நிர்பயா – ஓவியக் கண்காட்சி

ஓவியர் என்.ஸ்வர்ணலதாவின் ஓவியக் கண்காட்சி இப்போது சென்னையில்… அத்தனையும் பெண்கள் அனுபவிக்கும் வலி, பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை தொடர்பானவை!

நாள்: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 வரை.

நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

இடம்: 48, இரண்டாவது பிரதான சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600 028.

தொடர்புக்கு: 9003168626 மற்றும் 9382344123.

art176

மவுலிவாக்கம் II

ஓர் ஏரியின் தேடல்

IMG_8124

தண்ணீரால் தளும்பி வழியும்

தாகம் தணிக்கும் ஜீவன் நான்.

தாவர உரோமங்கள் என் தசைகளில்…

 

வானம் தருகிற மழை முத்தம் என் மடியில்.

என்னுள்

சிலிர்த்துயிர்க்கும் ஜீவராசிகள்!

 

தலைப்பிரட்டை, மீன், தவளை

நண்டு, நத்தை, பாம்பு

அட்டை, ஆமை, உள்ளான் என

அத்தனை ஜீவராசிகளும்

அடைக்கலம் என் கர்ப்பத்தில்!

 

புல், பூண்டு, பச்சிலை

ஆம்பல்,கருங்குவளை, தாமரை

நான் அணியும் இயற்கை ஆபரணங்கள் !

 

தினமும் வானம் முகம் பார்க்கும்

வசீகரக் கண்ணாடியாய் என் தேகம்!

 

பறவை, எலி, அணில், முள்ளம் பன்றி, மூஞ்சூறு

சிக்குளுக்காம் மூட்டிச் சேட்டை செய்யும்

என்  மேனியெல்லாம்!

 

ஆல், அரசு, வேங்கை,

தென்னை, தேக்கு, கோங்கிலவம்…

நிழல்களின் ராஜ்ஜியம் என் கரையெல்லாம்!

 

உழவராய், மள்ளராய், வேடராய்

மாடுகள் குளிப்பாட்டிய மனுசனே…..

உயிர்களுக்கெல்லாம் உறைவிடமாகி

பயிர்ப் பச்சிலுக்குப் பாசனமாக

நீ

எப்போது திறந்தாலும்

என் மதகிலிருந்து மதநீர் பாய்ந்ததே!…..

இன்றென்ன ஆச்சு?…

ஏனிந்தப் பேராசை?

 

மாடிகள் இடிந்து மரண ஓலம்

சுவர்க் கோழிகள் ரீங்கரித்த என் செவியோரம்

உயிர்பிழியும்

கடவுளின் தற்கொலை ஓசைகள்!

 

ஜீரணிக்க முடியவில்லை…

செவிகிழியும் மரண கீதங்கள்!

 

அடைந்துபோன என் ஆதி மதகுகளில்

அணை உடைத்துப் போகும்

கருணையைத் தேடி என் கண்ணீர் வெள்ளம்!

 

மனிதர்களை நம்பமுடியவில்லை…

கடவுளை காணவில்லை….

 

– நா.வே.அருள்

 

மயிலை மாமி உணவுத் திருவிழா!

Image

சென்னை சைவ உணவுப் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்! கமகமக்கும் நம் பாரம்பரிய சைவ உணவுகளின் மிக நீண்ட அணிவகுப்போடு நடக்க இருக்கிறது ‘மயிலை மாமி உணவுத் திருவிழா’. உணவுத் திருவிழாவில் ருசி கூட்டுவதற்காகவே கும்பகோணத்திலிருந்து பிரேமா மாமி வந்திருக்கிறார். மே 23ம் தேதியிலிருந்து ஜூன் 1ம் தேதி வரை நடக்க இருக்கிறது இந்த உணவுத் திருவிழா! 

இடம்: ஆலிவ்ஸ், மல்டி குஷன் ரெஸ்டாரன்ட் – டெக்கான் பிளாஸா, 36, ராயப்பேட்டை ஹை ரோடு, ராயப்பேட்டை, சென்னை-600 014.

வார இறுதி நாட்களில் (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) மதிய விருந்தும், இரவு விருந்தும் உண்டு. மற்ற நாட்களில் இரவு விருந்து மட்டும்..! 

Image

மயிலை மாமி உணவுத் திருவிழாவில் 23ம் தேதி இடம் பெறும் உணவுகளின் பட்டியல்…

WELCOME DRINK

PAANAKAM

NEER MOORE

STARTERS

MYSORE BONDA

KEERAI VADAI

SOUP

MURUNGAI KEERAI CHARU    

ACCOMPLIMENTS

KOSUMBARY

VAZHA THANDU THAIR PACHADI

SWEET PACHADI

4 TYPES PICKLES

TENGA THOYIAL

PEETHANGAI  THOYIAL

EALLU THOYIAL

GATTI THAIR

VARIETY OF SOUTH VADAMS / MOORE MILAGAI / 4 TYPES PODI /2 TYPE

MAIN COURSE

1. CHINNA VENGAYA SAMBAR

2. THAKKALI INGI RASAM

3. MANA THAKKALI VATHA KOZHAMBU

4.VENDAKAI MOORE KOZHAMBU

5.SEPANKAZHANGU VARUVAL

6.PODALNGAI PAL KOOTU

7.VAZHAKAI PULI KOOTU

8.BEANS USILI CURRY

9.CABBAGE PATTANI CURRY

10.ENNAI KATHRIKAI ARACHA CURRY

11.PULIODHARAI

12.KOTHAMALLI RICE

13.PLAIN RICE

14. TENGAI  SADAM

15.PLAIN SEVAI

16.KEERAI MASIYAL

17. 2 STARTERS

18 .STARTER

19.VAZHAKAI PODI MAS

20.GATTI PARUPPU

21.URLAI KARA KARI

DESSERTS

AKARA VADASAL

GOTHUMAI HALWA

POLI

MINI JANGIRI

MADHULA PAZHAM KESARI

MINI LADDU

RAWA LADDU

எல்லாமே ரூ.499/- (வரிகள் சேர்க்காமல்).

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள…

98849 32022, 044-66773333.