என் எண்ணங்கள் – 6

செய்திக்குப் பின்னே…

bottle

ப்போ குடியின் மகத்துவம் பற்றி பல செய்திகள் வந்துச்சே யாரும் பார்க்கலையா! அதிகமா யாரும் அதைப் பேசின மாதிரியே தெரியலையே! மிக்ஸி, கிரைண்டர்லாம் இலவசமா குடுக்கறாங்கன்னு தெரிஞ்சா பறந்தடிச்சுக்கிட்டு போற மக்கள்தான் இப்படி குழந்தை மதுவைக் குடிக்கறதையும், ஸ்கூல் படிக்கற பெண் குடிச்சுட்டு உளர்றதையும் பார்த்தும் பார்க்காம போகுது. ஆனாலும் நமக்கு அரசாங்கத்தின் மேல கோவம்லாம் இல்லை. அரசுக்குத்தான் மக்கள் மேல அக்கறை இல்லைன்னு நல்லா தெரியுதே.

மகன் அந்தப் பக்கம் போகும் போதெல்லாம் மனசுக்குள்ள ‘இது என்ன… எப்படி இருக்கும்?’னு ஒரு நொடி அவன் மனசுல தோணாம இருக்குமா? தன் பெண் பயந்து பயந்து அந்தக் கடையை தாண்டி ஸ்கூல் போறா, வர்றாளேன்னு நினைச்சு வழியில இருக்குற டாஸ்மாக் கடையைக் கூட அடிச்சு, நொறுக்கி காலி பண்ணத் தோணாத கோழை மக்கள்! விசாரணைக்கு அழைச்சுட்டு போயி ஒரு மனுஷன அடிச்சுக் கொன்னுருக்காங்க. அதை திசை திருப்ப ‘அந்தப் பொண்ணுக்கு 11 பேர் கூட தொடர்பு’னு மூணாந்தர செய்தி. அவ்வளவுதான்… எல்லாரும் அந்தப் பெண்ணையே குற்றவாளியா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. யோசிக்க திராணி இல்லாத மக்கள்!

Tasmac sorkam

பொருத்தமில்லாத கல்யாணம் பண்ணி வச்ச பெற்றோரைத்தான் குற்றம் சொல்லணும். ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகிடுச்சுன்னா, திருமண வாழ்க்கை பிடிக்குது பிடிக்கலைனு முடிவு பண்றதோ, சேர்ந்து வாழறது வாழாததோ அந்தப் பெண்ணின் விருப்பம். அது அவர்களின் குடும்ப விஷயம். அங்கே பிரச்னை ஆனது அடித்துக் கொன்றதால் மட்டுமே. அதைப் பத்திப் பேசாமல் பெண்ணின் நடத்தையில் ஒரு வழக்கையே திசை திருப்பினது மக்களின் சிறுபுத்தி மீது அரசு வைத்த நம்பிக்கை. நிறையப் படிக்கும் மக்களின் சதவிகிதம் ஏற ஏற சாதி பேதம் குறையும்னு பார்த்தா, அது என்னவோ ராக்கெட் வேகத்துல போகுது. இதுக்கு முக்கியக் காரணம் ஓட்டுக்காக அரசியல்வாதிகள் ஒவ்வொரு சாதி சங்கத் தலைவர்களையும் தூண்டி விட, அவங்க தங்களோட சமுதாயத்தைத் தூண்டி விட்டுட்டே இருக்கறது. அடுத்த சாதிக்காரங்க துணை இல்லாம யாரும் வாழ முடியுமா? ‘அடுத்த சாதிக்காரன் கைபட்ட அரிசி சாப்பிட மாட்டேன்’னு முடிவெடுத்தா எல்லாரும் பட்டினியாகத்தான் கிடக்கணும். அப்படியாச்சும் முடிவெடுத்து போய்ச் சேர்ந்தா, நாட்டுக்கு நலம். சாதிக் கட்சிகளும் சங்கங்களுமே நம் நாட்டின் மிகப் பெரிய வியாதி. என்று குணமாகுமோ இந்த வியாதி?!

மருந்து சாப்பிட யோசிக்கும் மக்கள்! எல்லா தவறுகளும் மக்களிடம்தானே தவிர மற்ற யாரிடமும் இல்லை.

***

Black Motorcycle Helmet Isolated

ஹெல்மெட் போடாதவங்களை பிடிக்கணும்னா போலீஸால வேற வேலையே பாக்க முடியாது. அதை மட்டுமே சோதனை போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதான்!
என்னவோ ‘ஹைடு அண்ட் சீக்’ விளையாட்டை விளையாடற மாதிரி  அங்கங்க நின்னு நின்னு ஹெல்மெட் மாட்டிகிட்டு இருக்காங்க பொது மக்கள். பாதி பேர் தலையில ஹெல்மெட்ட காணோம். பாதி பேர் ஹெல்மெட் வண்டியோட டேங்க் மேல இருக்கு!

எதுவுமே தனக்கா தோணினாதான் முடியும்.

