‘மூன்று விஷயங்களை நெடுநாட்களுக்கு மறைக்க முடியாது… சூரியன், நிலா மற்றும் உண்மை’. – புத்தர்
‘ஒரு மரத்தை வெட்டிச் சாய்க்க எனக்கு 6 மணி நேரம் போதுமானது. அதில் முதல் நான்கு மணி நேரத்தை கோடரியை கூர் தீட்டுவதற்காக செலவழிப்பேன்’. – ஆபிரஹாம் லிங்கன்
‘கல்வியின் வேர்கள் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், அது தரும் பழம் இனிப்பு நிறைந்தது’. –அரிஸ்டாடில்
‘எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது’. – மகாத்மா காந்தி
‘எதையாவது சொல்ல வேண்டும் என்றால் அதை ஆணிடம் சொல்லுங்கள். எதாவது காரியம் முடிய வேண்டும் என்றால் அதைப் பெண்ணிடம் சொல்லுங்கள்’ –மார்கரெட் தாட்சர்
‘அமைதி ஒரு புன்னகையில்தான் தொடங்குகிறது’ –அன்னை தெரஸா
‘அறிவு உங்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கும்; ஆனால், குணம்தான் மரியாதையைப் பெற்றுத் தரும்’ –புரூஸ் லீ
‘காதல் என்பது வைரஸ் மாதிரி. அது யாருக்கும் எந்த நேரத்திலும் தொற்றிக் கொள்ளும்’. –மாயா ஏஞ்சலோ
‘மனிதர்கள் அவர்களுடைய கடமையை மறக்கப் பழகியிருக்கிறார்கள்; ஆனால், உரிமைகளை நினைவில் வைத்திருக்கிறார்கள்’ –இந்திராகாந்தி
‘எது எனக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கிறதோ, அதுதான் என்னை அழிக்கவும் செய்கிறது’. –ஏஞ்சலினா ஜோலி
Image Courtesy:
http://d13s5ta1qg2cax.cloudfront.net
http://meetmissyblog.files.wordpress.com
http://www.betterstorytelling.net/
http://sentimentalistlindley.blogspot.in
பொன்மொழிகள் மேலும்…