதையை போல மேடும் பள்ளுமுமாகத்தான். நேர்த்தியான சாலை இருந்து விட்டால் பயணம் எளிதாகிவிடும். வாழ்க்கை என்பதே ஒரு பந்தயம். ஒரு சிறந்த சாலையில் ஓடவிட்டால் எல்லாரும் எளிதாக வெற்றி பெற்று விட மாட்டோமா என்ன? அதனால்தான் எல்லாருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் பாதை கரடு முரடானதாகவே இருக்கும். இதில் ஏழை பணக்காரன் விதி விலக்கல்ல.

சினிமா

bharathiraja

kb

saritha

சில வருடங்களுக்கு முன் பைத்தியமாக இருந்தவள்தான். பிடித்த இயக்குநர்கள் கேபியும் பாரதி ராஜாவும். கேபி, பாரதி ராஜா, பாக்கியராஜ், டி.ஆர்., பார்த்திபன், சேரன், கே.எஸ்.ஆர்… இப்படி பலரின் டைரக்‌ஷன் ரொம்ப்ப் பிடிக்கும். சரிதாவின் மிகப்பெரிய ரசிகை. நடிகர்களில் முரளி என் அபிமானம். எம்.எஸ்.வி., இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசையை மிகவும் ரசிப்பேன். கருப்பு-வெள்ளை படப் பாடல்கள் மேல் தீராக்காதல்.

உடலும் மனமும்

உடல் நலம்… ‘நோயற் வாழ்வே குறைவற்ற செல்வம்.” இதை அனைவரும் வார்த்தைகளாக அல்லாமல் செயலிலும் பின்பற்ற வேண்டும். மன நலம்… இதை பேணிக்காப்பது சற்று சிரமான ஒன்றே. இதை சீர்கெட வைப்பது எதிர்ப்பாராமல் நிகழும் அல்லது நேரும் பிரச்னைகளே…

எழுதியதில் பிடித்தவை

‘தீட்டுத்துணி’ என்ற கட்டுரை… பெண்களின் உடல் ரீதியான அந்த நாட்களின் வலியையும் மலிவான வார்த்தைகளால் பெண்களை எள்ளல் செய்வதை துச்சமாக தூக்கியெறிந்த வரிகளையும் அடக்கியது. சுமார் ஆயிரத்துக்கும் மேலான பகிர்வுகள் இதற்குக் கிடைத்தன. அடுத்து கவிஞர் வாலிக்கு எழுதிய அஞ்சலி உரை. ஆண்கள் தினத்தன்று எழுதிய ‘வேரின்றி மரமே ஏதம்மா?’ என்ற கட்டுரை… பல நூறு நண்பர்களால் பாராட்டப்பட்டும் வாழ்த்தப்பட்டும் என்னை அவர்கள் நெகிழ வைக்க்க் காரணமானது.

இசை

music

இசையில் எனக்கு மிகவும் பிடித்தது மெலடி. இதில் நாட்டுப் பாடல்களும், கர்னாடிக் இசையும் எனக்கு பிடிக்கும். இரண்டிலும் குறிப்பிட்ட அளவு தேர்ந்த அறிவாற்றல் இல்லையென்றாலும் ரசிக்கும் பக்குவம் சற்று அதிகமாகவே உண்டு. கண்மூடி, தலையசைத்து அதில் லயித்துக் கிடக்கும் தருணம் வாழ்வில் ஒப்பிட ஏதுமில்லாத காரணங்களாகும்.

பிடித்த ஆளுமைகள்

மகாகவி பாரதியும் இயக்குநர் சிகரம் கே.பி.யும்… இவர்களை வழித்தடங்களாகக் கொண்டு இயங்கவும் செய்கிறேன்.

பிடித்த பெண்கள்

என் பாட்டி… தாயின் மேலாய் சீராட்டி செல்லமும் அதற்கிணையாக கண்டிப்பையும் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் தன் வாழ்ந்து எங்களுக்கு அதை சாராமாக ஆக்கித் தந்தவர்… என் கண்கள் கண்டு களித்த மேன்மை கொண்ட பெண். அடுத்து என் மகள்… குருவாயக இருந்து போதிக்கிறாள்… தாயாக இருந்து தாங்குகிறாள்…

எங்கள் வீட்டில் வேலைக்கு உதவிக்கு வைத்திருந்த பெண். இளம்பிராயத்தில் திருமணம். இரண்டு பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. பொறுப்பில்லாத கணவன் கடைசியில் ஒரு நாள் தற்கொலை செய்துக் கொண்டு செத்துப்போக, தன் குடும்பத்தையும் தன் தாயையும் தங்கையையும் அவள் குடும்பத்தையும் தாங்கும் சுமைததாங்கி… பெயர் கிருஷ்ணவேணி.

ஃபேஸ்புக்… கற்றதும் பெற்றதும்

நிறைய பத்திரிக்கைகள்… அதன் வாயிலாக எழுத வாய்ப்பு. அப்படிப் பெற்ற தகுதிதான் இதோ இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இந்த சொல்லுக்கான தகுதியும். நிறை குறை எங்கும் உண்டு. நம்பிக்கை என்ற ஒன்றை எல்லாரிடம் வைக்க கூடாதென்றும் நம் குடும்ப விஷயங்களையும் பலவீனங்களையும் புறவெளியில் பகிரக்கூடாதென்பதும் இங்கு கற்றதே!

வீடு

தேவையான பொருட்களை சுத்தமாக அதனதன் இடத்தில் வைப்பதிருப்பதே ஒரு கலை. தேவைக்கதிகமான பொருட்களை, அது அலங்கார பொருட்களாகவே இருந்தாலும் கூட நெருக்கி நெருக்கி வைக்கும் போது ஒரு மூச்சடைக்கும் தொனி உருவாகும். வீடு என்ற பட்சத்தில் அத்தியவசியமாக இருக்க வேண்டியது முதலுதவி பெட்டி. இதில் தலைவலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, இருமல், காதுவலி, கண்வலி, காய்ச்சல் இவற்றுக்குத் தேவையான மாத்திரைகளும் டெட்டால், இலவம் பஞ்சு, டிங்சர், பேண்டேஜ், தைலம், பெயின் கில்லர் போன்ற மருந்துப் பொருட்களும் ஒரு பெட்டியில் தயார் நிலையில் இருக்கும். சமையல் அறையில் பர்னால் இருப்பது அவசியம் என்பதை உணர்ந்து அதை வைத்துமிருக்கிறேன். இன்டீரியர் டெகரேஷன் எல்லாமே அவரவர் பொருளாதராத்துக்கு ஏற்ப எளிமையாக இருத்தல் நலம். தரையைத் துடைத்து, சுத்தப்படுத்தி பளீரென்று எப்போதும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பே வீட்டை பேரழகாகக் காட்டும்.

எழுத்தும் வாசிப்பும்

எழுத்து என் பித்து… எழுதாமல் இருத்தல் என்னால் சாத்தியமாகாத ஒன்று. எப்போதும் மனம் எதையேனும் எழுதவே அசை போட்டபடி இருக்கும். வாசிப்பும் உண்டு. அதிக அளவு ஈடுபட்டு வாசித்ததில்லை. தொடங்கிவிட்டாலோ ஆயிரம் பக்கமென்றாலும் இரண்டு மூன்று நாட்களில் முடித்து விடுவேன்… வாசிப்பில் என்னை செலுத்த்த் தொடங்கினால் என் உலகம் தனியானதாகிவிடும்.

Star Thozhi 1 copy

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

ஸ்டார் தோழி – 15

Image courtesy:

http://www.fameofcity.com

http://stylonica.com/

http://static.guim.co.uk

http://www.convertwithcontent.com

http://www.firsttimerscookbook.com

http://cdn2.liquiddnb.com

ஸ்டார் தோழி – 15

ஒரு தோழி பல முகம்

star thozhi 1

தேனம்மை லெக்ஷ்மணன்

நான்…

ரொம்ப பர்ஃபெக்ட் என்று நினைத்துக் கொள்ளும் சாதாரண மனுஷி. வெற்றியைக் கொண்டாடுகிறேனோ இல்லையோ தோல்வியைக் கொண்டாடி விடுவேன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்யும் அனுசூயையாகவோ, அமிர்தானந்தமயியாகவோ, கிரேக்க தேவதை ஹீராவாகவோ (HERA) நினைத்துக் கொள்வதுண்டு. என் தந்தை தாய்க்கும் என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் தோழி. அப்புறம் முகநூல் நட்பு வட்டத்தில் அனைவருக்கும் பாசக்கார அக்கா!

பள்ளியும் ஆசிரியர்களும்

காரைக்குடி அழகப்பா ப்ரப்பரேட்டரியில் கே.ஜி. படித்தேன். அதிகம் ஞாபகமில்லை. மன்னார்குடி கணபதி விலாஸில் மூன்றாம் வகுப்பு சண்முகம் சாரைப் பார்த்தால் மிரட்சியாக இருக்கும். எங்கள் ஆசிரியர்கள் இல்லத்துக்கே வந்து ட்யூஷன் சொல்லிக் கொடுக்கும்படி அப்பா ஏற்பாடு செய்திருந்தார்கள். அடுத்து செயின்ட் ஜோசப். அங்கே தங்கம் மிஸ், மைதிலி மிஸ், பிளஸ் டூவில் ராஜேஸ்வரி மிஸ். எந்த ஆட்டபாட்டமும் இல்லாமல் எல்லா இடங்களிலும் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாகவே வளர்க்கப்பட்டதுதான் ஞாபகம் வருது. பள்ளியில் தமிழ் ‘அறம் வாழி’ மாஸ்டரும் ஃபாத்திமா கல்லூரியில் சுசீலாம்மாவும் ஃபாத்திமாம்மாவும் இன்றைய என்னுடைய தமிழுக்குக் காரணம்னு சொல்லலாம். மொழிப்பிழையில்லாமல் எழுதக் கற்றுக் கொண்டதும் பெரியோர் வார்த்தைகளைச் சிரமேற்கொண்டு நடந்துகொள்ளவேண்டும் என்று வளர்த்தெடுத்ததும் பள்ளி போதித்தது என்று குறிப்பாக சொல்லலாம்.

ஊர்

hyderabad

இப்போது ஹைதராபாத். இங்கே சில்பாராமம் கிராமம் அழகு. ஹைடெக் சிட்டி தொல்லைகள் இல்லாத ஹைடெக் வாழ்க்கை. இன்னும் தெலுங்கு கற்றுக் கொள்ளவில்லை. இங்கே இருப்பவர்கள் அனைவருக்கும் ஹிந்தி (பள்ளியில் கட்டாயப் பாடம்) தெரிவதால் மொழிப் பிரச்னை பாதிக்கவில்லை. இங்கே ஹைதராபாத் பிரியாணியும் ஹலீமும் ஸ்பெஷல் என்பார்கள். எனக்கோ கோங்குரா சட்னி பிடித்திருக்கிறது. நிறைய விதம் விதமான சட்னி (பீரகாய சட்னி, ஊர்ப்பிண்டி சட்னி) வகையறாக்கள்தான் ஆந்திர சமையலில் இடம் பிடிக்கின்றன. எளிமையான இனிய மக்கள். இன்னும் பாரம்பரிய உணவுகளுக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பு.

புத்தகங்கள்

Crime and Punishment-3 new

sivakamiyin sabadham

விக்டர் ஹியூகோவின் ‘ஏழை படும்பாடு’, ஃப்யோதர் தஸ்தாவ்யெஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ (சுசீலாம்மா மொழி பெயர்ப்பு). வைக்கம் முகம்மது பஷீரின் ‘மந்திரப் பூனை’. கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’. சுசீலா தேஷ்பாண்டேயின் ‘மௌனத்தின் குரல்’.

ஃப்ரெஞ்சுப் புரட்சியில் தாய் தந்தையை இழந்த கோஸ்த் ம், ஜீன் வல் ஜீனும் , எதிர்பாராமல் ஒரு கொலை செய்துவிட்டு மனச் சிக்கலுக்கு உள்ளாகி கடைசியில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சைபீரியச் சிறைக்குச் செல்லும் வெகுசாமான்ய இளைஞன் ரஸ்கோல்னிகோவும், நம்முன்னே இருக்கும் சௌபாக்கியவதிகளைப் பற்றிய நுண்மையான பார்வையில் மிக அருமையான ஹாஸ்யமான கதைகள் படைக்கும் பஷீரும், ‘நாட்டியப் பெண்கள் மனோராணிகளாகலாம். மகாராணிகளாக முடியாது’ என்று உணரும் சிவகாமியும், என்னைப் போன்ற குடும்பத் தலைவியாகத் தன்னைப் பூரணமாக வெளிப்படுத்தும் ஜெயாவும் என்னை ஆட்டிப் படைக்கிறார்கள்.

குடும்பம்

கணவர் வங்கி கணக்காய்வாளர். என் எல்லா முயற்சிகளுக்கும் துணை நிற்பவர். மனைவியாகவும் அம்மாவாகவும் மட்டுமே இருந்த நான் சில வருடங்களாக வலைத்தளம், பத்திரிகைகளில் எழுதவும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவும் செய்கிறேன். அப்போதெல்லாம் ஊக்கம் கொடுப்பார். .பையன்கள் திருவேங்கடநாதன், சபாரெத்தினம். பொறியியல் வல்லுனர்கள். மூவரும் என் மனோபலம்.