***

தூக்கம் வரும்போது மட்டும் இல்ல… மனசு கஷ்டமா இருந்தாலும் டக்குனு தூங்கிடணும். மனசால அப்போ நம்மள ஒண்ணும் பண்ண முடியாது.

***

smart city

‘ஸ்மார்ட் சிட்டி, ஸ்மார்ட் சிட்டி’னு மோடி கவர்ன்மென்ட் சொல்றாங்களே… என்னவோ ஏதோன்னு ரொம்ப ஆசைப்பட்டுட்டு இருந்தேன். நேத்துதான் தெரிஞ்சுது இதுவும் டம்மின்னு!

பாதாள சாக்கடை, குடிநீர் வசதி, ரோடு வசதின்னு எல்லாம் இருக்கணுமாம்.

அப்போ இதெல்லாம் பேசிக் நீட் இல்லையா? எல்லா ஊர்லயும் இருக்க வேண்டியதை ‘ஸ்மார்ட் சிட்டி’னு சொல்லி அங்கே மட்டும் வைக்க வேண்டிய திட்டங்களா?

நான் என்னவோ, ப்ரீ wifi , சிட்டி முழுதும் ஹை டெக் ட்ராவல் சிஸ்டம், ஷாப்பிங் மால்ஸ் AIMS போல நல்ல மருத்துவ வசதி, பார்க் இப்டில்லாம் செய்வாங்க போலன்னு நெனச்சுட்டு இருந்தேன்!

***

கோவை மாணவி விஷயத்துல நிறைய பேர் பெற்றோரைத்தான் குறை சொல்லி இருக்காங்க.

என்ன பண்றது? அதுங்களுக்கு லட்சம் லட்சமா கொட்டிக் கொடுத்து ஸ்கூல் அனுப்பி, விக்கற விலைவாசில வேண்டியதை செய்யவே ரெண்டு பேரும் சம்பாதிக்க வேண்டியிருக்கு. நன்னடத்தையை போதிக்க வேண்டிய பள்ளிகள் காசு காசு பிடுங்கறதுலதான் குறியாக இருக்கு. அரசுக்கும் எப்டியாச்சும் காசு வரணும்கிற எண்ணம்.  முடிஞ்ச வரை சினிமாவும் பிள்ளைங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கெட்டதையும் சொல்லிக் கொடுக்குது.

ஆக மொத்தம் இப்போ உள்ள பிள்ளைங்கதான் பாவம்… ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லதை சொல்லி வளர்ந்துக்க வேண்டியதான்!

– ஷர்மிளா ராஜசேகர் 

Sharmila Rajasekar2

வாசிக்க…

என் எண்ணங்கள் – 1

என் எண்ணங்கள் – 2

என் எண்ணங்கள் – 3

என் எண்ணங்கள் – 4

என் எண்ணங்கள் – 5

Image Courtesy:

http://i.imgur.com

http://www.arumai.com

http://www.cannibalcycle.com

http://studentcompetitions-general.s3.amazonaws.com

குடி குடிக்கும் குடி!

liquor

வர்கள் 2 பேருக்கும் 40 வயது. இருவரும் திறமைசாலிகள். அன்பானவர்கள். இன்றும் குடும்பத்தைக் காக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்…சில இழப்புகளோடு.

அதில் ஒருவர் சிறுவயதில் துறுதுறுவென்றிருப்பார். நல்ல அன்பான அம்மா, கேட்ட போதெல்லாம் ஏன் எதற்கு என்று கேட்காமல் பணத்தை அள்ளித்தரும் அப்பா. இவரையும் சும்மா சொல்வதற்கில்லை. பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம். அது மட்டுமின்றி ஸ்போர்ட்ஸ், என்எஸ்எஸ் என்று கலக்கியவர். அம்மாவுக்கு காய்கறி நறுக்கித்தருவதோடு வீட்டு கரண்ட்  பில், போன் பில் என அப்பா சொல்லும் வேலைகளையும் செவ்வனே செய்வார். ஆனால் பணமும் சில நண்பர்களின் நட்பும் அவரை குடியின் பக்கம் திருப்பியது.

கல்யாணம், குழந்தை, சொந்த சம்பாத்தியம் என்று ஆன பிறகு குடி மேலும் பெருகியது. ஒரு கட்டத்தில் மனைவி கண்டு கொள்ளாமல் போக, இவர் குடித்தது போய், இவரை குடி குடிக்க ஆரம்பித்தது. வேலைக்குப் போவதில்லை. காலை எழுந்தவுடன் கடை. இரவு தூங்கும் போது கடை என டாஸ்மாக்கே கதியாகக் கிடந்தார். மனைவி கொஞ்சம் உஷார் என்பதால் அம்மாவிடம் எதாவது சொல்லி பணம் வாங்கி கொள்வார்.குடித்த பின் வேறென்ன வேலை? அக்கம்பக்கத்தினருடன் எந்நேரமும எதாவது சண்டை. அதில் ஒருநாள் பக்கத்து வீட்டாரின் பேச்சு அந்த அம்மா மனதை தாக்க ஐந்தே நிமிடங்களில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனார் அந்த அம்மா. அவர் அம்மாவின் மேல் அதீத அன்பு வைத்திருந்ததால் துக்கத்தில் மேலும் குடி அதிகமாகியது.

