பட்டுப்புடவை பாலீஷ்… பளிச் பணம்!

Image

ட்டுக்கும் பெண்களுக்குமான பந்தம், தலைமுறைகள் தாண்டி, அன்று முதல் இன்று வரை தொடர்கிற பிணைப்பு! பட்டு விஷயத்தில் எல்லா பெண்களுக்கும் ஏதோ ஒரு சென்டிமென்ட் நிச்சயம் இருக்கும்.

முதல் பட்டுப்புடவை, கூரைப்புடவை, சீமந்தப் புடவை, ப்ரியமான யாரோ பரிசளித்த புடவை… இப்படி ஒவ்வொருவரின் ஒவ்வொரு பட்டுப்புடவையின் பின்னணியிலும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். பழசானால் தூக்கிப் போடுகிற மற்ற புடவைகளைப் போல பட்டை அத்தனை சுலபத்தில் ஓரங்கட்ட யாருக்கும் மனசு வராது. உடுத்தவும் முடியாமல், ஒதுக்கவும் முடியாமல் வெறும் நினைவுச் சின்னங்களாக மூலையில் உறங்கும் அத்தகைய சேலைகளை என்னதான் செய்வது?

‘‘பாலீஷ் போட்டால் புதுப்புடவை மாதிரிப் பளபளக்கும்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த கனகவல்லி. 12 வருடங்களுக்கும் மேலாக பட்டுப்புடவை பாலீஷ் பிசினஸில் கொடிகட்டிப் பறப்பவர்!

‘‘நான் பிசினஸ் ஆரம்பிச்ச புதுசுல, பட்டுப்புடவைக்கு பாலீஷ் போட்டுப் புதுசாக்கலாம், தொய்வடைஞ்ச புடவைகளை சரியாக்கலாம்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.

பட்டாச்சே… வீணாக்கிடுவாங்களோ, தூக்கிட்டு ஓடிருவாங்களோன்னு பயந்து புடவையைக் கொடுக்க மாட்டாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டுப் பேசிப் புரிய வச்சுதான், என் பிசினஸை வளர்த்தேன். இன்னிக்கு வெளியூர்லருந்தெல்லாம் பாலீஷுக்கு புடவைகளை ஆர்டர் எடுக்கற அளவுக்கு இந்த பிசினஸ் என்னை பிசியா வச்சிருக்கு” என்கிற கனகவல்லி, பட்டுப்புடவைகளுக்கு பாலீஷ் போடுவது மட்டுமின்றி, நைந்து போன பார்டர்களை மாற்றித் தருவது, கறைகளை நீக்குவது, கிழிந்த பகுதிகளை சரி செய்வது போன்றவற்றுடன்,  காட்டன் புடவைகளுக்கு கஞ்சி போட்டு, ரோல் பிரஸ்ஸும் செய்து தருகிறார்.

****

Image

இது இப்படித்தான்!

மூலப் பொருள்கள்

இரும்புக் கம்பிகள் 70 இன்ச் நீளத்தில் 6, 72 இன்ச் அகலத்தில் 6, புடவைக்குள் செருகும் மெல்லிய கம்பிகள் 40, புடவை மடிக்கும் கம்பி 3, ரோலர் கட்டைகள் வட்ட வடிவில் 5, சதுரத்தில் 5, பாலீஷ் பசை, காட்டன் நூல், வெள்ளை அல்லது பிளெயின் புடவை, கிளீனிங் லிக்விட்.

எங்கே வாங்கலாம்?

கம்பிகளை வெல்டிங் கடைகளிலும், கட்டைகளை தச்சர்களிடம் ஆர்டர் கொடுத்தும், மற்ற பொருள்களை பட்டு நெசவுக்குத் தேவையான பொருள்கள் விற்பனை செய்கிற கடைகளிலும் வாங்கலாம். காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம் பகுதிகளில் சுலபமாகக் கிடைக்கும். ஏற்கனவே பட்டு பாலீஷ் துறையில் உள்ளவர்களிடம் சொல்லி வைத்தும், மொத்த விலையில் வாங்கலாம்.

முதலீடு

கம்பிகள் மற்றும் ரோலர்களுக்கு சேர்த்து 25 ஆயிரம். பாலீஷ் பசை, ஒரு கிலோ 100 ரூபாய். ஒரு புடவைக்கு 20 கிராம் தேவை. கிளினீங் லிக்விட் 350 ரூபாய்.

இட வசதி?

10க்கு 10 அளவுள்ள அறை போதும். அது தவிர, பாலீஷ் செய்த புடவையை உலர்த்தும் அளவுக்கு மொட்டை மாடியோ, பால்கனியோ அவசியம்.

எந்தெந்தப் புடவைகளுக்கு பாலீஷ் செய்யலாம்?