பொழுதுபோக்கு

புத்தகங்கள் வாசிப்பது, கவிதை, கதை, கட்டுரை எழுதுவது, பின்னல், தையல் வேலைகள். (ஹாண்ட் எம்பிராய்டரி, க்ரோஷா, ஸ்வெட்டர் பின்னுதல்), சுடோகு போடுதல், வீட்டுத் தோட்டம், பயணம் செய்வது, சமையல் குறிப்புகள் எழுதுதல், கோலங்கள் போடுதல் மற்றும் வலைத்தள எழுத்து. 5 வலைத்தளங்களில் எழுதி வருகிறேன். (சும்மா, டைரிக் கிறுக்கல்கள், கோலங்கள், THENU’S RECIPES, CHUMMA!!! ).

இயற்கை

ரொம்ப சீரழிந்து கொண்டிருக்கிற ஆனால் பாதுகாக்கப்படவேண்டிய விஷயம். பெட்ரோலுக்காக ஜட்ரோப்பா கார்க்கஸ்னு ஒரு செடியின் எண்ணெயை மாற்றாக உபயோகிக்கலாம். அதேபோல மின் தேவைக்காக அச்சுறுத்தும் அணுமின்சாரம் தவிர்த்து நீர், காற்றாலை போன்றவற்றில் கிடைப்பதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம். ஆற்றில் மணல் அள்ளுவதைத் தவிர்த்து செயற்கை மணல், ஹாலோ ப்ளாக்ஸ் போன்றவற்றை உபயோகிக்கலாம். பின்னாடி வர்ற தலைமுறை வாழ நாம் இந்த மண்ணை மட்டுமாவது விட்டுட்டுப் போகணும்.

தண்ணீர் சிக்கனம் / பிளாஸ்டிக் பயன்பாடு

RainWaterHarvesting

குடி தண்ணீரை கேன்களில் வாங்கும் சமூகத்தில் வசிக்கிறோம் நாம். மழை நீர் சேகரிப்பு ஒவ்வொரு கட்டிடத்துக்கும் வீட்டுக்கும் அவசியம். ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில் மழை நேரங்களில் வழியும் நீர் ஆழ்கிணறுகளில் சேமிக்கப்பட்டு உபயோகப்படுது. நம்ம ஊர்ப்பக்கம் எல்லா வீடுகளிலும் போர்வெல் போட்டு பூமியைத் துளைச்சிருக்காங்க. நதிகளில் சம்பாப் பருவங்களில் விடப்படும் நீர் பிளாஸ்டிக் குப்பைகளோடு ஓடுது.

plastic

30 வருடங்களுக்கு முன் பிளாஸ்டிக் பைகள் ரொம்ப இல்லை. மலேஷியாவிலிருந்து உடைகள் பொருட்கள் கொண்டுவரும் உறவினர்கள் அதைப் பாலித்தீன் பையில் போட்டுக் கொடுப்பார்கள். ரொம்ப வாசனையா மென்மையா இருக்கும் அந்தப் பைகள் ஒன்றிரண்டு பார்ப்பதே அபூர்வம். இப்போ பார்த்தா வீட்டை விட்டு வெளியே காலை எடுத்து வச்சா ரோடு, மரம், செடி, கொடி, நதி, சாக்கடை, கடல் என்று எல்லா இடத்திலும் பிளாஸ்டிக் குப்பைகள்தான். பால் பாக்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் எல்லாவற்றையும் நாம் பாலிதீன் பைகளில் வாங்கி வந்துதான் உபயோகிக்கிறோம். பெருகிவரும் கான்சர் போன்றவற்றுக்கு இவைதான் மூலகாரணமாக இருக்கக் கூடும். பழைய மாதிரி கடைக்குப் போகும்போது மஞ்சள் பை, ஜவுளிக்கடைப் பைகள், எடுத்துச் செல்லலாம். எண்ணெய், பால் போன்றவற்றை பூத் போல வைத்து பாத்திரங்களில் வாங்கிச் செல்லும்படி அமைக்கலாம். உணவுப் பொருட்களை முடிந்தவரை பிளாஸ்டிக் டப்பாக்களில் வாங்கி உண்ணாமல் இருப்பது நலம்.

சமூக அக்கறை

பெண்களுக்கான சமத்துவமும் உரிமையும் கிடைச்சிட்டதா சொன்னாலும் இன்னும் பேலன்ஸ்டா இருக்காத இருவேறு சூழ்நிலைகளில்தான் பெண்கள் வாழ்றாங்க. கிராமங்களில் சிசுக்கொலை, கருக்கொலை, கல்வி மறுப்பு, குழந்தைத் திருமணம், வேலைவாய்ப்பு மறுப்பு, குடும்ப வன்முறை போன்றவை அதிக அளவில் இருக்க, நகரங்களில் விவாகரத்து, லிவிங் டுகெதர், குடிப்பது, சிகரெட் புகைப்பது , போதைப் பொருட்கள் உபயோகிப்பது போன்றவை சுதந்திரம் என்று நினைக்கிறார்கள். எங்கேயும் பெண்களுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லை.. வேலைக்குச் செல்லுமிடத்தில் கல்வி கற்கச் செல்லுமிடத்தில் பாலியல் தொந்தரவுகள், குழந்தைகளுக்கான செக்ஷுவல் அப்யூஸ், ஆகியவை இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட வேண்டியவை. சாதி, மத, இன ரீதியிலான பிரிவினைகள் இருக்கக் கூடாது.

மரபணு மாற்றப் பயிர்கள், விதைகள், உரங்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவதைத் தடை செய்யணும். விவசாயிகள் நமது பாரம்பரிய முறையில் மீண்டும் பயிர்செய்து நம் மண்ணை வளப்படுத்தித் தாங்களும் வளமாக வாழணும். நீர் மின்சாரம் போன்றவற்றை மாநிலங்கள் பகிர்ந்து வாழப் பழகணும்.

மனிதர்கள்

பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திப்பது எப்போதும் பிடித்தமானதாக இருக்கிறது. 1 வயதுக் குழந்தையானாலும் 100 வயது ஆனவர்களானாலும் ஒற்றைப் புன்னகையில் சிநேகமாகி விடுகிறார்கள். நட்பு, வெறுப்பு விருப்பு, அன்பு, பாசம், காமம், குரோதம், நெகிழ்ச்சி அனைத்தும் கலந்தவர்கள்தாம் அனைவருமே. எல்லாரிடமும் நல்லவையும் நிரம்பி இருக்கின்றன. நமக்கான நல்லதை மட்டுமே அவர்களிடமிருந்து எடுத்துக் கொண்டு அல்லதை அங்கேயே விட்டுவிடவேண்டும். ரூமி சொன்னபடி What you seek seeks you… அனைவரிடமிருந்தும் கற்றுக் கொள்கிறோம். நம்மிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொள்ளக் கூடும்.

பிறந்த ஊர் / சொந்தங்கள்

பிறந்த ஊர் காரைக்குடி. அப்பத்தா வீட்டு அருணாசல ஐயா, அன்பாலே செய்த மனிதர். அப்பா, ‘உனக்கு நல்லது கிடைத்தால் உன் அதிர்ஷ்டம், கெடுதல் கிடைத்தால் என் துரதிர்ஷ்டம்’ என்பார். எல்லா இடத்திலும் என் உறுதுணையாக இருப்பார். இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் இதே பெற்றோருக்கு மகளாகப் பிறக்கவேண்டும். தம்பிகள் மூவர். அனைவரும் பாசக்காரர்கள்தான். நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர் கொண்ட காலத்திலும் அப்பாதான் தோள் கொடுத்தவர். அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் என்றாலும் பாசக்காரர். தங்கள் தேவையை எல்லாம் எளிமையாக்கி, கோயில், திருமணம், படிப்பு செலவு என்று தேவைப்படுவோருக்கு அப்பா, அம்மா உதவி செய்வதும், 70 வயதிலும் அம்மா சிஎன்பிசி, என்டிடிவி பார்த்து போன் மூலமாகவே ஷேர் பிஸினஸ் செய்வதும் பிரமிக்கவைக்கும் விஷயங்கள். வீட்டில் வேலை செய்ய வரும் யாரையுமே பிள்ளைகள் போல அம்மா, அப்பா நடத்துவதும் ரொம்பப் பிடிக்கும்.

நேர நிர்வாகம்

Time-Management

ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருந்தாலும் கடைசி நேரம் சில சமயம் பரபரப்பாகி விடும். இப்போதுதான் அது ஒழுங்குக்கு வந்திருக்கிறது. அரக்கப் பரக்க ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடுவது, பிள்ளைகளின் ஸ்கூல், காலேஜ் போன்றவற்றுக்கும், சினிமா, விருந்து, கோயில் போன்றவற்றுக்கும் போகும் போதும் வீட்டு வேலைகளை முடித்து க்ளியர் செய்துவிட்டுப் போகவேண்டும் என்று அரக்கப் பரக்கச் செய்வேன். இப்போது முதல் நாளே ப்ளான் செய்துவிடுவதால் சீக்கிரம் செய்துவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கிறேன். (இத கத்துக்க இத்தனை வருஷம் ஆச்சான்னு கேக்காதீங்க. இப்போத்தானே பிள்ளைகள் நம்மை டிப்பெண்ட் பண்ணாம இருக்காங்க.!!)

சமையல்

cooking

ரொம்பப் பிடிச்ச விஷயம். விதம் விதமா மட்டுமில்ல. டெய்லி சமையலையே ரொம்ப ரசிச்சி செய்வேன். பொருத்தம் பார்த்துத்தான் சமைப்பேன். ஒண்ணு காரம்னா ஒண்ணு எளசா, அப்பிடி. நளபாகம்தான்னு சாப்பிடுறவங்க எல்லாம் சொல்வாங்க. நிறையப் பேருக்கு அவங்க சமைச்சது பிடிக்காது. ஆனா, என் சமையலை நானே ரசிச்சிச் சாப்பிடுவேன். அவ்ளோ பிடிக்கும். செட்டிநாட்டு சமையல் மட்டுமில்ல எந்த ஊருக்குப் போறோமோ அந்த ஊர் சமையல் எல்லாம் ட்ரை பண்ணி சமைச்சு டேஸ்ட் பண்ணிடுறது உண்டு. (டெஸ்ட் இல்லைங்க அதை எல்லாம் ஃபோட்டோ எடுத்து ப்ளாக்கில் சமையல் குறிப்பு எழுதுறது.

பிற கலை

KOLAM

ஓவியம், கோலம் போடப் பிடிக்கும். ஒவ்வொரு பண்டிகைக்கும், கடவுளுக்கும் ஏத்த மாதிரி தீம் கோலங்கள் போட்டு வச்சிருக்கேன் என்னோட கோல ப்ளாக்கில். ராசிக் கோலங்கள், கிழமைக் கோலங்கள், கிராம தெய்வக் கோலங்கள், முருகன், சிவன், அம்மன், விநாயகர், பெருமாள், ஐயப்பன் கோலங்கள், மார்கழி, பொங்கல், தீபாவளி, ஓணம், நவராத்திரி, மாசி மகம்,தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், ஆடி மாதம் அம்மனைப் பற்றி என்று கோலங்கள் வரைந்து ப்ளாக்கில் போட்டு இருக்கிறேன்.

வீடு – அலுவலகம் பேலன்ஸ் செய்வது…

வீடுதான் என் ஒரே இடம். என் சுவாசம் போல அது. ஒவ்வொரு வீட்டை விட்டுப் போறதும் தோழியைப் பிரியறது போலக் கஷ்டமா இருக்கும். அப்புறம் அடுத்துப் போற வீடும் புதுத்தோழி போலப் பழகி அன்னியோன்யமாகிடும். இதுவரைக்கும் ட்ரான்ஸ்ஃபர் காரணமா 25 வீடுகள் மாறி இருப்போம். எனக்கு எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்கணும். அப்பப்போ க்ளீன் பண்ணி அடுக்கி வச்சுக்கணும். அடிக்கடி வீடு , ஊர் மாறுறதால வேலைக்கு ஆள் கிடைக்காது. பொறுமையா அதெல்லாத்தையும் நானே செய்துக்குவேன். பெட், புக்ஸ், ட்ரெஸ் ஷெல்ஃப், சாமி ஷெல்ஃப், கிச்சன் எல்லாம் பளிச்சின்னு இருக்கும். வீடு நீட்டா இருந்தாத்தான் எனக்கு மைண்ட் கிளியரா இருக்கும்.

கடந்து வந்த பாதை

கல்லூரியில் படிக்கும்போது நிறைய கவிதைகள் எழுதியுள்ளேன். சில கல்கி, புதியபார்வை, சிப்பி, வைகறை, புரவி, நம் வாழ்வு போன்ற பத்ரிக்கைகளில் வந்துள்ளன. மாணவ நிருபராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. அதன் பின் திருமணம் ஆகிவிட்டது. முழுநேர இல்லத்தரசி. பிள்ளைகள் கல்லூரி செல்லும் வரை எந்த வெறுமையும் தெரியவில்லை. அவர்கள் வேலைக்குச் சென்றவுடன் ஏற்பட்ட தனிமையைத் தீர்க்க வலைப் பூ தொடங்கி, எழுத ஆரம்பித்தேன். பத்ரிக்கைகளும் வாய்ப்புக் கொடுக்க எழுத்தாளர் ஆகிவிட்டேன். கடந்துவந்த பாதை கரடும் முரடும். ஆசையும் நிராசையும் பள்ளமும் மேடும் நிரம்பியதுதான். என்றாலும் இன்று அடைந்திருக்கும் இடம்தான் மனதில் இருக்கிறது.