அவர் வாங்கிய நகைகள் இந்தி படிக்க (அடகுக் கடை) ஆரம்பித்தன. வியாதிகள் வரிசை கட்டின. ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் போக பித்தப்பையில் கற்கள் கணையத்தை தாக்கும் அபாயத்தில் இருந்ததால் உடனடி ஆபரேஷன் அப்பாவின் செலவில். இன்று ஒருவழியாக  குடியின் பிடியிலிருந்து மீண்டாலும் மழை நின்ற பின் தொடரும் தூரல் போல, அதன் பாதிப்புகள் தொடர்கின்றன.

இனிமையாகக் கழிந்திருக்க வேண்டிய வாழ்க்கை மாறிப் போனது. குடியால் வலுவிழந்து போனது உடல், அன்பு அம்மாவை இழந்த துக்கத்தோடும் குற்றவுணர்வோடும் போன பெயரை மீட்க வேண்டும், பழையபடி சம்பாதிக்க வேண்டும் போன்ற கவலைகளோடும் ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

liquor 1

ன்னொருவர் படிக்காதவர். கடுமையான தொழில் அவருடையது. குடியால் ஒரு கிட்னி பாழாகி எடுக்கப்பட்டுவிட்டது. திருந்தியாச்சு. ஆனால்… இந்த உடம்பை வைத்துக்கொண்டு இனி அவ்வளவு கடுமையான வேலைகள் செய்ய முடியமா என்பது தெரியவில்லை. ஒரு பெண் குழந்தையை வைத்துக்கொண்டு இன்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். சின்னச் சின்ன வேலைகள் செய்து கொண்டு எந்நேரமும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தோடும் ஓடிக்கொண்டிருக்கிறது அவரது வாழ்க்கை.

இப்படி ஒன்று இரண்டு அல்ல… எத்தனையோ பேர்! சமீபத்தில் தரமணியில் அந்த ஒரு வயது குழந்தைக்கு ஏற்பட்ட இழப்பு…  ஏழையாக இருந்தாலும் அன்பான அம்மா, அப்பா என்றிருந்த ஒரு பாவமும் செய்திராத அந்தக்  குழந்தை  யாரோ ஒருவரின் குடியால் இன்று அனாதையாக…

என்றோ ஒருநாள் எங்களிடம் தீபாவளி அன்று பட்டாசுக்காக கையேந்திய குழந்தையின் முகம் ஞாபகம் வருகிறது. தந்தையின் குடிப் பழக்கத்தால் எதை எதையோ இழந்த குழந்தை. அன்றைக்கு அக்குழந்தையின் தேவையை என் அப்பா நிறைவேற்றினார். அதற்கு பிறகு?

இது போல எத்தனை எத்தனை குழந்தைகள் கையேந்தும் நிலையில்… பல குடும்பங்களின் வறுமைக்கு மட்டுமல்ல… தினமும் செய்திகளில் வரும் பெரும்பாலான கொலைகள் தற்கொலைகள்… (அதுவும் குடும்பம் குடும்பமாக) எல்லாம் குடியால்தான்.

குடியினால் மதி மயங்கி மச்சினியிடம் தவறாக நடக்க முயன்று கொலையுண்ட அந்த மனிதனை மறக்க முடியுமா? சின்ன வயதிலே அவன் ஆயுள் முடிந்தது அவன் தவறுக்குக் கிடைத்த தண்டனை எனலாம். ஆனால், சூழ்நிலைக்கைதி என்ற வார்த்தைக்கு நிஜ உதாரணமாக இன்று அந்தப் பெண் கொலைக் குற்றவாளியாக ஜெயிலில்… அவள் இளமையும் வாழ்ககையும் தொலைந்தன.

சபீத்தில் குடிகாரக் கணவன் தந்த வறுமை தாங்காமல் தாயே குழந்தையைக் கொன்ற கொடுமையைப் படித்திருப்பீர்கள்… தீபாவளிக்கு தாய் வீடு போக ஆசைப்பட்ட மனைவியைக் கொன்ற கொடூர கணவன் என இன்னும் இன்னும் கொலை, தற்கொலை, விபத்து, நோய் என எத்தனை எத்தனை உயிரிழப்புகளோ… விவாகரத்துகளோ… டாஸ்மாக்கில் நிற்கும் இளைஞர்களை பார்க்கும் போது எத்தனை எத்தனை தாய்மார்களின் வயிற்றெரிச்சலோ என் கண்முன் தீயாய்… எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு என்பார்கள். இந்த பிரச்னைக்கு என்றோ?

ஸ்ரீதேவி மோகன்

liquor 3