ஒவ்வொரு தந்தைக்குள்ளும்
ஒரு மகன்
ஒவ்வொரு மகனுக்குள்ளும்
ஒரு தந்தை
தந்தையல்ல மகன்
தந்தையினால் மகன்
அதே மண்தான்
தாவரம் வேறு
அதே கடல்தான்
அலை வேறு
அதே சூரியன்தான்
கிரணம் வேறு
அதே காற்றுதான்
மூச்சு வேறு
அதே ஆகாயம்தான்
அண்டம் வேறு
அணுவுக்குள் திணிந்த உயிர்ச்சங்கிலியை
உடல் மாற்றி
மூலவித்தின் முடிச்சவிழ்க்கும்
முன்மனிதன்
தாயின் கருப்பைக்கு உயிர்தானம் தந்து
தந்தையாகிறான்
தாயினும் சிறந்து.
- நா.வே.அருள்
Image courtesy: http://ngm.nationalgeographic.com