சினிமா பிரபலங்கள்

எப்படியும் சினிமாவுக்கு ஒரு பாடல் எழுதிடணும்னு வலைப்பூ எழுத வந்த ஆரம்பத்தில் நினைத்ததுண்டு. அதுவும் ஷங்கர் டைரக்‌ஷனில், ரஹ்மான் இசையமைப்பில் என் பாடல் இடம் பெறணும்னு பேராசை கூட இருந்தது. அதுக்காக நிறைய மெனக்கெடனும்னு சொன்னாங்க. நாம யாருன்னே அவங்களுக்குத் தெரியாதில்ல. ஒரு வலைப்பதிவரா நான் எழுதிய கவிதைகள் இரண்டை முகநூல் நண்பரும் இயக்குநருமான ஐஎஸ்ஆர் செல்வகுமார், இசையமைப்பாளர் விவேக் நாராயணின் இசையமைப்பில் மகளிர்தினப் பாடலா இசையமைச்சு வெளியிட்டார். முகநூல் நண்பர்கள் சேரன், மிஷ்கின், பாரதி மணி, நிகோலஸ் ராஜன், மோகன், இயக்குநர் செல்வகுமார் இவங்கதான் எனக்குத் தெரிஞ்ச சினிமாக்காரங்க.

உடல் – மனம்

bharathiar

‘விசையுறு பந்தினைப் போல உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’னு பாரதியார் பாடுனது ரொம்பப் பிடிக்கும். பேச்சு எப்பிடி ஃபாஸ்டோ அதே போல உடம்பும் செயல்படணும்னு நினைப்பேன். அதுக்காக பறக்குறது போல நடந்து அடிக்கடி காலை ஒடச்சுக்குவேன். உடம்புல கால்சியம் குறைவா இருந்தாலும் இப்பிடி ஆகும்னு சொல்றாங்க. ‘அனைத்துக்கும் ஆசைப்படு’ அப்பிடின்னு சொல்றாங்க. ஆனா, ‘அப்செட் ஆகு’ன்னு சொல்லல. ஆசைப்படுறனோ, இல்லையோ அப்பப்போ மூட் அவுட் ஆகி, அப்புறம் என்னை நானே சரிப்படுத்திக்குவேன். Don’t expect, don’t compareனு சொல்லிக்கிட்டு!

எழுதியதில் பிடித்தது

கல்யாண முருங்கை

கோலமாவில் தோய்ந்த முஷ்டிகளால்

உன் பாதங்கள் வரைகிறேன்…

சீடைகள் செய்யத் தெரியாததால்

வெண்ணை கடைந்து வைத்திருக்கிறேன்…

நீ பிடிப்பிடியாய் உண்ணும் அவலும் கூட.

விஷம் கக்கும் பூதனை, காளிங்கன்

இல்லை இங்கு…

அன்பைக் கக்கும் நான் மட்டுமே.

வருடம் ஒரு முறை

வருகிறாய் வீட்டுக்குள்…

என் வயிற்றில் ஒரு முறையாவது வாயேன்.

உறை பனியிலிருந்து

குழாய் வழிப் பயணத்திலோ

தொட்டிலில் இருந்து தத்தாகவோ…

***

சுமந்தவள்

அவள் கண்கலங்க அமர்ந்திருந்தாள்.

என்னைப் பிரியும் துயரம்.

முன்பே பிரித்திருக்கிறாள்.

பிரித்தபின் மகிழ்ந்திருக்கிறாள்.

எனக்கும் துயரம்தான்

இருந்தும் வலைபின்னிக்

கிடக்கிறது வலியப்

பிரியவேண்டிய வேலை.

வழக்கம்போல அணைத்தாள்.

நெற்றியில் முத்தமிட்டாள்.

முதுகுச் சுமை விட

கனமாய்க் கிடந்தது அவளது அன்பு.

கடக்க நினைகிறேன்.

கண்ணீர் பெருகுகிறது.

உப்புமுட்டையாய் இறக்கமுடியவில்லை

வயிற்றில் சுமந்தவளின் அன்பை…

***

உதறப்பட்ட வார்த்தைகள்

மௌனக்கூடுடைத்து

வார்த்தை சிறகுகளில்

வலம் வரும் பட்டாம்பூச்சிகள்

வீழ்ந்து கிடக்கும்

வெள்ளைத்தாள்களில்

தொத்தி தொத்தி

கிறுக்கலாகின்றன.

நிம்மதியின்மையை

சுமந்த தாள்

தாளமுடியாமல்

காற்றில் தலைதிருப்பி

உழன்று கொண்டிருக்கிறது,

உதறப்பட்ட வார்த்தைகளோடு.

இசை

music

பழைய திரை இசைப் பாடல்கள், சில ஹிந்திப் பாடல்கள், ரிக்கி மார்ட்டின், மோரிஸ் ஆல்பர்ட், ஈகிள்ஸ், பீட்டில்ஸ், ஜாஸ், பாப், ராக், கஜல், கவ்வாலி, ஹிந்துஸ்தானி, கர்நாடக சங்கீதம் என்று எல்லாமே ரசிப்பது உண்டு. கேள்வி ஞானம்தான். பாடவோ இசைக்கவோ தெரியாது. (பாத்ரூம் பாடகி என்று வேண்டுமானால் சொல்லலாம்).

பிடித்த ஆளுமைகள்

THIRUSHKAMINI

அன்னை தெரசா, ஜெ.ஜெயலலிதாம்மா, இந்திரா காந்தி அம்மையார், மலாலா, அருந்ததி ராய் பட்டாச்சார்யா, சந்தா கோச்சார், பாடலாசிரியர் தாமரை. எழுத்தாளர் சுஜாதா, நடிகர்கள் பசுபதி, தனுஷ், நாடகத்தில் கோமல் சுவாமிநாதன், பெண் கிரிக்கெட்டர் திருஷ்காமினி.

பிடித்த பெண்கள்

குடும்பத்தில் அம்மா, ஆயா, அப்பத்தா, அத்தைகள் இவர்களது அன்பும் கண்டிப்பும் பிடிக்கும். தீர்க்கமான சிந்தனைகளோடு வளர இவர்கள்தான் காரணம். வெளியில் மோகனா சோமசுந்தரம், உமா ஷக்தி, தமிழச்சி தங்கபாண்டியன். என்றும் அன்பைச் சொரியும் முகநூல் சகோதரிகள் ராஜிகிருஷ் அக்கா, லலிதா முரளி, கயல்விழி லெக்ஷ்மணன், ராஜி மலர், வாணி மல்லிகை, கயல்விழி ஷண்முகம், மலர்விழி ரமேஷ், புவனேஷ்வரி மணிகண்டன், சித்ரா சாலமன், அரசி அன்புரத்னம், சாந்தி மாரியப்பன், வல்லிம்மா, ஏஞ்சல், கீதா இளங்கோவன், மணிமேகலை, விஜி, கவிதா, உமா மோகன் ஆகியோர்.

நகைச்சுவை

நான் கொஞ்சம் சீரியஸான ஆள். சீரியஸா பேசிக்கிட்டு இருக்கும்போதே அதை சீரியஸா எடுத்துக்கிடுவேன்னு வீட்டில் கிண்டலடிப்பார்கள்.

ஃபேஸ்புக் – கற்றதும் பெற்றதும்

எதைக் கொடுக்கின்றீர்களோ அதையே பெறுவீர்கள். நிறைய நட்பும், அன்பும் சில பாடங்களும் பெற்றதைக் குறிப்பிடலாம்.

அழகென்பது

உள் ஒளி.

வீடு

கிட்டத்தட்ட 25 வீடுகள் மாறி இருப்போம். ஒவ்வொரு வீட்டிலும் பல சௌகரியங்களும் சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. அடுத்து அடுத்து மாறுவதால் இருக்கும் வீட்டுக்கேற்ப பொருட்களை அடுக்கிக் கொள்வேன். வீடு விட்டு வீடு மாறும்போதெல்லாம் பல பொருட்கள் உடையும். பலது புதுசு வாங்குவோம். ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான வசதியை செய்து முடிக்கும்போது அடுத்த வீடு மாறிவிடுவோம். ஷாண்ட்லியர்ஸ், காலப்ஸ் வைத்த திரைகள், திவான், ஃப்ரெஞ்ச் டோருடன் கூடிய சொந்த வீட்டையும் பணி மாற்றத்தில் வாடகைக்கு விட்டு வந்தோம். கணவரின் ரிட்டயர்மென்டுக்குப் பிறகு சொந்த வீட்டில் செட்டிலாகும்போது இன்னும் பார்த்துப் பார்த்துச் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கு.

வாழ்க்கை

தீர்மானமாக இருப்பவர்கள் ஜெயிக்கிறார்கள். எது வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் கவனம் வேண்டும். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பதில் முழு நம்பிக்கை உண்டு.

மறுசுழற்சி

எதையும் வீணடிப்பதில் எனக்குப் பிரியம் கிடையாது. உடைகள் ஓரளவு நன்றாக இருந்தால் அந்த அந்த ஊரில் வேலை செய்யும் பெண்களிடமே கொடுத்துவிடுவதுண்டு. எந்தப் பொருள் ரிப்பேரானாலும் அதைப் பழுது நீக்கி உபயோகித்தலே சிறந்தது என்று நினைப்பேன். மார்க்கெட்டில் புதுசாக வந்திருக்கு என்று கம்ப்யூட்டரும், டி.வி.யும், செல்போனும், 4 பர்னர் அடுப்பும் வாங்கிக் குவிப்பதில் உடன்பாடு இல்லை. ஆனாலும் எப்படி எப்படியோ சேர்ந்துவிடும் சிலதை அடுத்த ஊருக்குப் போவதற்குள் தேவைப்படும் யாரிடமாவது கொடுப்பதுண்டு.

எழுத்தும் வாசிப்பும்

sathanai-arasigal-wrapper

anna-patchi-fb-500x416

என்னுடைய மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ‘சாதனை அரசிகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பு. இது வாழ்க்கையில் போராடி ஜெயித்த பெண்களின் வெற்றிக் கதைகளின் தொகுப்பு. ‘ங்கா’ – ஆராதனா என்ற குழந்தையின் புகைப்படங்களோடு கூடிய கவிதைத் தொகுப்பு. ‘அன்ன பட்சி’ என்ற தலைப்பில் என்னுடைய கவிதைத் தொகுப்பு.

பஜ்ஜி, சுண்டல் கட்டின பேப்பரைக் கூட விடாமல் படிக்கும் ரகம் நான். ஒரு புத்தகத்தை எடுத்தால் முதல் அட்டையிலிருந்து கடைசிப் பக்கம் முற்றுப் புள்ளி வரை படிப்பேன். இப்போதெல்லாம் முகநூலும் வலைத்தளமும் பெரும் நேரத்தை எடுத்துவிடுவதால் படிப்பது குறைந்துவிட்டது. வாசிப்புக்குத் திரும்ப யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிலும் வாங்கிய புத்தகங்கள் தேங்கிப் போய் இருக்கின்றன. அடுத்துப் படிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.

புகைப்படக்கலை

photography

போற ஊரைப் பார்க்கும் பொருளை எல்லாம் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் போடுவதுதான் ஒரே வேலை. என் லூமிக்ஸ் காமிராவில் எடுக்கப்படும் படங்கள் சில சமயம் அழகானதாக அமைந்துவிடுவதும் உண்டு. மேகத்தில் ஆஞ்சநேயர், குவாலியர் சூரியனார் கோயில் மயில், ஆந்திராவில் சன்செட், குல்பர்கா சோலே கம்பா மாஸ்க், பிதார் கோட்டை ஆகியன பலராலும் விரும்பப்பட்ட புகைப்படங்கள். உணவுப் புகைப்படங்கள் பல கூகுள் சர்ச்சில் அடிக்கடி சிக்கி முதலிடத்தில் இருக்கின்றன. குழந்தைகள், பூக்கள், விநாயகர் ஆகியோர் என் புகைப்படத்தில் முதலிடம் பெறுவார்கள். நேரடி ஒளிபரப்புப் போல எங்கு சென்றாலும் அந்த ஊரைப் பற்றி அல்லது அந்த நிகழ்வைப் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் எழுதுவது பிடித்தமான ஒன்று.

star thozhi 2

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

Image courtesy:

http://www.educationworld.in

http://www.plasticoceans.net

http://spinsucks.com

http://www.fubiz.net

http://puthu.thinnai.com/

http://hdwidescreenwallpapers.com

ஸ்டார் தோழி – 14

ஒரு தோழி பல முகம்

Star thozhi 03

பாரதி சுவாமிநாதன்

நான்…

என் பெயருக்கு ஏற்ப நான் பாரதி கண்ட புதுமைப்பெண்ணே! இப்போது பி.எல்.ஆர். குழும நிறுவனத்தில் புராஜெக்ட் மேனேஜராகப் பணியாற்றுகிறேன். இந்த உலகிலுள்ளவர்களைப் போலவே வாழ்க்கையில் நானும் எத்தனையோ பாத்திரங்களை வகித்திருக்கிறேன். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்தது ‘அம்மா’ ’ என்கிற பாத்திரம். நான் தாய்மையடைந்ததை அறிந்த தினம்… பிக்காஸோவின் அழகான ஓவியம், ஜான் கீட்ஸின் சிறந்த கவிதை, யானியின் மயக்கும் சிம்பொனியைப் போல அற்புதமான தினம். நிபந்தனையற்ற அன்பை வழங்கும் நிலைக்கு நான் வந்துவிட்டேன் என்பதை புரிந்து கொண்டேன் அன்று. என் வாழ்க்கையின் சாராம்சமே இக்கவிதை…

RGB 200x200

என்னுள்ளே

ஞானம் பெற வேண்டும் என்கிற ஆழமான விருப்பம்

என் குழந்தைப் பருவத்திலிருந்து…

வாழ்க்கை எனக்கு

இன்பமான அனுபவங்களைக்

கொடுத்திருந்தாலும்

அறியாமை இருட்டுக்குள்

உலக இயந்திரத்துக்குள்

என்னை நானே சிக்க வைத்தேன்.

உண்மையின் பாதையிலிருந்து

விலகி காணாமல் போனேன்.