பட்டு, மைசூர் சில்க், டிசைனர் சேலைகளுக்கு பாலீஷ் செய்து, புதுப் பொலிவு பெறச் செய்யலாம். காட்டன் சேலைகளாக இருந்தால், கஞ்சி போட்டு, ரோல் பிரஸ் செய்து கொடுக்கலாம். ரோல் பிரஸ் செய்வதன் மூலம், காட்டன் சேலைகளில், இஸ்திரி செய்ததைவிட மூன்று மடங்கு மெருகேறும். சிறிய சுருக்கம் கூட இருக்காது. 25 வருடங்கள் ஆன பட்டுப்புடவைகளுக்குக் கூட பாலீஷ் போட்டு, புதிது போல மாற்றலாம். புடவை நைந்து போகாமல், நல்ல நிலையில் இருக்க வேண்டியது மட்டும் அவசியம்.

மாத வருமானம்?

ஒரு பட்டுப்புடவையை உலர் சலவை (ட்ரை வாஷ்) செய்து, பாலீஷ் போட்டுக் கொடுக்க புடவையைப் பொறுத்து 150 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை வாங்கலாம். சிலர் புடவையைத் தண்ணீரில் நனைத்துத் துவைத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்பதுண்டு. அதற்குக் கூடுதலாக 50 ரூபாய். நமக்கு ஒரு புடவைக்கான செலவு வெறும் 30 ரூபாய். காட்டன் சேலைக்கு கஞ்சி போட்டு, ரோல் பிரெஸ் செய்து கொடுக்க 35 ரூபாய் வாங்கலாம். நமக்கான அடக்க விலை 25 ரூபாய்.

ஒரு நாளைக்கு 10 புடவைகளுக்கு பாலீஷ் போட முடியும். அப்படிப் பார்த்தால் மாதம் 20 ஆயிரம் சம்பாதிக்கலாம்.

மார்க்கெட்டிங்?

பெண்கள் அதிகம் வேலை பார்க்கிற அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள், கல்லூரிகள் என எல்லா இடங்களிலும் நேரில் சென்று பேசி, ஆர்டர் பிடிக்கலாம். சேலையை வாங்கிச் செல்லவும், பாலீஷ் போட்ட பிறகு திரும்பக் கொண்டு சேர்க்கவும் ஒரு ஆளை வைத்திருப்பது நலம்.

பயிற்சி?

செயல்முறை விளக்கங்கள், மார்க்கெட்டிங் உத்திகள் என எல்லாவற்றுக்கும் சேர்த்து 3 நாள் பயிற்சிக்குக் கட்டணம் ரூ.5 ஆயிரம்.

****

புதுசுக்கும் போடலாம் பாலீஷ்!

Image

ழைய பட்டுப்புடவையை புதுசு போலாக்க பாலீஷ் செய்வது ஒரு பக்கமிருக்க, புத்தம் புதிய புடவைகளுக்கும் பாலீஷ் போடலாம் என்கிறார் இந்தத் துறையில் 45 வருட அனுபவமுள்ள, கும்பகோணத்தைச் சேர்ந்த சாந்தாராம்.

‘‘பட்டுப்புடவை வியாபாரம் பண்றவங்க, மொத்தமா பதினஞ்சு, இருபது புடவைகளைக் கொண்டு போவாங்க. வாடிக்கையாளர்களுக்குப் பிரிச்சுக் காட்டி, திரும்ப மடிச்சு வைக்கிறதுல, சில புடவைகள் அழுக்காகி, கசங்கிப் போகும். அந்த மாதிரிப் புடவைகளுக்கும் பாலீஷ் போடலாம். அதனால புடவையோட தரத்துக்கு எந்த பாதிப்பும் வராது. கூடுதல் பளபளப்புதான் கிடைக்கும்” என்கிறவர், பட்டுப் பராமரிப்புக்கான டிப்ஸ்களையும் சொல்கிறார். 

* பட்டுப்புடவையின் உடல் பகுதியை இஸ்திரி பண்ணக் கூடாது. ஜரிகைப் பகுதியை மட்டும்தான் செய்ய வேண்டும்.  

* பட்டுப்புடவையை தாராளமாகத் துவைக்கலாம். புடவை ஒரு கலரிலும், பார்டர் ஒரு கலரிலும் இருந்தால், முந்தானையையும், பார்டரையும் ஒரு கயிற்றால் கட்டி, தண்ணீரில் படாமல், உடல் பகுதியை மட்டும் பூந்திக்கொட்டை ஊற வைத்த தண்ணீரில் நனைத்துத் துவைக்கலாம். பிறகு அதைக் காய வைத்து, அடுத்து பார்டர், முந்தானைப் பகுதிகளை வேறு தண்ணீரில் தனியே துவைத்து உலர்த்த வேண்டும்.

* பட்டைத் துவைக்காமலோ, பாலீஷ் போடாமலோ அப்படியே உடுத்தினால், வியர்வை பட்டு, அதிலுள்ள உப்பு, ஜரிகைப் பகுதியை அரித்து விடும்.

– ஆர்.வைதேகி

படங்கள்: ஆர்.சி.எஸ்.

கனகவல்லி தொலைபேசி எண்: 9445283994.

Advertisements

One thought on “பட்டுப்புடவை பாலீஷ்… பளிச் பணம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s