அத்துடன் குடும்பத்துக்காக

சண்டையில் ஆழ்ந்தேன்.

வாழ்க்கையில் என்னென்னவோ

குழப்பங்கள் செய்தேன்.

இன்னும் எனக்கு கடவுளின்

ஆசீர்வாதம் இருக்கிறது…

நம்பிக்கையின் ஒரு துளி இருக்கிறது.

முயன்று வெற்றி பெற எனக்கு

ஒரு வழி கிடைத்ததைப் போல!

வசிப்பது…

‘சான்ஸே இல்ல… சான்ஸே இல்ல… நம்ம சென்னை போல வேற ஊரே இல்லை. இந்த பீச் காத்து மேல பட்டா போதும்டா… உனக்கு நல்ல ராசிடா… இனி நீ சென்னைவாசிடா…’’

யெஸ்… நான் இப்போது சென்னையில்தான் வசிக்கிறேன். குஜாரத்திலுள்ள பரோடாவில் பிறந்தேன். இருந்தாலும், இந்தியா முழுக்க உள்ள தேஜ்பூர்-அஸ்ஸாம், பாரக்பூர்-வங்காளம், ஆதாம்பூர், ஜலந்தர், அம்பாலா, சண்டிகர்-பஞ்சாப் போன்ற அழகான நகரங்களில் வளர்ந்தேன். அது, வெவ்வேறு கலாசாரங்களில் ஆழ்ந்த அறிவு பெறவும் சிறந்த மனுஷியாக நான் உருவாகவும் உதவியது.

படிப்பு

icecream

நம் நாட்டில், பல நகரங்களில் உள்ள ‘கேந்திரிய வித்யாலயா’’வில் என் பள்ளி வாழ்க்கை நடந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றேன். ஆறாவது படிக்கும் போது நடந்த ஒரு சம்பவம் எனக்கு இன்னும் தெளிவாக நினைவில் இருக்கிறது. அப்பா, சண்டிகர் ரோஸ் கார்டனில் நடந்த ‘ரோஜா திருவிழா’’வுக்கு அழைத்துப் போனார். எங்களுக்கெல்லாம் ஐஸ்க்ரீம் வாங்கித் தந்தார்… எனக்குப் பிடித்த ஃப்ளேவரில். ஒரு ஏழைச் சிறுவன் எதிர்ப்பக்கம் நான் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்ததும் நான் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. அவனிடம் போய் என் ஐஸ்க்ரீமை கொடுத்துவிட்டேன். அந்தக் கணம் அவனிடம் ஏற்பட்ட மகிழ்ச்சி, இன்ப அதிர்ச்சியாக என்னையும் தொற்றிக் கொண்டது. நான் பரவசமடைந்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெளிவாக நினைவில் இல்லை. ஆனால், புத்தரின் வார்த்தைகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை இப்போது நான் உணர்ந்துவிட்டேன்… ‘எதையும் வைத்திருப்பதிலோ, பெறுவதிலோ அல்ல… கொடுப்பதில்தான் இருக்கிறது மகிழ்ச்சி.’

Angulimala

அதே வருடம், என் ஆசிரியர்களில் ஒருவர், ‘புத்தாவும் அங்குலிமாலா’வும்’ கதையை எங்களுக்குச் சொன்னார். அந்த தினத்திலிருந்து பயமற்ற, அமைதியே உருவான, உலகெங்கும் காண முடியாத கௌதம புத்தரைப் போல ஆக விரும்பினேன்… இப்பொழுதும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்… ஹா ஹா ஹா!

காலங்கள் கடக்க, நான் புத்தரை மறந்து போனேன். படிப்பு, மதிப்பெண்கள் பெறுதல், லட்சியங்களை அடைதல் என்ற வழக்கமான வாழ்க்கைக்குள் இழுக்கப்பட்டேன். சண்டிகர் கேந்திரிய வித்யாலயாவில் என் பள்ளிப் படிப்பை முடித்தேன். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்கிற லட்சியத்தோடு இருந்தேன். அதே நேரத்தில் நாங்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்தோம். மதுரை என்னை முழுவதுமாக மாற்றியது. கிட்டத்தட்ட 360 டிகிரி கோணத்துக்கு என் வாழ்க்கை திரும்பியது. வாழ்க்கை தொடர்பான கேள்விகள் என்னை அலைக்கழித்தன. ‘நான் யார்?’, ‘நான் ஏன் இங்கிருக்கிறேன்?’ போன்ற கேள்விகள். தத்துவரீதியான அல்லது அறிவியல்ரீதியான பதில்களை நான் தேடவில்லை. ஆனால், என் எல்லா கேள்விகளுக்கும் தொழில்நுட்பரீதியான, என் இருப்புத் தொடர்பான பதில்களை தேடினேன். எல்லா பதில்களும் கிடைத்ததா என்று என்னைக் கேட்காதீர்கள். இன்னும் நான் பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

குடும்பம்

Star Thozhi 02

நான் திருமணமானவள். எனக்கு 13 வயதில் அபிஷேக் என்கிற மகன் இருக்கிறான். அவன் எனக்குக் கிடைத்த வரம். என் கணவர் ஒரு பிசினஸ்மேன். நாங்கள் திருமணம் செய்து கொண்டதே ஒரு வேடிக்கைக் கதை. திருமணத்துக்கு முன்பு வரை நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை. அந்த லொள்ளுக்காக நாங்கள் இருவருமே இந்த தினம் வரை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். என் தந்தை முன்னாள் ஐ.ஏ.எஃப். அதிகாரி. அம்மா வீட்டு நிர்வாகி. எனக்கு ஒரு அண்ணனும் தம்பியும் இருக்கிறார்கள்.

பொழுதுபோக்கு

கவிதை எழுதுவது… கதைகள் சொல்வது… புத்தகங்கள் படிப்பது… மகனுடன் விளையாடுவது… இணையத்தில் உலாவுவது… திரைப்படங்கள் பார்ப்பது… இசை கேட்பது… வார இறுதி நாட்களில் சமைப்பது.

Processed by: Helicon Filter;

பல நகரங்களுக்குச் சென்று அவற்றின் கலாசாரத்தை ஆராய்வது எனக்குப் பிடிக்கும். முன்பின் அறிமுகமில்லாத பிரதேசங்களில் பயணம் செய்வது பிடிக்கும். அப்படிப்பட்ட என் பயணங்களில் சிறந்தது கைலாஷ் யாத்திரை. நிச்சயமாகச் சொல்கிறேன், அந்த வருடத்தில் அழகான மலைவாசஸ்தலம் ஒன்றுக்குச் சென்று இயற்கையோடு சில மணி நேரங்களைக் கழித்திருக்கிறேன். கோவையிலுள்ள ஈஷா யோகா மையமும் எனக்கு மிகவும் பிடித்த இடம்.

என்னைக் கவர்ந்த பெண்கள்…

எல்லோரையும் போலவே எனக்கு அம்மாவைத்தான் முதலில் பிடிக்கும். குழந்தைகளான எங்களுக்காகவே வாழ்ந்தவர் அவர். ஒரு பொருளாதார நிபுணர் ஆகும் அளவுக்கு அறிவு படைத்தவர்… சிறந்த பாடகியாகவும் கூட அவரால் ஆகியிருக்க முடியும். ஆனால், அந்த நாட்களில் பெண்களுக்கு அவற்றுக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. குடும்பம்தான் அவர்களின் முதல் முன்னுரிமை… அது சரி என்றுதான் நான் நினைக்கிறேன். நல்ல மனிதர்களாக நாங்கள் வளர்ந்து ஆளாக முடியும் என்றால் அதைவிட சிறந்த வாழ்க்கை வேறு என்ன இருக்கிறது? வீட்டிலேயே உழல்வதும், குழந்தைகளுக்காகவே வாழ்வதும் மிக முக்கியம்… குழந்தைகளின் உணர்வுபூர்வமான ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் அது நல்லது.

ma1

அம்மாவைத் தவிர அரவிந்தர் அன்னையை எனக்கு மிகவும் பிடிக்கும். அதோடு ஆன்மிகப் பாதையைப் பின்பற்றி ஞானம் பெறுகிற எல்லா பெண்களையும் பிடிக்கும். நம்மிடம் நிறைய பெண் ஆன்மிகவாதிகள் இல்லை என்பது வருத்தத்துக்குரியது.

நேர நிர்வாகம்

என் வாழ்க்கையில் நேரமில்லை என்று எப்போதும் உணர்ந்ததில்லை. வேலைகளை அவ்வப்போது முடித்துவிடுகிறேன். ‘வாட் நெக்ஸ்ட்?’ என்பது என் கொள்கை, வாழ்க்கையின் நோக்கம். நடந்த நிகழ்வுகளை நினைத்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை, நடப்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். இயல்பாகவே நான் எதையும் திட்டமிட்டுச் செய்பவள். என்னைப் பொறுத்தவரை எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. நான் காற்று போகும் திசையிலேயே செல்ல விரும்புகிறவள், அதற்கு எதிராக அல்ல. அதனால் அதிகம் போராட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. வாழ்க்கையை அதன் போக்கில் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

புத்தகங்கள்

the fountainhead

Illusions_Richard_Bach

அதிக ஆர்வத்தோடு நான் படித்த ஒரு புத்தகம் அயன் ராண்ட் எழுதிய ‘தி ஃபவுண்டெய்ன்ஹெட்.’ நடக்கும் போதும் தூங்கும் போதும் உறக்கத்தில் இருந்து எழும் போதும் என எந்நேரமும் அந்த நாவல் என்னுடனேயே இருக்கும். அதற்கு அடுத்தபடியாக நான் விரும்பிப் படித்தது ரிச்சர்ட் பேச் எழுதிய ‘இல்லுஷன்ஸ்.’ டேனியல் ஸ்டீல், சிட்னி ஷெல்டன் போன்ற எழுத்தாளர்களின் நாவல்களையும் படித்திருக்கிறேன். டீன் ஏஜில் ‘மில்ஸ் அண்ட் பூன்ஸ்’ படித்தேன். குழந்தைப் பருவத்தில் ஆர்ச்சீஸ், டிங்கிள், சாச்சா சௌத்ரி, முகமூடி, ஹார்டி பாய்ஸ், நான்ஸி டிரீவ் ஆகிய பாத்திரங்கள் என் மனதில் நிறைந்து போனவை. இப்போது சத்குரு ஜக்கி வாசுதேவ் புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கிறேன்.

சமையல்

நான் என்ன சமைத்தாலும் ருசிமிகுந்ததாகிவிடுகிறது… கைராசி அப்படி! என் கணவரும் மகனும் என் சமையலுக்கு தீவிர ரசிகர்கள். பல பரிசோதனை முயற்சிகளை சமையலறையில் செய்கிறேன். பல சமையல் முறைகளை கலந்து என்னென்னவோ செய்கிறேன்… அதற்குப் பெயரும் உண்டு… ‘ஃப்யூஷன் குக்கிங் லொல்.’

சமூகத்துக்கான செய்தி…

இன்றைய உலகம்:

மக்கள்தொகை பெருக்கம் – சுருங்கிப் போன மனிதநேயம்,

குறைவான கையிருப்பில் உணவு – சமத்துவமற்ற பங்கீடும் ஒதுக்கீடும்,

செழித்தோங்கும் தனித்துவம் – அருகி வரும் இரக்க குணம்,

காணாமல் போகும் காடுகள் – வானளாவ உயர்ந்து கொண்டே போகும் கட்டிடங்கள்,

வளரும் நாடுகள் – வளர்ச்சியடையாத உடல்கள்,

ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் – வளர்ந்து கொண்டிருக்கும் கோபம், வன்முறை மற்றும் பொறுமையின்மை

இவை நான் மட்டுமல்ல… ஒவ்வொருவரும் கவலைப்படும் விஷயங்கள்…

மீள வழி இருக்கிறதா?

மனிதர்கள் வாழ்வதற்குரிய சிறந்த இடமாக இந்த உலகை மாற்ற வழி இருக்கிறதா?

Star thozhi 02a

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

Image courtesy:

https://haejinsung.files.wordpress.com

http://upload.wikimedia.org

http://www.sriaurobindoashram.org

http://th01.deviantart.net/

http://wisdominspiredlife.com

ஸ்டார் தோழி – 13

ஒரு தோழி பல முகம்

Kavinaya Proifile 1

கவிநயா

எழுத்தாளர் / நடனக் கலைஞர்

Kavinaya.blogspot.in

நான்…

இந்தியப் பெண்ணாக அமெரிக்க மண்ணில் வாசம். மென்பொருள் பொறியியலாளராக வேலை. பெற்றெடுத்தது ஒரே ஓர் ஆண் பிள்ளை என்றாலும் நடன மாணவிகளாக என்னை வந்து சேர்ந்த பெண்பிள்ளைகள் அதிகம். உயிருக்குயிராக என்னை நேசித்துச் சீராட்டும் தோழிகளுக்கு, நானும் அவ்வாறே இருக்க முயற்சிக்கிறேன்.

பள்ளியும் ஆசிரியர்களும்

10ம் வகுப்பு வரை ஒரு குக்கிராமத்தில் தமிழ் மீடியத்தில் படிப்பு. அங்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்த ஆசானையும், தமிழ் ஐயாவையும், கணக்கு மாஸ்டரையும் மறக்க முடியாது! அபூர்வமான ஆசிரியர்கள் அந்தக் கிராமத்துப் பள்ளியில் அமைந்தது என் அதிர்ஷ்டம். டிராயிங் மிஸ்தான் ஒவ்வொரு ஆண்டு விழாவுக்கும் நடனம் சொல்லித் தந்து, மேக்கப் போட்டு விட்டு, இப்படி எல்லாமே செய்வார்கள். ஒழுக்கம், படிப்பு, சந்தோஷம், இப்படி அனைத்தையும் போதித்த இடம் அது.

வாழ்வது…

விர்ஜீனியா மாகாணம்… வசிப்பது அமெரிக்கா என்றாலும் அதை அவ்வப்போது நினைவுபடுத்தித்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த அளவு இந்திய கலாசாரம் இங்கு வேரூன்றியிருக்கிறது. கோயில்களில் பூஜைகளும் பண்டிகைகளும் தவறாமல் அதே உற்சாகத்துடன் கொண்டாடப்படுவதில் ஆகட்டும்… தமிழ் வகுப்புகளுக்குக் கூட்டம் கூட்டமாகச் சென்று கற்றுக் கொள்ளும் குழந்தைகளில் ஆகட்டும்… பாட்டு மற்றும் நடன வகுப்புகளுக்கு காட்டப்படும் ஆர்வத்தில் ஆகட்டும்… ஆன்மிக விழாக்கள், சத்சங்கங்களில் ஆகட்டும், எல்லாவற்றிலும் இந்த ஊர் ஒரு குட்டி இந்தியா என்றே சொல்லலாம். அலுவலகத்திலோ அல்லது சில வெளியிடங்களிலோ அமெரிக்கர்களைக் காணும் போதுதான், ‘ஆஹா, நாம் அமெரிக்காவில் இருக்கிறோம்’ என்ற நினைப்பே வரும். இங்கு சொந்தங்கள் அதிகம் அருகில் இல்லை என்பதனாலேயே நண்பர்களுக்குள் நெருக்கம் அதிகம். கூப்பிடாமலேயே நிலைமை புரிந்து உடனே உதவிக்கு ஓடி வரும் அன்பும் அதிகம்.

அமெரிக்கர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. முதலில், காலையில் சீக்கிரம் எழுவது. காலை 7:00 – 7:30 மணிக்குள் பலரும் வேலைக்கு வந்து விடுவார்கள். எங்கு சென்றாலும் கூட்டமாக இருந்தால் வரிசை ஏற்படுத்தி விடுவார்கள். பல நாட்டு மக்களும் இங்கு வசிக்கும் நிலையில், மற்றவர்களின் பழக்கங்களை, கலையை, உணவை, கலாசாரத்தை, கீழாக எண்ணாமல் மேலாக மதித்துப் பாராட்டுவார்கள். வயதானவர்களும் முடிந்த வரை வேலை செய்த வண்ணம் இருப்பார்கள். இங்கு எல்லா நாட்டு உணவு விடுதிகளும் உள்ளன. எனக்குப் பிடித்தவை இத்தாலியன் மற்றும் மெக்ஸிகன் உணவு வகைகள்!

புத்தகங்கள்

sugi sivam

மிகவும் பிடித்த்து கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தான். சுய முன்னேற்ற நூல்களில் ஆர்வம் உண்டு. சுகி.சிவம் எழுத்துப் பிடிக்கும்.

பொழுதுபோக்கு

எழுதுவதும் நடனம் ஆடுவதும். அவற்றை பொழுதுபோக்கு என்று ஒதுக்கி விட முடியாதபடி, வாழ்க்கையின் அங்கங்கள் ஆகிவிட்டன. கல்லூரியில் கவிதை எழுத ஆரம்பித்து, எழுத்துப் பயணம் எங்கெங்கோ தொடர்ந்து, இப்போது வலைப்பூவில் எழுதுவதுடன் நிற்கிறது. அதற்கு அப்பால் செல்ல நேரம் இல்லை… நடனம் கற்றுக் கொடுப்பதிலும் கற்றுக் கொள்வதிலும் பெரும்பாலான நேரம் கழிகிறது.

இயற்கை

இயற்கை என்பது அழகு மட்டுமல்ல… நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டியதும் கூட. இயற்கை வளங்களை ‘taken for granted’ ஆகக் கொண்டிருப்பது மிகவும் வருத்தம் தரும் விஷயம். ஒவ்வொரு தனிமனிதனும் இயற்கையைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் தன் வரையிலாவது அதனைப் பாழ்படுத்தாமல் இருக்க முயற்சி செய்வது நம் எதிர்காலச் சந்ததியினரின் நன்மைக்கு மிகவும் அவசியம். இந்தக் காலத்தில் விளை நிலங்களும் நீர் நிலைகளும் கட்டிடங்களாக மாறிக் கொண்டிருப்பதைக் காணக் காண வேதனை அதிகரிக்கிறது.

தண்ணீர்

water-conservation1

ஒரு குழாயில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் ஒழுகினாலும், ஒரு மாதத்தில் 1,000 லிட்டர் தண்ணீர் வீணாகிறதாம். ஆயிரம் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்களைக் கூவத்தில் எறிவதாக நினைத்துப் பாருங்கள்… அப்படித்தான் நினைத்துப் பார்த்தாராம் ஆபிட் சுர்தி (Aabid Surti). அதனால், மும்பையில் வீடு வீடாகச் சென்று ஒழுகும் குழாய்களை இலவசமாகச் சரி செய்து தர ஆரம்பித்தார். ஒவ்வொரு வருடமும் இவர் பணியால் 4 லட்சத்து 14 ஆயிரம் லிட்டர்கள் தண்ணீர் (மும்பையில் மட்டும்) வீணாகாமல் காப்பாற்றப்படுகிறதாம்! நாம் ஒவ்வொருவரும் அவரைப் போல் ஆக முடியாவிட்டாலும், நம் வரையில் தண்ணீரை வீணாக்காமல் இருக்க முயற்சிக்கலாம்.

banana leaf

thonnai

அதே போல் பிளாஸ்டிக் சாமான்களையும் பைகளையும் முடிந்த வரை தவிர்க்கலாம். இந்தியாவில் அந்தக் காலத்திலேயே திரும்பத் திரும்ப உபயோகப்படுத்தக் கூடிய துணிப்பைகளையும், வாழை இலைகளையும், தொன்னைகளையும், மரத்தாலான விளையாட்டுச் சாமான்களையும் பயன்படுத்தினார்கள். நம் முன்னோர் அப்போதே ஒரு காரணத்தோடுதான் இந்தப் பழக்கங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால், மேல் நாட்டுப்பழக்கங்களின் மோகம் காரணமாக வேண்டாதவற்றை நிறையக் கற்று வைத்திருக்கிறோம். அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.

குப்பை

நம் ஊரில் ‘கண்ணைக் கவரும்’ விஷயம் குப்பைகள்தான். இரண்டு கடைகளோ, வீடுகளோ இருந்தால் இருவரும் குப்பைகளைத் தள்ளி, இருவருக்கும் நடுவில் குவித்து வைக்கிறார்கள். காகிதக் கோப்பையில் காபி, டீ தருவது நல்ல பழக்கம்தான். ஆனால், அதைக் குடித்து விட்டுப் போட, கூடவே ஒரு குப்பைத் தொட்டியும் வைக்கலாமே! வெளிநாட்டுக்காரர்களிடமிருந்து என்னென்னவோ கற்றுக் கொள்கிறோம். இந்த அடிப்படை விஷயத்தைக் கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும். திரைப்படங்களில் கூட பிரபலமான கதாநாயகர்கள் ஏதாவது குடித்தாலும் சாப்பிட்டாலும் அப்படியே தூக்கித் தெருவில் எறிகிறார்கள். குறைந்தது அவர்கள் குப்பைத் தொட்டியைத் தேடி அதைப் போட்டால், அவர்களை ஆதர்சமாகப் பின்பற்றும் ரசிகர்களும் அப்படி மாற வாய்ப்பிருக்கிறது.

wastes

குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடவும், மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களைத் தனியாகப் போடவும் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். அரசாங்கமும் இவற்றைச் சேகரிப்பதைச் சரியாக நடமுறைப்படுத்த வேண்டும். சென்னையிலும் நான் பார்த்த ஊர்களிலும் இவை எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.

குடி

Alcohol--generic

முன்பெல்லாம் புகைப் பிடிப்பது அடிக்கடி திரைப்படங்களில் காட்டப்பட்டது. இப்போது அது குறைந்து விட்டது. ஆனால், அதற்குப் பதில், குடிப்பது மிக அதிகமாகக் காட்டப்படுகிறது. திரைப்படங்களில் மட்டுமல்ல… சின்னத்திரை தொடர்களிலும் குடிப்பது மிக இயல்பான விஷயம் போலக் காட்டப்படுகிறது. இதைப் பார்க்கும் குழந்தைகளும் இளைஞர்களும் ‘குடிப்பது தவறில்லை’ என்று நினைக்க மாட்டார்களா? அதே தவறான வழியில் செல்ல மாட்டார்களா? இயக்குநர்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

மனிதர்கள்

அடிப்படையில் எல்லோரும் நல்லவரே. மற்றவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் நிறைகளை மட்டுமே பார்க்கக் கற்றுக் கொள்வது நன்மை தரும்.

நேர நிர்வாகம்

நேர நிர்வாகம்தான் கடினமான ஒன்றாக இருக்கிறது. நேரத்துடன் போட்டி போட்டு சில வேலைகளைச் செய்ய நேரிடும் போதுதான் ஆயாசமும் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தும் கலையைக் கற்க ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து வருகிறேன்.

சமையல்

cooking

ஆர்வத்தோடு சமைத்ததை மற்றவர்கள் ஆசையாகச் சாப்பிடுவதைப் பார்த்தாலே, பட்ட சிரமமெல்லாம் மறந்து விடும். சமைக்கப் பிடிக்கும். என்றாலும், நேரம் அமைவதைப் பொறுத்துதான் சிறப்புப் பண்டங்கள், பலகாரங்கள் செய்ய முடிகிறது. நம்முடைய பண்டிகைகளுக்கு இங்கே விடுமுறை இல்லையென்பதால், முன்கூட்டியே திட்டமிட்டால்தான் நம் ஊரைப் போலக் கொண்டாட முடிகிறது.

வீடும் அலுவலகமும்

வீட்டுக் கவலைகளை அலுவலகத்துக்குக் கொண்டு செல்லக் கூடாது. அலுவலகப் பிரச்னைகளை வீட்டுக்குக் கொண்டு வரக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அப்படிச் செய்யாவிட்டால், செய்து கொண்டிருக்கிற வேலைக்குத் தேவையான கவனத்தை முழுமையாகச் செலுத்த முடியாது. ஆனால், அலுவலக வேலைகளை சில சமயம் வீட்டில் செய்ய நேரிடும். அது போன்ற சமயங்களில் முதலில் குடும்பத்துக்குத் தேவையானவற்றைச் செய்து முடித்த பிறகே, கணினியைக் கையில் எடுக்கிறேன்.

கடந்து வந்த பாதை

வாழ்க்கையின் அனுபவங்கள் எத்தனையோ கற்றுத் தந்திருக்கின்றன. பொதுவாக இளமைக் காலமே இனிமையானது என்பார்கள். எனக்கென்னவோ அடிபட்டுக் கற்றுக் கொண்டு, ஓரளவு முதிர்ந்த மனநிலையையும் பக்குவத்தையும் தருகின்ற நடுத்தர வயதே சிறந்தது என்று தோன்றுகிறது.

உடலும் மனமும்

உடல் நலமும் மன நலமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உடல் நலத்தைப் பேணாவிட்டால், மன நலமும் பாதிக்கப்படும். அதனால், உடல் நலத்தை யாரும் அலட்சியப்படுத்தக் கூடாது. ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு உரிய கடமைகளை நிறைவேற்றவாவது, உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ‘உடம்பு என்பது இறைவன் உறையும் கோயில்’ என்பார் திருமூலர்:

‘உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்

உடம்பினுக்குள்ளேயுறுபொருள் கண்டேன்

உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என்று

உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே!’

thirumoolar_jpg

அதே போல் மனநலத்தைப் பேண தியானம் அவசியம். (உடல் நலமாக இருந்தால் தியானத்துக்கு அமரும் போது அங்கே வலிக்கிறது, இங்கே வலிக்கிறது என்று நம்மைத் தொந்தரவு செய்யாமல் ஒத்துழைக்கும்.) தியானம் என்றால் என்ன? ஒவ்வொரு நிமிடமும் நாம் என்ன செய்கிறோம் என்ற விழிப்புணர்வுடன் இருப்பதே தியானம். தினமும் நம் செயல்களை ஒரு முறை எண்ணிப் பார்த்து, தவறுகள் செய்திருந்தால் திருத்திக் கொள்வது நலம். இப்படிச் செய்வது நம்மை மேம்பட்ட மனிதனாக ஆக்க உதவும், நம் மன அமைதியும் அதிகரிக்கும். இறை நம்பிக்கை உள்ளவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் இறைவனை எண்ணி தியானம் செய்யலாம்.

எழுதியதில் பிடித்தது…

கவிதைகளை பலவிதங்களில் எழுதியிருக்கிறேன். உணர்வுகளின் வடிகாலாக, பக்தியின் வெளிப்பாடாக, இப்படி… கற்றுக் கொண்ட பாடங்களை கட்டுரைகளில் வடித்திருக்கிறேன். அதைத் தவிர சிறுகதைகளும் எழுதியதுண்டு. என்றாலும், பாப்பா பாட்டுகள் அவ்வளவாக யாரும் எழுதுவதில்லை என்பதால், நான் எழுதிய, பலரும் விரும்பி வாசித்த பாப்பா பாட்டுகளில் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்…

Sumatran elephant, Riau, Indonesia

ஆனை பாரு!

ஆனை பாரு யானை பாரு

ஆடி அசைஞ்சு வருது பாரு!

கறுப்பு யானை கம்பீரமா

நாட்டை நோட்டம் விடுது பாரு!

தூணைப் போலக் காலைப் பாரு

நீண்ட தும்பிக் கையைப் பாரு!

முறத்தைப் போலக் காதைப் பாரு

விசிறி வீசும் அழகைப் பாரு!

மலையைப் போல உடம்பைப் பாரு

கடுகைப் போலக் கண்ணைப் பாரு!

குட்டிக் குட்டி வாலைப் பாரு

குனிய வச்சு ஏறிப் பாரு!

நீரை உறிஞ்சிக் குளிக்கும் பாரு

பூவாய்ச் சொரிந்து களிக்கும் பாரு!

வாழைப் பழத்தைக் கொடுத்துப் பாரு

வாகாய் உள்ளே தள்ளும் பாரு!

கழுத்தில் மணியைக் கட்டிப் பாரு

காத தூரம் கேட்கும் பாரு!

பிள்ளை யாரு முகத்தைப் பாரு

உள்ளம் துள்ளிக் குதிக்கும் பாரு!

ஆனை யோட பலத்தைப் பாரு

தும்பிக் கையில் இருக்கு பாரு!

நீயும் கொஞ்சம் உள்ளே பாரு

நம்பிக் கையில் தெரியும் பாரு!!

பிடித்த பெண்கள்

வாழ்க்கையில் நான் சந்தித்த பெண்கள் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் திறமையானவர்கள், சிறந்தவர்கள். என் அம்மா. மிகுந்த மன உறுதி மிக்கவர்… பொறுமையும் அன்பும் அதிகம். அடுத்து என் மாமியார். அதிர்ந்து பேசத் தெரியாதவர். இவரும் எனக்கு இன்னொரு அம்மாதான். என் தங்கைகள், என் நாத்தனார்கள்… இப்படிப்பட்ட, பிரியத்தைப் பொழியும் சொந்தங்களைப் பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

என் நெருங்கிய தோழிகள்… எந்த எதிர்பார்ப்புமின்றி அன்பு செலுத்துவதில் நிகரில்லாதவர்கள். என் மனசிடம் நான் பேசிக் கொள்வது போலவே எந்த வெளிப்பூச்சும் இன்றி அவர்களிடமும் பேசலாம்.

அழகென்பது

child

மனம் அழகாக இருந்தாலே முகத்திலும் அது தானாகப் பளிச்சிடும். குட்டி பாப்பாவைப் பார்த்தால் உடனே தூக்கி வைத்துக் கொஞ்சத் தோன்றுகிறது. அதே நேரம் புதிதாகப் பார்க்கிற சிலரிடம் சென்று ‘ஹலோ’ சொல்லக் கூட தயக்கமாக இருக்கிறது. பெரியவர்களிடம் இல்லாத கவர்ச்சி சின்னக் குழந்தைகளிடம் இருக்கிறதே, ஏன்? அவர்கள் கள்ளம் கபடம் இல்லாதவர்கள். அந்த காலத்தில் ரிஷிகளிடமெல்லாம் ‘தேஜஸ்’ ஒளி வீசியதாக சொல்வார்கள். ஏனென்றால் அவர்கள் உள்ளம் மாசில்லாமல் தூய்மையாக இருந்தது. யாருக்கும் கெடுதல் நினைப்பதில்லை. மனம் எப்போதும் சமநிலையில் ஆனந்தமாக இருந்தது. அதுதான் காரணம். அதனால் நாமும் நம் மனதைச் சுத்தமாக, கல்மிஷமில்லாமல் குழந்தை மனசு போல வைத்திருந்தால், மற்ற அழகெல்லாம் தானாக வந்து விடும்.

வாழ்க்கை

வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொன்றும் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது. அது என்ன பாடம் என்று நாமேதான் சிந்தித்துப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். எதுவுமே நிரந்தரமில்லை. ‘This too shall pass’ என்பார்கள். இன்பம், துன்பம் – இரண்டுக்குமே அது பொருந்தும். எத்தகைய துன்பம் வந்தாலும் மனம் தளராமல், அதைப் பற்றியே நினைத்துக் கவலையில் மூழ்காமல், நடக்க வேண்டியதைப் பற்றிச் சிந்தித்து, வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாக நடத்துவது நம் கையில்தான் இருக்கிறது.

நடனம்

சிறுவயதிலிருந்தே நடனங்களைப் பார்த்து ரசிப்பது பிடிக்கும். கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கவில்லை. அமெரிக்கா வந்த பிறகு, வேலைக்கும் போக ஆரம்பித்த பிறகு, ஏதோ ஒரு தைரியத்தில் சேர்ந்து விட்டேன். அவர்களும் ஏதோ ஒரு தைரியத்தில் சேர்த்துக் கொண்டு விட்டார்கள். அதன் பிறகு No turning back! பிறகுதான் தெரிந்தது… பெரும்பாலான நடன ஆசிரியர்கள் சிறுமிகளை மட்டுமே மாணவிகளாக ஏற்கிறார்கள்… பெண்களை ஏற்க மிகவும் தயங்குகிறார்கள் அல்லது ஏற்பதே இல்லை. அதனால் என்னை ஏற்றுக் கொண்ட என் நடன ஆசிரியைக்கு மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அவரைப் போலப் பெண்மணியைப் பார்ப்பது அரிது. 150க்கும் மேற்பட்ட மாணவிகளுடனான நடனப் பள்ளியை 15 வருடங்களாக வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். இத்தனைக்கும் அவர் ஒரு MBA, CPA. முழுநேர வேலையும் பார்த்துக் கொண்டு, நடனப் பள்ளியைத் திறம்பட நிர்வகித்து, குடும்பத்தினரையும் அருமையாகக் கவனித்துக் கொண்டு, இரண்டு பிள்ளைகளை அற்புதமாக வளர்த்திருக்கிறார்.

பாரம்பரிய நடனக் கலையைக் கற்றுக் கொள்வதற்கு பொறுமையும் கடின உழைப்பும் மிகவும் அவசியம். இதை பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும். அரங்கேற்றத்துடன் எல்லாம் முடிந்து விடுவதில்லை. அது நீண்ட பயணத்தின் முதல் மைல் கல் மட்டுமே.

Kavinaya Profile 2

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

Image courtesy:

http://www.waterweb.org

http://upload.wikimedia.org/wikipedia/commons

http://www.wikihow.com

http://i2.dailyrecord.co.uk/

http://www.wired.com

http://www.tamilkadal.com

http://assets.worldwildlife.org/

ஸ்டார் தோழி – 12

ஒரு தோழி பல முகம்

kumkum profile 001

கோமதி அரசு

தியானப் பயிற்சியாளர் / இணைய எழுத்தாளர்

ஒரு மனுஷி… தாய்… தோழி..!

சமுதாயத்தில் நல்ல மனுஷி. பெற்ற குழந்தைகளுக்கு நல்ல தாய். கணவருக்கும், மகளுக்கும், மகனுக்கும், பேரன் பேத்திகளுக்கும்  நல்ல தோழி.

பிறந்ததும் பெற்றதும்

நான் பிறந்த ஊர் திருவனந்தபுரம். சொந்த ஊர் பாளையங்கோட்டை. சொந்தங்கள் இப்போது பல ஊர்களில். அவ்வப்போது சென்று அவர்களைப் பார்த்து உறவுகளை பலப்படுத்திக் கொள்கிறோம். இன்றும் மண் வாசனை மாறாமல் சொந்த ஊர் பழக்கவழக்கங்களை பெரியவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு அதை இளையதலைமுறைகளுக்கும் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

ஊரும் பேரும்

mayiladuthurai

இப்போது வசிப்பது மயிலாடுதுறை.  இங்கு பலவருடங்களாக வாழ்வதால் இங்குள்ளவர்கள்  குடும்ப அங்கத்தினர் போல் பாசத்தோடும் நட்புடனும் பழகுகிறார்கள். மூன்று தலைமுறையாக நட்பு தொடர்கிறது. பராம்பரிய உணவையே இங்கு  விரும்புகிறார்கள். இப்போது கொஞ்சம் வடநாட்டுக்கடைகள் தெருஓரங்களில் காணப்படுகின்றன. பெரியவர்கள் சிறியவர்களுக்கு போதிக்காமல் வாழ்ந்து காட்டி அதைப் பின்பற்றச் செய்கிறார்கள், கோயில்களில் கூட்டு வழிபாடு, தத்துவ ஆராய்ச்சி நடந்து வருகின்றன.

குடும்பம்

எனது குடும்பம் சிறிய குடும்பம். ஒரு மகள், ஒரு மகன்.  கணவர் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்வார்.  மகள், மகனுக்கு திருமணமாகிவிட்டது  அன்பான இரு பேரன்கள், ஒரு பேத்தி!

பள்ளி…

KUMKUM school

அப்பாவுக்கு வேலை நிமித்தம் பல ஊர்களுக்கு மாற்றல் ஆகும். அதனால் என் பள்ளிப் படிப்பு பல ஊர்களில். பள்ளி ஆசிரியர்கள் எல்லோரும் விரும்பும் செல்லக் குழந்தை நான். பள்ளியில் ஆறாவது வகுப்பு ஆசிரியர் ரோஜா, ஒன்பதாவது தமிழ் ஆசிரியர் தாயம்மா… 10வது படிக்கும்போது விருப்பப் பாடம் வரலாறு… அதை மிக விரும்பச் செய்த ஆசிரியர் ஞானஒளிவு, 11வது படிக்கும் போது வகுப்பு ஆசிரியர் பிரேமாவதி, அறிவியல் ஆசிரியர் கலைச்செல்வி அவர்களை மறக்க முடியாது. அவர்கள் போதித்தது பணிவு, கீழ்ப்படிதல், ஒழுக்கம். நான் படிக்கும் காலத்தில் நீதி போதனை வகுப்புகள் உண்டு. அவை இப்போது மீண்டும் பள்ளிகளில் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

புத்தகங்கள்

சிறுவயது முதலே நூலகத்தில் இருந்து கதை புத்தகங்கள் வாங்கிப் படித்து வருகிறேன். லட்சுமி, சிவசங்கரி, அனுராதா ரமணன், கல்கி, பாலகுமரன், ஜெயகாந்தன் நாவல்கள் படிப்பேன். சுஜாதா கதைகளை பைண்ட் செய்து வைத்து இருக்கிறேன். ‘பொன்னியின் செல்வன்’, ‘தாயுமானவன்’, ‘மிதிலாவிலாஸ்’ ஆகியவை மிகவும் பிடித்தமானவை.

பொழுதுபோக்கு

புத்தகம் படித்தல், பாடல்கள் கேட்டல் , நல்ல திரைப்படங்களைப் பார்த்தல், இணையத்தில் எழுதுதல்.

இயற்கை

nature

பசுமையான வயல்வெளி, அழகான மரம், செடி, கொடிகள் அவற்றில் கூடு கட்டி வாழும்  விதவிதமான  பறவைகள்  என்று உலகத்தை அழகு படுத்துவது இயற்கை. அதை அழித்து செயற்கையாக எவ்வளவுதான் இந்த பூமியை அழகுபடுத்தினாலும் நிறைவு ஏற்படாது. இயற்கை நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. ஏழு தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்துப் பயன் இல்லை. இயற்கை வளத்தைக் காப்பாற்றி நம் சந்ததியினரிடம் கொடுக்க வேண்டும்.

‘இந்த உலகம் சுற்றி வந்து இயற்கையின் இன்பம் காணுங்கள்.
பண்ணோடு இசைத்துப் பாடிக் களித்திருங்கள்.’
என்றார் நம் தேசியகவி பாரதி.  பாரதி சொன்னது போல்  இயற்கை நன்றாக இருந்தால்தான் நாமும்  பாடிக் களித்து இருக்க முடியும்.

தண்ணீர் சிக்கனம்… பிளாஸ்டிக் பயன்பாடு!

save water

தண்ணீர்ப் பற்றாகுறை எங்கும் இப்போது நிகழ்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் அலுவலகத்திலும் மழைநீர் சேமிப்பு செய்தால் நீர்வளத்தைப் பெருக்கலாம். வீட்டைச் சுற்றி சிமென்ட் நடை பாதை அமைக்காமல் மண் தரையாக விட்டால் மழை நீர் பூமிக்குள் இறங்கி மீண்டும் நமக்கு கிடைக்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.  குளம், குட்டை எங்கும் மக்கள் குப்பைகளை கொட்டி அதைத் தூர்த்து வருகிறார்கள் அதில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள், மழை நீரை பூமிக்குள் இறங்க விடுவது இல்லை.

என் மகள், மகன் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது இல்லை. இளைய சமுதாயத்தினர் அதில் உறுதியாக இருந்தால் நல்லது. சிறிது காலமாக கடைகளில் ‘இங்கு பிளாஸ்டிக் பைகள் தருவது இல்லை, வரும் போது துணிப்பை கொண்டு வாருங்கள்’ என்று போர்டு வைத்தார்கள். பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்வதைத் தடை செய்ய வேண்டும். உற்பத்தியாளர்களுக்கு அனுமதி அளித்து விட்டு, மக்களிடம் உபயோகப்படுத்தாதீர்கள் என்றால் எப்படி? உபயோகப்படுத்தினால் கடுமையான தண்டனை என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். அது எதிர்காலம் நீர்வளத்துடன் இருக்க உதவும்.

சமூகம்

பொது இடங்களில் நாம் எப்படி  நடந்து கொள்ளவேண்டும் என்பதிலும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சிலர் பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்ற சுகாதாரக்கேடு விளைவிக்கும் செயல்களை எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்கிறார்கள். நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும், பொது இடங்களில் அமைதி காப்பதும் நன்மை தரும். தனிமனிதக் கோபம் பொது சொத்தை நாசப்படுத்துகிறது, பெண்கள் மீது அமிலவீச்சு நடத்துகிறது (அமிலம் தடை செய்யபட்டுள்ளது என்றாலும் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது? விற்பவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்) இவை எல்லாம் கவலை தருவதாக உள்ளன. இவை சமூகத்திலிருந்து களையப்படவேண்டும். சமூகம் என்பது கூட்டுறவு. எல்லோரும் சேர்ந்துதான் சமூக அக்கறையுடன் நடக்க வேண்டும்.

மனிதர்கள்

மனிதர்கள் பலதரப்பட்ட குணநலன்களுடன் இருக்கிறார்கள்.  மனதை இதமாக வைத்துக் கொள்பவனே மனிதன் என்று ஞானிகள் சொல்கிறார்கள். மனம், மொழி, செயல் மூன்றிலும் இனிமை தோன்ற வாழவேண்டும்.

நேர நிர்வாகம்

நேர நிர்வாகம் என்பது எல்லோருக்கும் மிகத் தேவையான ஒன்று. எந்த செயலை செய்யும்போதும் அதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொண்டு அதைக் கவனமாகச் செய்யவேண்டும். அலுவலக வேலைகளுக்கு மட்டுமே  முக்கியத்துவம் கொடுக்காமல் (அலுவலக வேலையை வீட்டிலும் பார்ப்பவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது) குடும்பத்தினர், உறவுகள், நட்புகள், சமுதாயம் என்று  எல்லோருக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும்  அப்போது எல்லா உறவுகளும் விரிசல் இல்லாமல் நலமாக இருக்கும். நேரம் நம் கையில். அதை  நிர்வாகம் செய்வதில் இருக்கிறது நம் திறமை.

சமையல்

cooking-1

சமையல் செய்யும் முன் என்ன செய்யப் போகிறோம் என்று மனதில் குறித்துக் கொண்டு எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு சமைக்க ஆரம்பித்தால் ஒருமணி நேரத்தில் எல்லாம் தயார் ஆகிவிடும். இப்போது அத்தனை வசதியான சமையல் சாதனங்களுடன்  சமைக்கிறோம்.  சிறுவயதில் வித விதமாக அம்மா, அத்தை, உறவினர்கள், பக்கத்து வீட்டினர் சொல்லும் புதுவகை உணவுகளைச் செய்து பார்ப்பேன். இப்போது வயிற்றுக்குத் தீமை தராத உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவுகளை மட்டும் செய்கிறேன். உறவினர், நண்பர்கள், குழந்தைகள் வரும்போது அவர்களுக்குப் பிடித்த உணவுகளைச் செய்து கொடுக்கிறேன்.

உடலும் மனமும்

உடல் நலத்தில் 40 வயதிலிருந்தே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். தூசுகளால் ஒவ்வாமை ஏற்பட்டு தும்மல் அடிக்கடி இருக்கும். அதற்கு  மூச்சுப்பயிற்சி (பிரணாயாமம்) கற்றுக் கொள்ளவேண்டும் என்று  என்று எங்கள் உறவினரம்மாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன். அவர் வழி காட்டினார். வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்தேன். அங்கு சொல்லிக் கொடுத்த எளியமுறை உடற்பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு செய்ய ஆரம்பித்தபின் என் ஒவ்வாமை நோய் போனது. அப்படியே எளியமுறை தியானப்பயிற்சி, காயகல்பப் பயிற்சி மற்றும் அகத்தாய்வுப் பயிற்சிகள் கற்றுக்கொண்டு ஆழியார் சென்று ஆசிரியர் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். இப்போது உடல் நலம், மனநலம் இரண்டும் நன்றாக இருக்கிறது.

எழுதியதில் பிடித்தது? 

*  இளமையாக இருக்க வேண்டும் என்றால் நாள்தோறும் ஏதாவது புதிதாக கற்க வேண்டும்… அல்லது கேட்க வேண்டும். அது வாழ்கையை நல்லபடியாக நடத்தி செல்ல உதவும். மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சி அலைகளை பரப்பிவரும் பெண்களே எல்லோராலும் விரும்பபடுகிறார்கள். இந்தக்காலத்தில் பொன்நகை அணிந்து போகாமல் புன்னகை அணிந்து போவது மிகவும் நல்லது என்பதையும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் பெண்கள்.

* நவராத்திரி போன்ற பண்டிகையின் நோக்கம் பெண்களின் சிறப்பைப் பெண்கள் உணர வேண்டும் என்பதே. தேவி, கெட்டதை அழித்து நல்லதை நிலை நாட்டுகிறாள். அது போல் நாம் கெட்ட எண்ணங்களை களைந்து, நல்ல எண்ணங்களை நம்மைச் சுற்றிப் பரவவிட வேண்டும். மனதிடம் உடையவர்களாக இருக்க வேண்டும், எப்போதும் நல்லதையே காண்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

பெண் முதலில் தன் பெருமையை உணர வேண்டும். ஆண்களுக்கு உடல்பலம் என்றால் பெண்களுக்கு மனபலம். சின்ன விஷயங்களுக்கும் உடைந்து போகாமல் தன்னைக் காத்துக் கொண்டு, தன் குடும்பத்தையும் பேணுபவளே பெண்.

இசை

இசை சகல ஜீவராசிகளையும் உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது. தாவரங்கள்கூட இசையில் தழைக்கின்றன. கல்லும் கரையும், இசையால். மனித வாழ்வில் இசை பல அற்புதங்களை செய்கிறது. இசை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் இல்லை. உடலின், மனதின் வலிகளை போக்கி உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிக்கிறது. செவிக்கு விருந்தாக, உடலுக்கு மருந்தாக இருக்கிறது. நீலாம்பரி ராகம் நல்ல தூக்கம் தரும். ஸ்ரீராகம் நல்ல ஜீரணசக்தி தரும். துவிஜாவந்தி நரம்புதளர்ச்சியைப் போக்கும். சாமா ராகம் மன உளைச்சல் போக்கும். பைரவி, காம்போதி, கல்யாணி, வாசந்தி, சிவரஞ்சனி கோசலம், அனுமத்தோடி, புராணிசாராகம் எல்லாம் பிணிதீர்க்கும் ராகங்கள். மாத்திரை மருந்துகளை வேளாவேளைக்கு மசாப்பிடுவது போல் உணவுக்குப் பின் இசை  கேட்பது நல்லது.

அழகென்பது…

அழகென்பது பார்ப்பவர் கண்ணோட்டத்தை பொறுத்தது. ஒருவருக்கு அழகாகத் தெரிவது வேறு ஒருவருக்கு இது என்ன பெரிய அழகு என்று தோன்றக் கூடும். வேதாத்திரி மகரிஷி சொல்வார்…

‘அழகு மாறிக் கொண்டே இருக்கும்…
அன்பு ஊறிக் கொண்டே இருக்கும்.’

வீடு

home

எந்த ஊருக்குச் சென்றாலும் கலைப்பொருட்களை வாங்கி வருவேன். வீட்டின் வரவேற்பு அறையில் கணவரின் எழுதும் மேஜை இப்போது நித்திய கொலுவாக இடம் பிடித்துக் கொண்டது. அவர் கணிப்பொறியில் எழுதுவதால் இப்போது மேஜை தேவைப்படுவதில்லை. ஷோகேஸில் சில கலைப்பொருட்கள், மகன் செய்த சாக்பீஸ் கோயில் இவற்றை வைத்து அலங்கரித்து இருக்கிறேன். மகன், மருமகள், வரைந்த ஓவியங்கள் சுவரை அலங்கரிக்கின்றன. மகள், பேரன்கள், பேத்தி செய்த கைவேலைகளும் எங்கள் கொலுவில் இடம்பெறும். முன்பு எல்லாம் திரைச்சீலைகளை நானே தைத்துப் போடுவேன். இப்போது கடைகளில் விற்பதை வாங்கி வேலையை எளிதாக்கி விட்டேன். ஊர்களுக்குப் போய் வந்தபின் கலைப்பொருட்களில் படிந்து இருக்கும் தூசிகளைத் துடைப்பது பெரிய வேலை. அதனால் நிறைய பொருட்கள் பெட்டிக்குள் தஞ்சம் புகுந்து விட்டன. அவை கொலுவில் மட்டும் இடம்பெறும். சுவாமி அலமாரியில், சுவாமி படங்கள் அழகாக கொலுவீற்றிருக்கின்றன. வீட்டுக்குள்  வளர்க்கும் செடிகளும் கூடுதல் அழகு தரும். முன்பு வைத்து இருந்தேன். ஊர்களுக்கு அடிக்கடி போவதால் வீட்டுக்குள் உள்ள செடிகளைக் கவனிக்க முடியவில்லை.

வாழ்க்கை

இறைவன் அருளால் ஓடிக் கொண்டு இருக்கிறது… நாங்களும் ஓடிக்கொண்டு இருக்கிறோம். துன்பம், இன்பம் எல்லாம் கலந்து இருக்கிறது வாழ்க்கை. இருளும் ஒளியும் போல் மாறி வருவதை ஏற்று வாழ வாழ்க்கை நாள் தோறும் அனுபவப் பாடம் ஆகிறது.

மறுசுழற்சி

marusuzharchi

மனிதன் தனக்குச் சாதகமாக தான் துய்க்கும் பொருள்களை மாற்றி அமைத்துக் கொள்கிறான்.  பின்விளைவுகள் ஏற்படாத மாதிரி மறுசுழற்சி செய்வதில் தவறு இல்லை. நாட்டுக்கு, வீட்டுக்கு சமுதாயத்துக்கு இப்போது  மறுசுழற்சி அவசியம். பிளாஸ்டிக் பைகளை கூழாக்கித் தார்ச் சாலை அமைக்கிறார்கள். அது மழையால் பாதிப்படையாது. பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் மூலம் டீசலுக்கு சமமான எரிபொருள் தயாரிக்கிறார்கள். இந்த எரிபொருளால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்கிறார்கள். காலி தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானக் குடுவைகளில் மணல் அடைத்து சுற்றுச்சுவர் எடுக்கிறார்கள். குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். குப்பைகளை கொண்டு விவசாயத்துக்கு வேண்டிய உரங்கள் கிடைக்கின்றன. மனிதக்கழிவை  விவசாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள். சாக்கடை நீரில் இருந்து மின்சாரம், எரிவாயு தயாரிக்கப்படுகின்றன. வீட்டுக்காய்கறி குப்பைகளைச் சேகரித்து மண்புழு உரம் தயாரித்து அதை விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். இப்படி குப்பைகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயனுள்ளதாகச் செய்வது அதிகமாக நடைபெற வேண்டும். மரம் செடிகளின் குப்பைகள் மீண்டும் அந்த மரம் செடிகளுக்கே உரமாகின்றன. அதுபோல் உலோகங்களையும் உருக்கி மறுசுழற்சி செய்கிறார்கள். அலுமினியம், தாமிரம், இரும்பு போன்றவற்றையும் மறுசுழற்சி செய்து புதுவகை கருவிகள் படைக்கிறார்கள்.

இயற்கையில் மறுசுழற்சி முறை நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடல் நீர் ஆவியாகி மேகமாகி, மழையாக பொழிகிறது. மீண்டும் அது நீர் நிலைகளாகி மறுபடியும் மேகமாகி மழை பொழிகிறது. இந்த மறுசுழற்சி ஏற்பட நாம் உதவி செய்ய வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி மழை நீரை சேமித்தால்தான் இந்த சுழற்சி சரியாக நடக்கும். வாழ்க்கை ஒரு வட்டம் போல, வாழும் உயிரினங்களுக்கு தேவையான நீரும் சுழற்சி முறையிலேயே உற்பத்தியாகிக்கொண்டிருக்கிறது!
நல்ல மண் இருந்தால்தான் மரம் வளர்க்க முடியும். மரங்கள் இருந்தால்தான் மழை பொழியும். மழை பொழிந்தால்தான் மனிதன் மற்றும் பிற உயிர்கள் வாழ முடியும்.

பிடித்த ஆளுமைகள்

kailash yatra 2011 001

பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்… சிறந்த சமூகசேவகி. முதுமையிலும் பிறருக்கு உழைத்துக் கொண்டு இருக்கும் தன்னலமற்ற செயல் வீராங்கனை. கணவர் இறந்த பின்னும் மனம் தளராமல் பொதுத் தொண்டு ஆற்றி வருகிறார். அவரது எளிமை எனக்கு மிகவும் பிடித்தமானது. அவர்களை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மட்டில்லா மகிழ்ச்சி.

தென்கச்சி சுவாமிநாதன்… அவர் மறைந்தாலும் இன்றும் அவரது பேச்சைக்  காலையிலும் இரவிலும் (காரை பண்பலையில்) கேட்டு மகிழ்கிறேன். அவர் ஒருமுறை கும்பகோணம் அறிவுத் திருக்கோயிலுக்கு வந்து இருந்தார். அப்போது அவர் நகைச்சுவைப் பேச்சை நேரில் கேட்டேன். அவர் சிரிக்காமல் மற்றவர்களைச் சிரிக்க வைப்பார்… சிந்திக்கவும் வைப்பார்.

தியானக்கலை

pranayama-yoga

செயலும் மனமும் ஒரே நேர் கோட்டில் இணைவது தியானம். எந்தச் செயலைச் செய்தாலும் அதில் மனம் ஒன்றும் போதுதான் அந்த காரியத்தை முழுமையாகச் செய்ய முடிகிறது. பெண்களுக்குத் தெரியுமே… கோலம் போடும் போது மனம் கோலத்துடன் இணையவில்லை என்றால் புள்ளிகளைச் சரியாக இணைக்க முடியாது. கோலம் சரியாக வராது. சமையலில் மனம் ஒன்றவில்லை என்றால் ‘உப்பு போடவில்லை’… ‘இல்லை போட்டோம்’ என்று குளறுபடியாகும். பிள்ளைகளுக்கு இது பிடிக்கும், கணவருக்கு இது பிடிக்கும் என்று மனம் முழுவதும் ஒன்றி சமைக்கும்போதுதானே அது அமிர்தம் ஆகிறது? பிள்ளைகளுக்குப் படிப்பில் கவனம் இல்லையென்றால் விளையாட்டில் ஈடுபாடு இருக்கும். விளையாடும் நேரம் விளையாட்டு, படிக்கும் போது படிப்பில் கவனம் என்று இருந்தால்தானே வெற்றி? இவை எல்லாமே தியானம் தான்.

சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் சொல்லும் வார்த்தை மனஅழுத்தம், மூட் அவுட் என்பவையே. ஏன்? என்ன காரணம்? அவசர உலகம்… நின்று நிதானித்து செயல்படமுடியவில்லை. நிதானிக்கும் போது இன்னொருவர் அவரை முந்திச் சென்று விடுகிறார். போட்டி, பொறாமை எங்கும்,  எதிலும், எப்போதும்… முதலிடம் பெறுவதுதான் தாரக மந்திரமாக இருக்கிறது இப்போது. குழந்தைகளிடம் முதலிடம் பெறுவது மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதைச் சொல்லி  பணிவு, கனிவு, ஒழுக்கம், வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனதைரியம் ஆகியவற்றோடு வாழக்கற்றுக் கொடுக்க வேண்டும். இப்போது சில பள்ளி, கல்லூரிகளில் ‘யோகமும் மனித மாண்பும்’ என்று  உடல், உயிர், மனம், அறிவு மற்றும் சமூக நலக்கல்வியாக இது கற்றுக் கொடுக்கப்படுகிறது.

தேவைகள் அதிகமாக அதிகமாக, பொறுப்புகள், கடமைகள் அதிகமாகின்றன. தேவைகள் மீது ஆசை, அது நிறைவேறவில்லை என்றால் சினம், கவலை என்று ஏற்படுகிறது. அவை அதிகமாகும் போது உடலில் நோய் ஏற்படுகிறது. தியானம் செய்யச் செய்ய தேவைகள் குறைகின்றன. மனம் அமைதி அடைகிறது. சினம், கவலை குறைகிறது. எந்தச் செயலுக்கும் விளைவு உண்டு என்ற நியதி புரிகிறது. நம் மனதில் அமைதி நிலவினால் நம்மைச் சுற்றிலும் அமைதி நிலவும்.

kumkum profile 003

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

Image courtesy:

mayiladuthurai.6te.ne

http://tmacfitness.com

http://th04.deviantart.net

https://krannertlife.purdue.edu

http://www.pranayama-yoga.com

ஸ்டார் தோழி – 11

ஒரு தோழி பல முகம்

vanitha 2

வனிதா காஷ்யப்

தொழில் முனைவர் / புகைப்படக் கலைஞர்

நான் ஒரு மனுஷியாக… தோழியாக… எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற உந்துதல் எப்போதும் உள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கிடைத்த அனுபவம் கொண்டு, கணவர் உதவியுடன்,  நண்பர்களுடன் சேர்ந்து சொந்த நிறுவனம் நடத்துகிறேன். புதிதாக தொடங்கி இருக்கும் தொழிலை அடுத்த படிக்கு உயர்த்துவதே நோக்கமாக இருப்பினும், புகைப்படக்கலையையும் வாழ்க்கையுடன் இணைபிரியாமல் தொடர வேண்டும் என்பது முக்கிய குறிக்கோள். நட்பு வட்டம் சிறியதே… அவர்களுடனான உறவு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்துகிறேன்.

பள்ளியும் ஆசிரியர்களும்

பெங்களூரு ‘காவேரி ஆஷ்ரமா’ பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளை… அம்மா இறந்து போன துக்கம் தெரியாமல் பார்த்துக் கொண்டனர் ஆசிரியர்கள்.  அம்மா இருந்திருந்தால் என்னென்ன நற்குணங்களை கற்றுக்கொண்டிருந்திருப்பேனோ அதையெல்லாம் ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக்கொண்டேன்.  ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் இல்லாமல் கல்வி போதித்த ‘காவேரி ஆஷ்ரமா’ எனக்குள்ளும் ஏழைகளுக்கு உதவும் எண்ணங்களை விதைத்தது.

ஊரும் பேறும்

banglore

பிறந்ததுவளர்ந்தது அனைத்தும் பெங்களூரு என்பதால், அதிக சிரமம்  இல்லாமல் பூக்களைப் படம் எடுக்கும் வாய்ப்பு தானாகவே அமைந்தது.  நாளடைவில் அதுவே புகைப்படக்கலையின் மேல் ஆர்வத்தை அதிகப்படுத்தியது. கர்நாடகாவுக்கே உரியதான பாணியில் தயாரிக்கும் ‘பிசிபேலேபாத்’தின் ரசிகை. வெவ்வேறு மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் ஊர். ஆதலினால், அவர்களுடன் நெருக்கமாகப் பழகிடவும், அவர்களின் கலாசாரத்தினை அறிந்து கொள்ளவும் சாத்தியப்படுகிறதுஇதுவே தமிழ் மேலும் ஆர்வத்தினை அதிகப்படுத்தியது.

பிடித்த புத்தகங்கள்

பெங்களூரில் படித்ததால் ‘கன்னடம்’ இரண்டாவது தாய் மொழியாகிவிட்டது. ஆகவே, விரும்பிப் படிக்கும் புத்தகங்களில் கன்னடத்துக்கும் இடம் உண்டு. பொதுவாகவே நல்ல கதைகளைக் கொண்ட புத்தகங்களே என்னுடைய முதல் விருப்பம்.  குறிப்பாக ‘தாரா பேந்த்ரே’ எழுதிய புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

குடும்பம்  

அம்மா இல்லாமல் வளர்ந்த எனக்கு, தாய்ப்பாசம் என்னவென்றே தெரியாமல் போய்விடுமோ என்ற பயம் திருமணத்துக்கு முன்பு வரை இருந்தது.  ஆனால், அம்மாவிடம் கிடைக்காத அன்பு மாமியாரின் மூலமாக கிடைத்திருக்கிறது. கணவரும் என் செயல்பாடுகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். வேறென்ன வேண்டும்..? இன்னும் பாசத்தைப் பொழிய அக்காவும் தம்பியும்… வாழ்க்கை மகிழ்ச்சியாக விரைகிறது.

பொழுதுபோக்கு

photography

பொழுதுபோக்காக தொடங்கிய புகைப்படக்கலை இன்று வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட தேவையின் காரணமாக பயணங்களின் மேல் ஆர்வம் அதிகமாகி உள்ளது. பிறகு எல்லோரையும் கவரும் இசை என்னையும் கவரத் தவறவில்லை.

தண்ணீர் சிக்கனம், பிளாஸ்டிக் பயன்பாடு 

பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு சற்று குறைவே! ஆனாலும்,  ஒரு பொறுப்புள்ள நபராக தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்கவும் சேமிக்கவும் முயற்சிக்கிறேன். பிளாஸ்டிக்கால் விளையும் ஆபத்தை அறிந்திருப்பதால், பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்லும் போது துணிப் பைகளை எடுத்து செல்வதை தவறாமல் கடைப்பிடிக்கிறேன்.

சமூகம்

சமீபத்தில் ‘டான்டேலி’யில் உள்ள மின் உற்பத்தி நிலையத்துக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நம் பயன்பாட்டுக்கு உண்டான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மக்கள் எவ்வளவு உழைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.  அதனால் மின்சாரத்தை எவ்வளவு சிக்கனமாக உபயோகிக்க முடியுமோ அவ்வளவு குறைவாக உபயோகிக்கிறேன்.  மற்றவர்களுக்கும் அதை கடைப்பிடிக்கக்  கேட்டுக் கொள்கிறேன்.

நேர நிர்வாகம்

time management

அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் சரி பாதியாக நேரத்தை ஒதுக்கி விடுகிறேன் என்று சொன்னால் முழுப் பொய்… ஸாரி… பாதி பொய்யாகி விடும். வீட்டு வேலைகள் முழுவதையும் வார நாட்களில் அம்மாவே (மாமியார்) கவனித்துக் கொள்வதால், அலுவலக வேலையில் முழு கவனமும் செலுத்த முடிகிறது. விடுமுறை நாட்களில் அம்மாவுக்கு உதவுவதுண்டு.

சமையல்

cooking

மற்றவர்கள் முகம் சுளிக்காமல் சாப்பிடும் அளவுக்கு சமைக்கத் தெரியும்.  அதிகமான அயிட்டங்கள் செய்யத் தெரியா விட்டாலும், தெரிந்ததை நேர்த்தியாக சமைக்கத் தெரியும்.

பிடித்தது

போட்டோகிராபி…போட்டோகிராபி… போட்டோகிராபி… அவ்வளவு பிடிக்கும்! ஒருமுறை பூங்காவுக்குச் சென்றிருந்த போது, 1,200 ஷாட்ஸ் ஒரு மணி நேரத்துக்குள் எடுத்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கூட்டிப் பார்த்தால் கிட்டத்தட்ட அனலாக் ஃபிலிம் ரோல் 33ஐ 1 மணி நேரத்துக்குள் காலி பண்ணியிருக்கிறேன்… டிஜிட்டல் கேமரா கண்டுபிடித்தவருக்கு கோடி நன்றி!

வீடு-அலுவலகம்… சமாளிக்கும் கலை!

ட்ராவல் அண்ட் டூரிஸம் தொழிலில் திட்டமிடுதலும் நேர மேலாண்மையும் மிக முக்கியமான அம்சங்கள். போதிய அனுபவம் இருப்பதால் அலுவலக வேலைகளை சிரமம் இல்லாமல் கையாள முடிகிறது. நான், கணவர், அம்மா, பாட்டி என்கிற சிறு குடும்பம்.  அம்மாவே அனைத்தையும் கவனித்துக் கொள்வதால் எந்த சிரமும் இல்லை.

சினிமா

குடும்பக் கதைகளை சித்தரிக்கும் படங்கள் மிகவும் பிடிக்கும்.

பிடித்த பெண்கள்

குடும்பத்தில்…

மாமியார்… அல்ல அம்மா! எல்லா விஷயத்திலும் அவரே துணை!

வெளியில்…

photo jackie

பூக்களைப் படம் எடுக்க எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால்  அதே துறையில் ஆர்வம் உள்ள இங்கிலாந்தை சேர்ந்த ஜாக்கி பார்க்கர் படங்களை மிகவும் ரசிப்பேன். ஃபிளிக்கர் தோழி சுபாவின் புகைப்படங்களும் என்னை மிகவும் கவர்ந்தவை. வீட்டுக்குள் கிடைக்கும் பொருட்களை சூரிய ஒளியின் உதவியுடன் அவர் எடுக்கும் படங்களைப் போலவே நானும் படமெடுக்க முயற்சிகள் மேற்கொள்ள ஆசை.

ஃபேஸ்புக்

நிறைய நண்பர்களைப் பெற்றுத் தந்தது. வெகு வருடங்கள் தொடர்பில்லாமல் போன சொந்தங்களைக் காண உதவியது. புகைப்படக்கலையில் பல விஷயங்களை மற்றவர்களிடம் இருந்து கற்றுத் தந்தது.

அழகென்பது…

உள்ளமும் பண்பும் சார்ந்தது. புற அழகு நிரந்தரமானது அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.

வாழ்க்கை

Life is too short to wake up the regrets.

Love the people who treat you right. Forget the ones who don’t.

Believe that everything happens for a reason.

If you get a chance take it ! If it changes your life let it !

Nobody said life would be easy. They just promised it would be worth it.

(இணையத்தில் படித்தது)

புகைப்படக்கலை

வரலாற்றாசிரியர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல புகைப்படக்கலைஞர்கள். எழுத்தில் அவர்கள் பதிந்து வைப்பதைக் காட்சியாகப் பதிகிறோம் நாங்கள்.  திருமணத்துக்கு குடும்ப நண்பர் ஒருவர் பரிசளித்த கேமராவே ஒளிப்படக்கலையில் ஆர்வம் ஏற்படத் தூண்டுதலாக இருந்தது. அதன் பிறகு நான் கேமராவைத் தொடாமலிருந்த நாளே கிடையாது.  போட்டோகிராபி மட்டுமே என் ஒரே பொழுதுபோக்கென அமைத்துக் கொண்டதில் அது இப்போது என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே ஆகி விட்டது.  இனி அது இல்லாத வாழ்வை நினைத்தும் பார்க்க முடியாது. என் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. சோர்வடையும் தருணங்களில் உற்சாகம் தருகிறது. அதே நேரம் வேகமாக இயங்கும் உலகில் சற்றே என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் போட்டோகிராபிதான் உதவுகிறது. என் தீவிரமான ஈடுபாட்டைப் பார்த்த கணவர், DSLR வாங்கிக் கொடுத்ததுடன் மற்ற நண்பர்களுடன் போட்டோ வாக், போட்டோ டூர் சென்று வரவும் ஊக்கம் தருகிறார். ஃப்ளிக்கர் தளமும், அதன் மூலமாகக் கிடைத்த நண்பர்களின் ஆலோசனைகளும் என் திறனை வளர்க்கவும் செதுக்கவும் உதவி வருகின்றன. பூக்கள், போர்ட்ரெயிட், லேண்ட்ஸ்கேப் ஆகியவற்றைப் படமாக்குவதில் விருப்பம் அதிகம். என்றாலும் என் ஆர்வத்துக்கு வானமே எல்லை.

vanitha 1

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

Image courtesy:

http://themediaray.com

http://www.officetime.net

http://www.popsugar.com

http://www.photobotos.com